CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

நம்முடைய கரிசனை எங்கே? வேதப்பகுதி: மத்தேயு 9:35-38

நம்முடைய கரிசனை எங்கே? வேதப்பகுதி: மத்தேயு 9:35-38

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது…. அவர்கள் மேல் மனதுருகி…. மத்தேயு 9:36

 

குடிசை நலத்திற்காக வேலை செய்யும் ஒரு பெரிய அதிகாரி தீ விபத்தின் போது ஒலிக்கும் எச்சரிக்கை மணியை தன்னுடைய அறையில் பொருத்திக் கொண்டார். குடிசைகளில் அடிக்கடி ஏன் தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று அவர் வியந்தார். ஆனால் அவர் வியப்போடு நின்றுவிடாமல் உண்மையான கரிசனையைக் காண்பித்தார். குடிசைகளில் தீ விபத்துக்கள் ஏற்படும் போது தீ விபத்தை தெரிவிக்கும் எச்சரிக்கை மணி ஒலிக்கும்.. உடனே அவர் என்ன நடந்தது என்பதைப் பார்ப்பதற்காக விரைந்து செல்வார்.

.

பசியிலும் வியாதியிலும் கொடூரமான அடக்கு முறையிலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களிடம் நாம் அப்படிப்பட்ட அக்கரையைக் காட்டுகிறோமா? இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் நரகத்தில் நித்தியத்தைக் கழிக்கவிருக்கும் திரளான மக்களைப்பற்றி என்ன? அவர்களுடைய  எதிர்காலத்தை பற்றி நாம் எந்த அளவிற்குக் கரிசனை கொண்டிருக்கறோம்? நம்முடைய இரட்சகருக்கு உந்துதலளித்த மனதுருக்கம் நம்மிடம் காணப்படுகின்றதா?(மத்தேயு 9:36)

.

அப்போஸ்தலனாகிய பவுல் அப்படிப்பட்ட கரிசனையைப் பெற்றிருந்தார். “எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது” என்று அவர் ரோமர் 9:1 ஆம் வசனத்தில் எழுதுகிறார். அவர்  தன்னுடைய சக யூதர்கள் இரட்சிக்ப்பட வேண்டுமென்று ஏங்கினார்.

.

நம்மால் கரிசனையுடன் ஜெபிக்க முடியுமா? நம் அனைவராலும் அதைச் செய்ய முடியும். நாம் அக்கரையுடன் மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமா? நாம் உண்மையுள்ள கண்கானிகளாயிருந்து சுவிசேஷப்பணிகளுக்காக கொடுக்க முடியும். கிறிஸ்தவ சாட்சியைப் பற்றி என்ன? நாம் ஒரு நண்பனுடன் நம்முடைய விசுவாசத்தைப் பற்றி பேச முடியும். நாம் கிறிஸ்தவரல்லாத ஒருவருக்கு ஒரு கடிதத்தை எழுத முடியும். ஒரு கைப்பிரதியை அளிக்க முடியும் அல்லது ஒரு புத்தகத்தை அனுப்ப முடியும்.

.

நமக்கு அக்கரையிருந்தால் நாம் கிறிஸ்துவை அறிந்து கொள்ளாதவர்களுக்கு ஏதாவது செய்வோம்.

.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பாராக!!!

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]