[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
நான் விசுவாசிக்கிறவர்!
“ நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.” (2 தீமோ 1.12)
ஒரு தேவ மனிதன், மிக அருமையான பாசமுள்ள குதிரையை வளர்த்து வந்தார். ஒவ்வொரு நாளும் காலையில், அந்த குதிரையிலே ஏறி, சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணும்படி, பல இடங்களுக்குப் போவார். எத்தனை மையில் தூரம், அந்த குதிரை பிரயாணம் பண்ணினாலும், சளைக்காமல், சோர்ந்துபோகாமல், தன் எஜமானுடைய ஊழியத்திலே, உதவி செய்து கொண்டு வந்தது. எஜமானும், அந்த குதிரையை மிகவும் நேசித்து வந்தார்.
சிலர், அந்த குதிரையைப் பார்த்து பொறாமை கொண்டார்கள். தங்களுக்குள் சதி செய்து, ஒரு இரவில் அந்த குதிரையை, போதகரிடமிருந்து திருடிக்கொண்டு போய், பாழும் குழிக்குள் தள்ளினார்கள். ஆனால் கர்த்தருடைய கிருபையால், அதனுடைய கால்கள் முறியவுமில்லை, சாகவுமில்லை. ஆகவே, விரோதிகள் உயிரோடு புதைத்துவிட வேண்டுமென்று, மண்ணையும் , குப்பை கூளங்களையும் அந்தக் குழிக்குள் போட்டார்கள்.
ஆனால் குதிரையோ, மண்ணை உதறிவிட்டு, “நான் வாழ்வேன்”. என் எஜமானுக்கு உதவியாயிருப்பேன். அவருக்கு பயன்படுவேன்” என்று உறுதியாய் நின்றது. அவர்கள் நிறைய மண்ணை குவிக்க, குவிக்க அவற்றின் மேலே ஏறி, ஒரே தாவாக தாவி, வெளியே வந்துவிட்டது. அந்த எதிரிகளையெல்லாம், தன் பின்னங்காலால் உதைத்து, கீழே விழச் செய்து, “நான் எஜமானுக்கு பயனுள்ளதாயிருப்பேன்” என்று சொல்லி, அவருடைய வீட்டுக்கு ஓடி வந்துவிட்டது.
கர்த்தர் நம்முடைய எஜமானாயிருக்கிறார். இந்த அறுவடையின் காலத்திலே, நீங்கள் கர்த்தருக்கு தேவை. கர்த்தருடைய ஊழியத்துக்குத் தேவை. நீங்கள் சோர்ந்து போகாமல், கர்த்தருக்கென்று நிற்பீர்களென்றால், ஆவியின் வரங்களையும், வல்லமையையும் உங்களுக்குத் தந்தருளுவார். நீங்கள் எழுந்து பிரகாசிப்பீர்கள்.
கிறிஸ்து உங்கள் ஜீவனானவர். அவர் உங்களுக்காக, தன்னுடைய உயிரைக் கொடுத்து, உங்களுக்குள் பரிசுத்த ஆவியாகிய, ஜீவனை வைத்திருக்கிறார். உங்களை கர்த்தருடைய கரத்திலிருந்து, யாரும் பறித்துக்கொள்ள முடியாது. “நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.” (ஏசா 62.3) கர்த்தருக்குள் நீங்கள் பெலசாலியாயிருக்கிறீர்கள். அவர் உங்களுக்காக யுத்தம் செய்கிறவர். உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிறவர். ஆகவே, தோல்வியைப் பற்றி எண்ண வேண்டியதில்லை.
“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” (யோசு 1.5) நீங்கள் உயிரோடிருக்கிற நாளெல்லாம், எந்த தீய மனுஷனும், எந்த மந்திரவாதியும், எந்த பில்லி சூனியமும், உங்களை மேற்கொள்வதேயில்லை. உங்களுடைய ஓட்டம், நிச்சயமாக வெற்றியோடு முடியும். ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் உங்களைத் தொடரும். நீங்கள் நிச்சயமாகவே, கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பீர்கள்.
நினைவிற்கு – “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான். நான் அவன் தேவனாயிருப்பேன். அவன் என் குமாரனாயிருப்பான். (வெளி 21.7)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]