CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

நாய்கள் பேசினால்

நாய்கள் பேசினால்

When Dog Speaks நாய்கள் பேசினால்

ளை பற்றி வேதம் சொல்லும் முதல் வசனத்தைப் பாருங்கள்!

நீங்கள் எனக்கு பரிசுத்த மனுஷராயிருக்கக் கடவர்கள். வெளியிலே பீறுண்ட மாம்சத்தை புசிக்காமல், அதை நாய்களுக்கு போட்டு விடுங்கள்.

(யாத்:22:31) ஆண்டவர் சொன்ன வார்த்தை இது. செத்ததை நீங்கள் திங்க வேண்டாம். எங்களுக்குப் போடுங்கள் என்று கர்த்தர் சொன்னார். ஆனால் நீங்களோ பீறுண்ட ஆடு, மாடு, கோழி எதையும் விட்டு வைப்பதில்லை. அடித்து, பொரித்து, சமைத்து தின்று ஏப்பம் விடுகிறீர்கள். நெருங்குண்டு செத்ததற்கு நீங்கள் விலகி இருக்க வேண்டும் என்று பவுல் சொல்லியிருக்கிறார். (அப்:15 :28) அதையும் மீறி கொன்றால் பாவம் தீரும் என வேதாந்தம் பேசி வேதத்தை மீறுகிறீர்கள். இயேசு கூட தான் சொன்னாரு. பரிசுத்தமானதை நாய்களுக்கு கொடாதிருங்கள் என்று (மத்:7:6) பரிசுத்தமானது எங்களுக்கு வேண்டாம். நீங்களே தின்னுங்கள். ஆனால் தானாய் செத்தது பீருண்டது, கெட்டுப்போனது இப்படி எதையாகிலும் எனக்கு கொடுக்கலாமே. சதையை தின்று விட்டு வெறும் எலும்பைத் தானே போடுகிறீர்கள். கேட்டால் நாய் எலும்பு தான் கடிக்கும் என்கிறீர்கள்.

Dog 6சரி நான் தெரியாமத்தான் கேட்கிறேன், எங்களுக்கு நல்ல நல்ல பேரெல்லாம் இருக்கும் போது தெரு நாய், சொறி நாய், கடி நாய் என்று அழைகிறீர்களே ஏன்? யாராகிலும் ரொம்ப பேசினா நாய் மாதிரி கத்தாதேன்னு என்று சொல்றீங்க. சூரியனை பார்த்து நாய் குலைத்தா எனக்கென்ன என்கிறீர்கள். நாங்கள் மட்டுமா இப்படி. இல்ல இல்ல நீங்களும் எங்களைப் போலத்தான் இருக்கிறீர்கள் என வேதம் சொல்கிறது. அவர்கள் சாயங்காலத்திலே திரும்பி வந்து, நாய்களை போல ஊளையிட்டு ஊரைச் சுற்றி திரிகிறார்கள்.(சங்கீதம்:59:6,14) எங்களுக்கு ஒரு வேலையும் இல்ல, உட்கார நேரமும் இல்ல, அனால் எங்களை விட நீங்கள் சுற்றுவது தான் எங்களுக்குகே ஆச்சரியமாக இருக்கிறது. காலையிலே வேதத்தை எடுத்து கொண்டு வெளியே கிளம்பினா வீடு வீடாக, தெரு தெருவாக, ஊர் ஊராக சுற்றி வருகிறீர்கள். சபை சென்னையில் இருந்தால் வீடு சந்திப்பு குமரியில் நடக்கிறது. யாரை சந்தித்தாலும் நாங்கள் ஊளையிடுவது போல நீங்களும் தேவையில்லா அரசியல் பேசி, பஸ் ஸ்டாண்ட், டீக்கடை , முச்சந்தி, நாட்சந்தி அங்கெல்லாம் நின்று கொண்டு ஊர்க்கதை, குடும்பக்கதை மற்றவர்களைப்பற்றி குறை சொல்லி குலைக்கிரீர்களே ! இது நியாயமா?

நாய்கள் என்னை சூழ்ந்திருக்கிறது என்றும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திட்கு தப்புவியும் என்றும் தாவீது இயேசுவை பற்றி சொல்கிறதை நினைத்துப் பாருங்கள். சிலுவையிலே அவரை சூழ்ந்திருந்த போர் வீரர்கள் அவரை பரியாசம் பண்ணி ஏளனம் செய்து, நிந்தித்து அவமானப்படுத்தினார்களே. இவர்களைத்தான் தாவீது நாய் என்று சொன்னார். நீங்களும் இரண்டு பேர் சேர்ந்து கொண்டால் இல்லாத மூன்றாம் நபரை பற்றி மோசமாக பேசுகிறீர்கள். திடீரென அந்த நபர் வந்து விட்டால் ப்ரைஸ் த லோட் பிரதர். இப்பதான் உங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு ஆயுசு 100 என்று அப்பட்டமான பொய்யை அவுத்து விடுகிறீர்கள். இதற்கு நாங்கள் எவ்வளவோ பரவாயில்லை .

உங்களுக்கு எங்களை ஒப்பிடு ஏசாயா தீர்க்கதரிசி எழுதினதை எண்ணி நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவனுடைய காவல்காரர் எல்லோரும் ஒன்றும் அறியாத குருடர்கள். அவர்களெல்லாரும் குலைக்க மாட்டாத ஊமையான நாய்கள். தூக்க மயக்கமாய் புலம்புகிறவர்கள் படுத்துக்கொள்கிறவர்கள். நித்திரை பிரியர். திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள், பகுத்தறிவில்லா மேய்ப்பர். அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் பொலிவை நோக்கிக் கொண்டிருகிறார்கள் (ஏசா:56:10-11).

காவல்காரர் என்பது ஊழியர்கள் தானே. ஒன்றும் அறியாத குருடர்கள் என்று ஆண்டவர் சொல்கிறாரே. ஏன் சத்தியத்தை அறிய வேண்டிய பிரகாரம் அறியவில்லை. இன்றைக்கு வேதம் எண்ண சொல்கிறது என்று கவனிக்காமல் தாங்கள் சொல்வதே சத்தியம் என நீங்கள் நினைகிறீர்கள். ஒரே வேதம் ஆனால் ஆளுக்கொரு சத்தியம். இது எப்படி சாத்தியமாகும். ஊழியர்களாகிய நீங்கள் தப்புத்தப்பாக வியாக்கியானம் செய்து தப்பாகவே பிரசங்கிக்கிற நீங்களும் குருடர்கள். உங்களை நம்புகிற விசுவாசிகளும் குருடர்கள். குருடன் குருடனுக்கு வழி காட்டினால் இருவரும் குழியில் தான் விழுவார்கள். அப்படியே சிலர் சத்தியம் அறிந்திருந்தாலும் அதை சொல்ல பயப்படுவதேன். குலைக்க மாட்டாத ஊமையான நாய்கள் என்பது எவ்வளவு உண்மை. சத்தியத்தை சொன்னால் சத்துருவாகப் பார்ப்பார்கள். ஆகவே இயேசு நல்லவர், வல்லவர், போதுமானவர், அவர் உன்னை தாலாட்டுவார், சீராட்டுவார், பாலூட்டுவார், சோறூட்டுவார் என்றும் கலங்காதே, கவலைப்படாதே, என்றும் சொல்லி என் ஜனமாகிய குமாரத்தியின் காயம் ஆராதபடிக்கு தடவிக் கொடுக்கிற பிரசங்கிகள் தான் இன்றைக்கு அதிகம். சத்தியத்தைப் பேசினால் ஜனங்கள் மனம் புண்படும். தனக்கும் காணிக்கைகள் குறையும், கூட்டம் கொஞ்சமாகும் என்று எண்ணி குலைக்க மாட்டாத ஊமையான நாய்களாய் இருப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது. அநியாயத்தினாலே சத்தியத்தை அடைக்கி வைக்கிற மனுஷன் சபிக்கப்படவன் என வேதம் சொல்கிறதே. தூக்க மயக்கமாக புலம்புகிறவர்களும் படுத்துக்கொண்டு நித்திரை செய்யும் நீங்கள், சத்தியத்தை எப்படி மனதார தாராளமாக பேசுவீர்கள்.

திருப்பதி அடையாதிருக்கும் பெருவயிற்று நாய்கள் என்பது இன்றைய ஊழியர்களுக்கு ஏகப் பொருத்தம் தானே. எந்தக் கூட்டம் நடந்தாலும் பிரியாணியுண்டா என கேட்கிறீர்கள். உபவாசக் கூட்டம் ஊழியர்களுக்கு கிடையாது. அந்தக் கூட்டத்தை பார்த்துக் கொள்வார்கள். தங்க இடமும், சாப்பாடும் கிடைத்தால் போதும், எந்த செமினாருக்கும் போவீர்கள். இலவச பிரயாண டிக்கெட் கிடைத்தால் இன்னும் சந்தோஷம். சத்தியம் தவறாகப் பேசினாலும் உட்கார்ந்து கேட்பீர்கள். சோறு கண்ட இடம் சொர்க்கம் என எண்ணி, கண்ட கண்ட இடத்திலெல்லாம் பந்திக்கு உட்காரும் ஊழியர்களின் வயிறு என்ன வண்ணார் வெளுக்கும் வெள்ளாவிப் பானையா? காவல்துறையினரின் வயிறும் தேவனுடைய காவற்காரருடைய வயிறும்…. இயேசு பிரசங்கம் செய்யும் போது விசுவாசிகள் எல்லோரும் பசியை மறந்து கேட்டுக்கொண்டிருக்கும் போது அந்திரேயாவுக்குத் தானே சாப்பாடு நினைவிற்கு வந்தது. சிறு பையன் கூட தன்னிடம் இருக்கும் ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் மறந்து செய்தி கேட்க்கும் போது, அந்திரேயாவுக்கு என்ன அவசரம். சமாரியா செல்லும் வழியில் யாக்கோபின் கிணற்டண்டையில் இயேசுவை அமர வைத்து விட்டு சாப்பாடு வாங்க பன்னிரெண்டு பெரும் சென்றார்களே ! ஊழியக்காரர்கள் மட்டும் அடுத்த ஊழியனை நம்புவதில்லை. ஒருவனை மட்டும் அனுப்பினால் அவன் நன்றாக தின்று விட்டு நமக்கு குறைவாக வாங்கி வருவான் என நினைத்து விட்டு அனைவரும் சாப்பிட சென்றார்கள்.

இயேசு உயித்தெழுந்த போது, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உண்டா? என கேட்ட போது தான் அவர் கர்த்தர் என அறிந்து கொண்டார்கள். எம்மாவூர் சீஷர்கள் மத்தியில் இயேசு எவ்வளவோ வசனங்களை சொன்ன போது அவர்களுக்கு விளங்கவில்லை. ஆனால் வீட்டிற்குள் சென்று அப்பத்தை எடுத்து அதைப் பிட்ட போது அவர் மேசியா உயிர்த்தெழுந்தார் என அறிந்து கொண்டார்கள் சாப்பாட்டு ராமன்களுக்கு சாப்பாட்டை வைத்தே தன்னை வெளிப்படுத்த வேண்டி இருந்தது . அடித்து புசி என்று என்று சொல்லி தானே பேதுருவை கொர்நேலியு வீட்டிற்கு அனுப்பினார். இந்த எண்ணம் உள்ள ஊழியர்கள் பெருவயிற்று நாய்கள் என ஏசாயா சொன்னது தப்பில்லையே. ஒரு வேலை போஜனத்திற்காக தன சேஷ்ட புத்திர பாகத்தை விற்று போட்டவர்களையும் ,சத்தியத்தை கலப்பாக போதித்து சபையை வஞ்சிக்கும் ஊழியர்களை பற்றி பவுல் சொன்னார் .நாய்களுக்கு எச்சரிக்கையாய் இருங்கள்.(பிலி:3 :2 )

சில வீடுகளில் “நாய்கள் ஜாக்கிரதை “என போர்டு தொங்கும். எங்க பேரைச் சொல்லி தங்கள் வீட்டை பாதுகாக்கிறார்கள். அப்படியே எங்களை போலுள்ள ஊழியர்களுக்கு விலகி உங்கள் சபையை பாது காத்துக்கொள்ளுங்கள். “சுவரிலே நீர் விடும் நாய் “என்று எங்களை சொல்கிறீர்கள். நாங்கக் ஏன் அப்படி செய்கிறோம் என்று தெரியுமா? போகிற வழியிலே நாங்கள் நீர் விட்டுப் போனால் தான் வருகிற வழி எங்களுக்கு ஞாபகம் இருக்கும். அதுக்காகத்தான் அப்படிச் செய்கிறோம் நாங்க மட்டுமா அப்படி கொஞ்சம் யோசித்து பாருங்க, இது உங்களுக்கே நல்லாயிருக்க?

நாங்கள் லாசருவின் பருக்களை நக்கினோம் (லூக்:19 :21), கக்கினதைத் திரும்பத் தின்போம் (2 பேது 2:21), இது எங்கள் சுபாவம். சில சமயங்ளில் நீங்களும் திரும்ப திரும்ப பாவம் செய்து செத்தவர்களாகிறீகளே! ஏன்? செத்த சிங்கத்தை பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி தானே (பிர:9:4) நாங்கள் சில சமயம் தேவனுடைய சித்தம் செய்திருந்தாலும், தேவ ராஜ்ஜியத்தில் எங்களுக்கு இடமில்லை. தேவன் சொன்ன படி அகாபின் இரத்தத்தை நாங்கள் நக்கினோம். ஆகாபின் மனைவி யேசபேல், தள்ளிவிடப்பட்ட போது, அவளுடைய மாம்சத்தை தின்றோம் (2 இரா :9:36;1 இரா :21:19,22:38).

அன்பான வாசாகர்களே! ரொம்ப நேரம் உங்கக் கிட்ட கடைசியாக என்னைப் பற்றி வேதம் சொல்லும் கடைசி வசனத்தை உங்களுக்கு சொல்லி விடை பெறுகிறேன். (வெளி:22:15)ல் நாய்களும் சூனியக்காரரும், விபச்சாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரக ஆராதனைகாரரும், பொய்யை நம்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள் என வேதம் சொல்கிறது. இந்த கூட்டத்திலே எங்களை சேர்த்திருக்கிறார் என நீங்கள் நினைக்க வேண்டாம். இது நாங்கள் அல்ல. எங்களை போலிருக்கும் ஊழியர்களை தான் பரலோகத்திலே பிரவேசியாமல் புறம்பே தள்ளப்படுவார்கள் என வேதம் சொல்கிறது. “ஜாக்கிரதை”. நாங்கள் சொப்பனத்தில் கூட பரலோகம் செல்ல முடியாது என எங்களுக்குத் தெரியும். என்றாலும் நான் நன்றி உள்ளவன் ஆயிற்றே. ஒரு வேளை பரலோகத்தில் எனக்கு இடமிருக்கும் என்று எண்ணி பரலோக வாசலிலே போய் ஊளையிட்டேன். தேவ தூதன் ஒருவன் வந்து என்ன? என்று கேட்டான். அதற்கு நான் பரலோகத்தில் ஒரு இடம் எங்களுக்கு வேண்டும், நாங்கள் நன்றி உள்ள பிராணி என்று சொன்னேன். அதற்கு தேவதூதன் சரி, அப்படீனா நீ போய் உன் பக்கத்து வீட்டு நாயை கூட்டிட்டு வா, அப்பொழுது இடம் தருகிறேன் என்றார். நானும் சந்தோஷமாக வந்து பக்கத்து வீட்டு நாயை சந்திக்கச் சென்றேன். அது சாப்பிட்டுக் கொண்டு இருந்தாது, அதைப் பார்த்தேன் அவ்வளவு தான் என்னைப் பார்த்து குரைத்தத. நானும் எவ்வளவோ சொன்னேன், ஒரு தேவ ரகசியம் சொல்ல வேண்டும் அமைதியாய் இரு என்று சொன்னேன் அது கேட்க வில்லை. என்மேல் பாய்ந்து என்னை விரட்டியது. சரி பரவாயில்லை, பக்கத்து தெருவுக்கு போனேன் அங்கேயும் அதே கதிதான். என்னை கடித்து குதறி விடார்கள். இரத்தக்கலறியோடு பரலோகம் சென்று குரைத்தேன். தேவதூதன் வந்து, எங்கே உன் பக்கத்து வீட்டு நாய் என்று கேட்டான். யாருமே என்னோடு ஐக்கியமாக இல்லை எல்லோரும் என்னை கடித்து குதறுகிறார்கள் என வருத்தத்தோடு சொன்னேன், அதற்கு தேவ தூதன் என்ன சொன்னான் தெர்யுமா? ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கடித்துபட்சித்து ஐக்கியமில்லாமல் வாழ்கிற எந்த நாய்களுக்கும் பரலோகத்திலே இடமில்லை என்றார்.