Zion Church

பாரமான வருத்தம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம், எங்களுக்கு உண்டாயிற்று.”(2கொரி 1:8)

எந்த சூழ்நிலையிலும், முயற்சியை கைவிட்டு விடாதிருங்கள். கர்த்தர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை தளர விட்டுவிடாதிருங்கள். அதே நேரம், கைவிடாத கர்த்தர், உங்களை கரம் பிடித்திருக்கிற படியால், உங்களுடைய ஓட்டம் ஜெயத்துடன் வெற்றியோடு முடியும். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று, சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (சகரி 4:6) ஆகவே, “நீங்கள் அவருடைய ஆவியினாலே , உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படுங்கள்.”                  (எபே 3:16)

1987 ஆகஸ்ட், 16-ம் திகதி அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ஒரு விமானம், சிறிது நேரத்திலே விபத்துக்குள்ளாகி, நொறுங்கிப்போனது. நான்கு வயதுடைய ஒரு குழந்தை தவிர, அதில் பயணித்த 150 பேரும் மரித்தார்கள். காரணம், அந்த குழந்தையின் தாய், விமான விபத்துக்களாகும் நேரம், அந்த பிள்ளைக்கு முன்பாக மண்டியிட்டு, உறுதியாக கட்டிப்பிடித்து, நகர முடியாதபடி பிடித்துக்கொண்டாள். தாய் மரித்தாலும், அந்தப் பிள்ளையோ, பாதுகாக்கப்பட்டது.

இவ்விதமான அன்பையே, கர்த்தரும் தன்னுடைய உள்ளத்தில் வைத்திருக்கிறார். உங்களைப் பாதுகாக்கும்படி, கல்வாரியிலே தன்னுடைய உயிரைப் பொருட்படுத்தாமல், மகிழ்ச்சியோடு ஒப்புக்கொடுத்தார். அவரது அன்பின் செட்டைக்குள்ளே மூடி மறைத்துக் கொண்டார். உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான். “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிற படி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல், எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” (2பேது 3:9)

வாலிப வயதில், ஒருவர் இரட்சிக்கப்பட்டு, கர்த்தரை நேசித்தார். ஆனால் ஒரு குறிப்பிட்ட பாவம், திரும்பத் திரும்ப, அவரைத் தாக்கியது. பாவத்துக்கு விரோதமாக இரத்தம் சிந்தத்தக்கதாக போராட வேண்டும் என்று அப். பவுல் எழுதினார். ஆனால் அந்த பாவ போராட்டத்தை எதிர்த்துப் போராட, அந்த வாலிபனுக்கு சக்தியோ, பெலனோ, ஒன்றுமில்லாமல் தவித்தார்.

அப்பொழுது ஒரு போதகர், அந்த வாலிபனின் பிரச்சனையை அறிந்து, “தம்பி நட்சத்திரங்கள் ஆகாய மண்டலத்திலே, எந்த ஆதாரமுமின்றி தொங்கினாலும், கர்த்தர் அவைகளை நிலைநிறுத்தியிருக்கிறார். தன்னுடைய கையிலே, ஏழு நட்சத்திரங்களை ஏந்தியிருக்கிற அவர், உங்களையும் ஏந்தியிருக்கிறார். நட்சத்திரங்கள் விழாதபடி பாதுகாக்கிறவர், உங்களையும் விழாதபடி பாதுகாப்பார் என்றார். அந்த வார்த்தைகள், அந்த வாலிபனை திடப்படுத்தியது. இன்று அவர் நாற்பத்தைந்து வருடங்கள், வல்லமையோடு தொடர்ந்து கர்த்தருக்காக எழுந்து பிரகாசித்துக்கொண்டிருக்கிறார். “விசுவாசிக்கிறவன், பதறான்”  (ஏசா 28:16)

நினைவிற்கு :- “நாங்கள் எங்கள் மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன் மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்” (2கொரி 1:9)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]