CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

பேர்ல் துறைமுகத்தை நினைத்துக் கொள்ளுங்கள்

பேர்ல் துறைமுகத்தை நினைத்துக் கொள்ளுங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஒருநாள் 2400 அமெரிக்க இராணுவ வீரர்கள் யுத்தக்களத்திற்குச் செல்ல பேர்ல் துறைமுகத்தில் (Pearl Harbor) யுத்தக் கப்பல் ஒன்றில் புறப்பட ஆயத்த நிலையில் இருந்தனர். அந்த துறைமுகத்தில் “ரடார் ஸ்டேஷன்” ஒன்றும் செயல்பட்டு வந்தது. இரண்டு இராணுவ வீரர்கள் அதை இயக்கி விழிப்போடு கவனித்துக்கொண்டிருந்தனர். துறைமுகத்தை நோக்கி விமானம் ஏதேனும் வருமானால் “ரடார்” திரையில் அதற்கான அறிகுறிகள் தெரியும். அதை உடனே சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிக்கு சொல்லப்பட்டு அவர்கள் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்தாக்குதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டுமென்ற ஒழுங்கு செய்யப்பட்ட நியதி.

ராடரை இயக்கி இரண்டு இராணுவ வீரர்கள் ரடார் திரையில் பேர்ல் துறைமுகத்தை நோக்கி சில விமானங்கள் வருவதைக் காட்டும் சில புள்ளிகளைக் கண்டனர். இதை உடனடியாக அவர்கள் பிரிவில் மூத்த இராணுவ அதிகாரியிடம் தெரிவித்தனர். ஆனால் அந்த மூத்த அதிகாரி ரடார் திரையில் தெரிந்த அந்த அறிகுறிகள் எதிரிகளின் விமானங்களாக இருக்க முடியும். ஏனெனில் முழுப் பாதுகாப்பு அமைப்போடு இயக்கும் பேர்ல் துறைமுகத்தை நோக்கிப் பறந்து வர எந்த எதிரிநாட்டிற்கு துணிச்சல் வராது என்ற பெருமிதமும் அலட்சிய மனப்பான்மையும் இருந்த காரணத்தால் அவைகள் நம்முடைய விமானங்களாகத்தானிருக்கும் என்று தனக்குள்ளாகவே ஒரு முடிவை எடுத்துக்கொண்டு எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டார்.

விளைவு அடுத்த 50-வது நிமிடத்தில் 2400 இராணுவ வீரர்களோடான யுத்தக்கப்பல் ஜப்பானியரின் விமானதத் தாக்குதலுக்கு இரையாகி சுக்கு நூறாகச் சிதறியது. ஒரு இராணுவ வீரன் கூட உயிரோடு மிஞ்சவில்லை. இராணுவ வீரர்களை அடையாளம் தெரிந்துகொள்ள முடியாத அளவு அவர்களது சரீரம் சிதறடிக்கப்பட்டது. பேர்ல் துறைமுகம் கப்பல்கள் நிறுத்த முடியாத அளவு பெரும் சேதத்திற்குள்ளாக்கியது.

இராணுவ அதிகாரிக்கு எச்சரிக்கை கிடைத்தும் அலட்சியம் செய்ததின் விளைவு எவ்வளவு பயங்கர நாசத்தில் முடிந்தது! அப்போதிலிருந்த அமெரிக்காவின் அதிபதி பிராங்லின் டி.ரூஸ்வெல்ட் அந்த சோகதினமாகிய 1941, டிசம்பர் 7-ம் நாளை அமெரிக்க இராணுவ வரலாற்றின் “இழிவான நாள்” (Day of Infamy)என்று குறிப்பிட்டார். அமெரிக்க இராணுவத்தினர் எச்சரிக்கையின் அவசியத்தையும் , அலட்சியம் செய்தால் ஏற்படும் பேரழிவையும் உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை நினைவு கூருகின்றனர்.

“கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் அழிந்து போம். இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிற படியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும், தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்” (2பேது 3:10-11) என்று பேதுரு அப்போஸ்தலன் வரயிருக்கும் பேரழிவைக் குறித்தான எச்சரிக்கையையும் அதற்கு தப்பித்துக் கொள்ளும் வழியையும் நமக்கு வலியுறுத்திக் காட்டுகிறார்.

எந்த அளவுக்கு நாம் எச்சரிக்கையை விளங்கிக்கொண்டு செயல்படுகிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். பேர்ல் துறைமுகத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]