CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

மதுப்பிரியனின் மனமாற்றம்

மதுப்பிரியனின் மனமாற்றம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

மோதிலால் என்பவன் குடிபோதையிலிருக்கும் போது பல தீச்செயல்களைச் செய்வது வழக்கம். அவனுடைய நண்பர்கள் மேலும் மேலும் செய்யுமாறு அவனைத் தூண்டிவிட்டு மகிழ்ந்தனர். மோதிலால் ஒருநாள் உண்மைக்கிறிஸ்தவன் ஒருவன் இல்லத்தில் தற்செயலாகத் தங்க நேர்ந்தது. அங்கு அவனது வாழ்க்கையின் தூய்மையையும் நிறைவையும் கண்ட மோதிலால், முற்றும் மனம் மாறி தன் நடத்தையைத் திருத்திக் கொண்டான். அவனது தீய நண்பர்களுக்கோ இது சற்றும் பிடிக்கவில்லை. கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதால் தன்னை மாசுபடுத்திக் கொண்டான் என்று குற்றம் சாட்டி அவனைத் துன்புறுத்தலாயினர். தான் குடிகாரனாகிப் பல தீமைகளைச் செய்தபோது தன்னைப் போற்றிக் கொண்டாடிய மக்கள், நன்மை வடிவான கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டு நலமானதை நடப்பிக்கும் போது அவர்களால் தான் சிட்சிக்கப்படுவதை எண்ணி வியந்தான். தன் சுற்றத்தாரால் சாதி விலக்கு செய்யப்பட்டு வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட போதும் அவன் மனம் தளரவில்லை. மகிழ்வுடனே கர்த்தரைத் துதித்து அவர்களுக்காக இறைவனிடம் வேண்டினான்.

ஊரைவிட்டே அவன் ஓடிப்போக வேண்டிய நாளும் வந்தது. அப்போது வேறொரு ஊருக்கு அவன் செல்லும் வழியில் நதியொன்றைக் கடக்க வேண்டும். படகில் ஏறிக் கடக்கவிருக்கையில் பெரும் புயற்காற்று வீசி படகைக் கவிழ்த்தது. ஆண்டவரின் அருளால் அவன் நீந்திக் கரை சேர்ந்தான். அவன் எடுத்து வந்த பணப்பை ஆற்றோடு போயிற்று. ஒன்றிரண்டு ரூபாய்களே இப்போது அவன் கையில் எஞ்சியிருந்தன. காட்டு மார்க்கமாய் அவன் செல்கையில் கள்வர் அதையும் பறித்துக் கொண்டனர். உயிருள்ள அண்ணரின் புத்துயிரை அவன் பெற்றிராவிட்டால், அப்போதே உள்ளம் உடைந்து மடிந்திருப்பான். ஆனால் இறைவன் தரும் அற்புத அமைதியால் அவன் உள்ளம் நிறைந்திருந்தது. அதை யாராலும் பறித்துக்கொள்ள முடியாது என்று அறிந்திருந்தான். எல்லாம் எடுபட்ட பின்னரும், கிறிஸ்துவில் என்னிடமுள்ள அளவிடமுடியாத செல்வத்தை யாரும் எடுக்க முடியாது என்று கூறிய போது அக்கள்வரின் கடின உள்ளங்கள் நெகிழ்ந்தன. அவர்கள் அவனிடமிருந்து பறித்துக்கொண்ட பணத்தைத் திருப்பிக் கொடுத்தனர். பின், மோதிலால் வேறு ஊருக்குச் சென்று தன் உழைப்பினால் உயர்ந்த கிறிஸ்துவின் உத்தம ஊழியனாக வாழ்ந்தான்.

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள் (மத்தேயு 5:4)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]