CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

மனம் தளராமல்

மனம் தளராமல்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

“அம்மோனியனாகிய தொபியா, அவன் பக்கத்தில் நின்று, அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனாலும், அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.” (நெகே 4:3)

நெகேமியா, எருசலேம் மதில்களை கட்டும்போது, அவருக்கு எதிர்ப்பு சக்திகள் பலமாய் எழுந்தன. தொபியாவும், சன்பல்லாத்தும், எரிச்சலடைந்து, மதில் கட்டுகிற யூதரைச் சக்கந்தம் பண்ணினார்கள். “அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ என்று கேட்டார்கள்” (நெகே 4:2)

நெகேமியா கடுமையான பிரயாசம் எடுத்தபோதிலும், போதுமான உதவி கரங்கள் இல்லாத சூழ்நிலையில், எதிரிகள், எல்லா பக்கங்களிலும் அவரை நெருக்கினார்கள். கடுமையான வார்த்தையைப் பேசினார்கள். ஆனால் நெகேமியாவோ, அவற்றைப் பொருட்படுத்தாமல், சோர்ந்து போகாமல், தன் இலக்கையும், அழைப்பையும் மட்டுமே நோக்கிக்கொண்டு, செயல்பட்டார். நீங்கள் உண்மையாக கர்த்தருக்கென்றும், ஊழியத்துக்கென்றும் பிரயாசம் எடுக்கும்போது, உங்களை வீழ்த்த வேண்டும் என்கிற சக்திகள், உங்களுக்கு விரோதமாய் போராடும். “போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். யாம் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்” என்பது போல, நீங்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல், எடுத்த முயற்சியை விட்டுவிடாமல், நெகேமியா போல செயல்படுங்கள்.

எல்லா மிருகக் கூட்டங்களும், நின்று பார்த்துக்கொண்டிருக்கும் போது, முயலும் ஆமையும், ஒரு ஓட்டப்பந்தயத்தைத் தொடங்கின. ஆரம்பத்தில் முயல், மகாவேகமாக ஓடினது. சற்றுதூரம் போன பிறகு, திரும்பிப் பார்த்தால், ஆமை மெதுவாகவே வந்து கொண்டிருந்தது. முயலுக்கு நிறைய கைத் தட்டல்கள் கிடைத்திருக்கும். ஆமையை உற்சாகப்படுத்துவாரோ, ஊக்கப்படுத்துவாரோ ஒருவருமில்லை.

முயல்போல, தன்னால் வேகமாக ஓட முடியவில்லை என்றாலும், ஆமை மனம் தளரவில்லை. விடா முயற்சியைக் கைவிடவில்லை. வேகமாக ஓடின முயல், சற்றே தூங்கிப் போய்விட்டது. மெதுவாய்  நடந்தாலும் தீர்மானத்துடனும், மன உறுதியுடனும் நடந்த, ஆமை முடிவிலே வெற்றிபெற்று விட்டது. நோவா பேழையிலே, நத்தை நகர்ந்து ஏறுகிற வரையிலும், கர்த்தர் பொறுமையோடு காத்திருந்தார். பிறகு தான், பேழையின் கதவுகளை அடைத்தார்.

உலக ஓட்டப்பந்தயத்திற்கும், கிறிஸ்தவ ஓட்டப்பந்தயத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. உலக ஓட்டப்பந்தயத்தில், முதல் வருகிற இரண்டு பேர், அல்லது மூன்று பேர், பரிசை பெறுவார்கள். ஆனால் கிறிஸ்தவ ஓட்டப்பந்தயத்தில், வெற்றியோடு, தங்கள் ஓட்டங்களை ஓடி முடிக்கிற , அனைவரும் பரிசைப் பெறுவார்கள். “நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.(1 கொரி 9:24)

அப். பவுல் தன்னம்பிக்கையோடு, தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்டும் சொல்லுகிறார். “அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள். நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன். ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்” (1கொரி 9:25-26) என்று குறிப்பிடுகிறார். ஆகவே, எந்த சூழ்நிலையிலும், உங்களுடைய முயற்சியை கைவிடாதிருங்கள். Never, Never give up.

நினைவிற்கு – “நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும் என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல், பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். (வெளி 2:3)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]