CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

மரித்த சார்லி இன்றும் பேசுகிறான்

மரித்த சார்லி இன்றும் பேசுகிறான்

அமெரிக்க நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் நான் இராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றினேன். கெட்டிஸ்பர்க் யுத்தக்களத்தில் நூற்றுக்கணக்கான யுத்த வீரர்கள் காயமடைந்து என்னுடைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.

.

அவர்களில் பலர் மிக மோசமாகக் காயமடைந்திருந்தபடியால் சிலருக்கு கையையோ, காலையோ அல்லது இரண்டையுமே எடுத்துவிட வேண்டிய மோசமான நிலவரத்திலிருந்தனர்.

.

17 வயது நிரம்பிய சார்லி இராணுவ வீரனாக சேர்ந்து 5 மாதமே ஆகின்றன. அவனுடைய கையையோ, காலையோ எடுத்து விட வேண்டிய பரிதாபமான நிலையில் என்னுடைய மருத்துவமனையில் இருந்தான். ஆபரேஷனுக்கு முன்பு என்னுடைய மருத்துவ உதவியாளர்கள் அவனுக்கு மயக்க மருந்து கொடுக்க சென்ற போது, அவன் மயக்க மருந்தை ஏற்றுக் கொள்ள மறுதலித்துவிட்டான். ”மருத்துவரை வரச் சொல்லுங்கள். நான் அவரோடு பேசிக் கொள்வேன்,” என்று அவன் சொன்னதாக அறிந்து நான் அவனிடத்தில் சென்றேன். ”சார்லி, நீ ஏன் மயக்க மருந்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாய்? யுத்தக்களத்தில் நான் உன்னை பார்த்த போது காயத்தின் விளைவாக உனக்கு இரத்தப் போக்கு அதிகமாகிவிட்டதால் நீ பிழைக்கமாட்டாய் என கருதி, விட்டு விட்டு வந்துவிடலாம் என்று கூட நினைத்தேன். ஆனாலும் உனக்கும் ஒரு அன்பான தாய் உண்டு என்று நான் நினைத்த போது உன்னை சிகிச்சைக்கு எடுத்து வந்தேன். அதிகமான இரத்தத்தை நீ இழந்து விட்டபடியால், மயக்க மருந்து இல்லாமல் உன்னால் ஆபரேஷனை தாங்க முடியாது. நானே உனக்கு மயக்க மருந்து தருகிறேன் என்று அவனோடு பரிவோடு பேசினேன்.

.

அவன் என் கையைப் பிடித்து கொண்டு சிறிது நேரம் என் முகத்தையே பார்த்துக கொண்டிருந்தான். டொக்டர் நான் 9 வயதாயிருக்கும் போது ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நான் இயேசுகிறிஸ்துவுக்கு என் இருதயத்தைக் கொடுத்துவிட்டேன். அப்போதிருந்தே நான் அவரை முற்றுமாய் சார்ந்து கொள்ள கற்றுக்கொண்டேன். இப்போதும் அவரே என் நம்பிக்கை. அவரே என்னுடைய பெலன். நீங்கள் என்னுடைய காலையும் கையையும் ஆபரேஷன் பண்ணி எடுக்கும்போது தாங்கிக் கொள்ளத் தக்கதாக அவர் எனக்கு பெலன் தருவார் என்று அவன் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் சொன்னது எனக்கு மிகுந்த ஆச்சரியமாயிருந்தது. ”கொஞ்சம் பிராண்டீ தருகிறேன். அதையாவது சிறிது குடித்துக் கொள். உன்னுடைய நன்மைக்காகத் தான் சொல்கிறேன்” என்று சொல்லியும் கூட அவன் மீண்டும் என் முகத்தையே உற்று நோக்கினான்.

.

டொக்டர் நான் 5 வயதாக இருக்கும் போது, ஒருநாள் என் தாயார் எனக்கு அருகே முழங்கால் படியிட்டு என்னை அணைத்துக் கொண்டு ”சார்லி, நீ உன் வாழ்நாளில் ஒரு சொட்டு மதுபானம் கூட அருந்தக்கூடாது என ஒவ்வொருநாளும் இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடுகிறேன். ஏனென்றால் உன் அப்பா இறுதிவரை ஒரு குடிகாரராக இருந்தே மரணமடைந்தார், நீ குடியின் கேடுகளைக் குறித்தும், இயேசுவின் அன்பைக் குறித்தும் மற்றவர்களிடம் சொல்லுகிறவனாயிருக்க வேண்டும். இதைத் தான் நான் இயேசுவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று என் அம்மா சொன்னது என் மனதில் இன்றும் பசுமையாக இருக்கின்றது. ஒருவேளை உங்களைத் திருப்திப்படுத்த நான் குடித்து மரித்துவிட்டேனானால் நான் பிராண்டி வாடையோடு இயேசுவின் சமூகத்திற்கு செல்ல முடியுமா? எனவே அதுவும் எனக்கு வேண்டாம்” என்று திட்டமாக கூறிவிட்டா்.

.

அவன் என் முகத்தையே பார்த்தவிதம், அவன் பேசிய விதம் இவைகளை என்னால் மறக்க முடியவில்லை. ஆனால் அதே சமயத்தில் நான் இயேசுவை வெறுத்தேன். சார்லி தன்னுடைய மரணத்தருவாயிலும் தன்னுடைய இரட்சகராகிய இயேசுவிடம், உண்மையையும், அன்பையும், நம்பிக்கையையும் காட்டும் விதத்தை கண்டபோது அது என் இருதயத்தில் ஆழத்தை தொட்டது. நான் எந்த இராணுவ வீரர்களிடமும்  இவ்வளவு பரிவோடு நடந்ததில்லை. அதுவும் எனக்கு ஆச்சரியமாயிருந்தது. சார்லி, ”நீ விரும்பினால் இராணுவ முகாமிலுள்ள சிற்றாலயப் போதகரை வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டேன். வரச் சொல்லும்படி தலையசைத்தான். போதகர் வந்து சார்லியை சந்திக்க ஏற்பாடு செய்தேன்.

.

சார்லி நீ சாகமாட்டாய் ஒருவேளை தேவன் உன்னை பரலோக வீ்ட்டிற்கு அழைத்துக் கொண்டாரானால், நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று போதகர் கேட்டார். அதற்கு சார்லி ”பாஸ்டர் என்னுடைய தலையனைக்கு அடியில் என்னுடைய வேதம் இருக்கிறது. அதில் என் தாயாருடைய முகவரி இருக்கிறது. அந்த வேதாகமத்தை என் தாயாருக்கு அனுப்பி வைப்பதுடன் எனக்காக நீங்கள் அவர்களுக்கு ஒரு கடிதமும் எழுத வேண்டும். எழுதவேண்டிய காரியம் நான் வீட்டிலிருந்து வந்த நாள் முதல் யுத்தகளத்தில் இருந்தாலும், பிரயாணத்திலிருந்தாலும, மருத்துவ மனையிலிருந்தாலும், வேதத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்து தியானித்து என் தாயாரின் ஆசிர்வாதங்களுக்காக ஜெபிக்காத நாளில்லை என்று நான் சொன்தாக எழுதுங்கள்” என்று சொன்னான்.

.

”வேறு ஏதாவது நான் உனக்கு செய்ய வேண்டும்?” என போதகர் கேட்டார். ஆம் என்னுடைய ஞாயிறு பள்ளி ஆசிரியருக்கும் ஒரு கடிதம் எனக்காக நீங்கள் எழுத வேண்டும். அவர் புரூக்லின் ஆலயத்திலிருக்கிறார். அவருடைய முகவரியும் என்னுடைய வேதாகமத்திலிருக்கிறது. அவருக்கு, ”உங்களது நல் ஆலோசனைகளையும் உற்சாகமான வார்த்தைகளையும் உங்களுடைய ஜெபங்களையும் நான் என்றும் மறந்ததில்லை. என்னுடைய யுத்தக் களத்தில் ஆபத்தான வேளையில் அவைகள் எனக்கு பெரிய ஆறுதலையும் உற்சாகத்தையும் தந்திருக்கின்றன. என்னுடைய மரணவேளையிலும் நான் அதற்காக என் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். தேவன் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்” என்று எழுதுங்கள் என்றான்.

.

டொக்டர் நான் இப்போது தயாராக இருக்கிறேன். நான் நிச்சயமாக சொல்கிறேன். ”நீங்கள் என் காலையும், கையையும் எடுக்கும்போது என்னிடத்திலிருந்து ஒரு முனங்கல் சத்தம் கூடவராது. ஆகவே நீங்கள் எனக்கு மயக்க மருந்து தர வேண்டாம்,” என்று திரும்பவும் கெஞ்சலாக கேட்டான். சரி உன் விருப்பப்படியே நான் மயக்க மருந்து தரவில்லை என்று சொன்னேன். மயக்க மருந்து கொடுக்காமல் கத்தியைக் கையில் எடுக்க எனக்குத் தைரியமில்லை. பக்கத்து அறைக்குச் சென்று நான் சிறிது பிராண்டியை குடித்துக் கொண்டு என்னை தைரியப்படுத்திக் கொண்டேன்.

.

நான் கத்தியால் அவன் சதையை வெட்டினேன். அவன் முனங்கவே இல்லை. காலை எடுப்பதற்கு சிறிய இரம்பத்தை எடுத்து வைத்து எலும்பை அறுத்த போது தலையனை மூலையை அவன் தன் வாயில் கடித்துக் கொண்டான். ”அன்பின் இயேசுவே, இவ்வேளையில் என்னோடிரும்” என்ற வார்த்தைகளை சொன்னது தவிர முனங்கல் சத்தம் வரவேயில்லை. அவனது இரு காலையும் ஒரு கையையும் எடுத்துவிட்டேன். அமைதியோடு இருந்தான்.

.

அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. நான் என் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். நான் எந்தப் பக்கம் திரும்பினாலும் சார்லியின் முகம் என் கண்களுக்கு முன்பாக தோன்றியது. ”அன்பின் இயேசுவே இவ்வேளையில் என்னோடிரும்” என்று அவன் மீண்டும் மீண்டும் சொன்ன வார்த்தைகள் தான் என் காதுகளில் ஒலித்ததுக் கொண்டேயிருந்தன. நடு இரவுக்குப் பின் நான் எழுந்து என் மருத்துவமனைக்கு சென்றேன். அப்படிச் சென்றது என் வழக்கத்திற்கு முற்றிலும் மாறானது. மருத்துவமனையிலிருந்து அவசர அழைப்பு வந்தாலொழிய நான் அப்படிச் சென்றதில்லை. நான் மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் என்னுடைய உதவியாளர், “காயப்பட்டவர்களில் 16 இராணுவ வீரர்கள் இறந்துவிட்டார்கள்” என மிகவும் சோகத்தோடு சொன்னார். “சார்லியும் இறந்துவிட்டானா?” என்று என்னையும் அறியாமல் உணர்ச்சி பொங்க கேட்டு விட்டேன். “இல்லை, டொக்டர் அவன் ஒரு சிறிய குழந்தையைப் போல நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறான்” என்றும் சொன்னார்.   நான் அவனது படுக்கை அருகில் சென்று பார்த்தேன். மிகுந்த அமைதியோடு தூங்கிக் கொண்டிருந்தான். அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். Nurse என்னிடத்தில் வந்து, “டொக்டர், இரவு 9 மணியளவில் இராணுவ சிற்றாலய பாஸ்டரும், இன்னும் ஒய்.எம்.சி.ஏ யைச் சேர்ந்த இருவரும் வந்த சார்லியின் அருகில் இருந்து நீண்ட நேரம் மிகுந்த உருக்கத்தோடு ஜெபித்தார்கள். மெல்லிய இனிமையான பாடல் ஒன்றைப் பாடினார்கள். ”இயேசுவே, என் ஆத்தும நேசரே” என்ற பாடல் அது. சார்லியும் சேர்ந்து அந்தப் பாடலை மிக அருமையாகப் பாடினான் என்று சொன்னாள். இவ்வளவு கொடூரமான வேதனையின் மத்தியிலும் அவனால் எப்படி பாட முடிந்தது என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு காரியமாக இருந்தது,” என்று கூறினார். அவனது கையையும் காலையும் ஆபரேஷன் செய்து எடுத்த 5 நாட்கள் கழித்து சார்லி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள். நான் போய்ப் பார்த்தேன். ”டொக்டர் என்னுடைய வேளை வந்து விட்டது. இன்னொரு நாளை நான் காண்பேனோ என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என் மீது காட்டிய பரிவுக்கும் அன்புக்கும் எனது முழு இருதயத்தோடும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஒரு யூதன் என்றும், நீங்கள் இயேசுக்கிறிஸ்துவை நம்பாதவர் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய ஜீவியத்தின் கடைசி வேளையிலும் நான் எவ்வாறு என் இரட்சகராகிய இயேசுவின் மீது முற்றிலும் சார்ந்து கொண்டு மரிக்கிறேன் என்பதை நீங்கள் சிறிது நேரம் என்னோடிருந்து பார்க்க விரும்புகிறேன்” என்று சொன்னான். ஆனால் இயசுவின் அன்பிலே நிறைந்து மகிழ்ச்சி பொங்கும் இருதயத்தோடு அவன் மரிக்கயிருப்பதைக் காணும் தைரியம் எனக்கு இல்லை. ஏனென்றால் நான் இயேசுவை வெறுக்கும் மனிதன். ஆகவே நான் பக்கத்து அறையில் போய் உட்கார்ந்து கொண்டேன்.  என்னுடைய கைகளால் முகத்தை மூடிக்கொண்டு துக்கத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, என்னுடைய உதவியாளர் என் அறைக்குள் நுழைந்தார். “சார்லி உங்களைப் பார்க்க விரும்புகிறார் டொக்டர்”  என்று சொன்னார். “நான் இப்போது தானே பார்த்து விட்டு, அவனை மீண்டும் பார்ப்பது என்னால் முடியாத காரியம்” என்று சொன்னேன். “அப்படி அல்ல டொக்டர் மரிப்பதற்கு முன்பு ஓரிரு அன்பான வார்த்தைகள் பேசலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் இயேசுவை குறித்து அவன் என்ன சொன்னாலும் அது என்னை அசைத்து விடக்கூடாது என்பதிலும் தீர்மானமாயிருந்தேன்.

.

நான் சார்லியின் அருகில் சென்று பார்த்தேன். அவன் மரித்துக் கொண்டிருந்தான். மரிக்கும் வேளைக்குள் வந்துவிட்டான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நான் அவனுடைய படுக்கை அருகில் உட்கார்ந்தேன். “டொக்டர், என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்,“ என்று கேட்டான். நான் அவன் கையை அன்போடு பிடித்துக் கொண்டேன். டொக்டர் நீங்கள் ஒரு யூதன் என்பதால் நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். உலகத்திலேயே ஒரு மேன்மையான நண்பர் ஒருவரை கண்டு கொண்டேன் என்றால் அது ஒரு யூதன் தான்”. நான் ஆர்வத்தோடு “யார்?” என்று கேட்டேன். “அவர் தான் இயேசு கிறிஸ்து . நான் மரிப்பதற்கு முன் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். டொக்டர், நான் இப்போது சொல்லப்போகிற காரியத்தை மறக்கவேமாட்டேன் என்று நீங்கள் வாக்கு செய்ய வேண்டும். செய்கிறீர்களா?” என்று கேட்டான். “சரி” என்று வாக்கு கொடுத்தேன். டொக்டர் 5 தினங்களுக் முன் நீங்கள் என்னுடைய ஒரு காலையும் ஒரு கையையும் ஆபரேஷன் செய்து எடுக்கம் போது இயேசு கிறிஸ்துவின் அன்பை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று நான் இயேசு கிறிஸ்துவை நோக்கி உங்களுக்காக ஜெபம் பண்ணினேன்” என்று சொன்னேன்.

.

அந்த வார்த்தைகள் என் இருதயத்தின் ஆழத்தில் போய் பாய்ந்தது. அவன் மயக்க மருந்தே இல்லாமல் செய்த ஆபரேஷனின் கொடிய வேதனையின் மத்தியில் குணப்படாத என்னுடைய  ஆத்துமாவை குறித்தும் இரட்சகர் இயேசுவைக் குறித்தும் அவனால் எப்படி சிந்திக்க முடிந்தது, என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவனிடம் எதுவும் பேச முடியவில்லை. “நல்லது சார்லி, நீ விரைவில் சரியாகி விடுவாய்” என்று மட்டும் அவனிடம்  சொல்லி விட்டு அதற்கு மேல் அவனிடம் இருக்க முடியாமல் எழுந்து என் அறைக்கு வந்துவிடடேன். அடுத்த 12வது நிமிடத்தில் அவன் மரித்து விட்டான் என்ற செய்தியை என்னிடத்தில் என் உதவியாளர் வந்து சொன்னார். நான் கலங்கி நின்றேன். சார்லி, இயேசுவின் கரங்களில் சுகமாக இருப்பான்.

.

     யுத்த காலத்தில் நூற்றுக்கணக்கான இராணுவவீரர்கள் என்னுடைய மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மரித்திருக்கிறார்கள். ஆனால் கல்லறை தோட்டம் வரை சென்றது, சார்லியின் அடக்கத்திற்கு மட்டுமே, நானே கூட இருந்து அவனுக்கு புதிய இராணுவ உடை உடுத்தி அதிகாரிகளுக்கான சவப்பெட்டியில் கிடத்தி அமெரிக்க நாட்டின் கொடியை அவன் மீது விரித்து 3 மைல் தூரம் கூடச் சென்று, அவனை அடக்கம்பண்ணும் வரை கூடவே இருந்தேன்.

.

 மரண நேரத்தில் சார்லி கூறிய வார்த்தைகள் என்னில் மிக ஆழமான பதிந்தது. அப்போது நான் ஒரு பெரிய செல்வந்தன். பணம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. நான் சார்லியைப் போல் இயேசுவை நேசித்திருப்பேனானால் அந்த அன்புக்காய் எல்லா பணத்தையும் நான் செலவழித்திருப்பேன். ஆனால் அந்த உணர்வை பணத்தால் பெற்றுக் கொள்ள முடியாது. அவன் சொன்ன அன்பின் செய்தியை நான் விரைவில் மறந்துவிட்டேன். ஆனால் சார்லியை என்னால் மறக்கவே முடியவில்லை. ஏனெனில் பாவத்தை குறித்து உணர்வு ஏற்பட்டாலும் கூட, இயேசுகிறிஸ்து மீது எனக்கு ஆழ்ந்த வெறுப்பு இருந்தபடியால் 10 ஆண்டுகளுக்கு மேலாக நான் இயேசுவோடு எதிர்த்து போராடிக் கொண்டிருந்தேன். கடைசியில் சார்லியின் ஜெபமே வென்றது. நான் இயேசுவின் அன்புக்கு என் ஜீவியத்தை ஒப்புவித்தேன்.

.

நான் மனந்திரும்பிய சுமார் ஓர் ஆண்டு கழித்து புரூக்லின் நகரிலுள்ள ஒரு ஆலயத்திற்கு மாலை வேளை ஜெபக்கூட்டத்திற்கு சென்றிருந்தேன். ஆராதனையின் சாட்சியின் நேரத்தில் ஒரு வயதான அம்மையார் எழுந்து சாட்சி சொன்னார்கள். “அன்பார்ந்த நண்பர்களே, உங்களோடு பகிர்ந்து கொள்வது இதுவே கடைசி முறையாக இருக்கலாம். நேற்று என்னுடைய மருத்துவர் எனது வலதுபக்க நுரையீரல் முற்றுமாக பழுதடைந்து விட்டதாகவும், இடதுபக்க நுரையீரல் வேகமாக பழுதடைந்து வருவதாகவும், என்னுடைய நாட்கள் மிகக் குறுகியது என்றும் சொல்லியுள்ளார். மீதமுள்ள நாட்கள் யாவும் இயேசுவுக்கே உரியது. நான் வெகு விரைவில் என்னுடைய மகனை இயேசுவோடு சந்திப்பேன் என்று நினைக்கிறபோது நான் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

.

 என் மகன் சார்லி இராணுவத்தில் மட்டும் போர் வீரன் அல்ல. அவன் கிறிஸ்துவின் போர் வீரன். கெட்டிஸ்பர்க் யுத்த களத்தில் அவன் காயப்பட்டான். அவனது ஒரு காலையும் ஒரு கையையும் ஆபரேஷன் பண்ணி எடுத்துவிட்டார்கள். யூத மருத்துவா் ஒருவர் பரிவோடு கவணித்துக் கொண்டார். ஆபரேஷன் நடந்த 5வது நாள் அவன் இறந்து போனான். இராணுவத்திலுள்ள சிற்றாலயப் போதகர் அவனுடைய பைபிளையும் அனுப்பி எனக்கு கடிதம் எழுதியிருந்தார். என்னுடைய மகன் சார்லி மரணத் தருவாயில் தனக்கு சிகிச்சையளித்த யூத டொக்டரை அழைப்பித்து நீங்கள் 5 தினங்களுக்கு முன் என் ஒரு காலையும் ஒரு கையையும் ஆபரேஷன் செய்து எடுக்கும் போது உங்களுக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நான் ஜெபித்தேன் என்று கூறியதாக எழுதியிருந்தார்கள். என் மகன் சார்லி மரணத்தருவாயிலும் ஆத்துமாவிற்காக ஜெபம் பண்ணியது மட்டும்லாமல் இயேசுவின் அன்பை ஒரு யூத மருத்துவருக்கு எடுத்து சொல்லியுள்ளான் என்பதை அறிந்து நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். “சார்லியின் தாயார் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது என்னால் உட்காந்திருக்க முடியவில்லை.

.

நான் ஆலயத்திலிருக்கிறேன் என்பதையும் மறந்து சார்லியின் தாயாருக்கு நேரே ஓடி அவர்களுடைய கையைப் பிடித்து, “என் அன்பு சகோதரியே, கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. உங்கள் மகன் சார்லியின் ஜெபம் கேட்கப்பட்டுவிட்டது. சார்லி ஜெபித்த யூத மருத்துவர் நான் தான். சார்லியின் இரடசகர் இப்போது என்னுடைய இரட்சகர் இயேசுவின் அன்பு என் ஆத்துமாவை வென்றுவிட்டது என்று கதறினேன்.