CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

முப்பத்தெட்டு வருடங்கள்

முப்பத்தெட்டு வருடங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

“முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த, ஒரு மனுஷன் அங்கே இருந்தான்” (யோவா 5:5)

இஸ்ரவேல் தேசத்திலே, ஜனங்களுக்கு நன்மை செய்வதற்கென்று, கர்த்தர் ஒரு அற்புதமான, குளம் ஒன்றை எருசலேமிலே வைத்திருந்தார். அதுவே, “பெதஸ்தா குளம்.” அங்கே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள், முதலானவர்கள் அநேகர் படுத்திருந்தார்கள். ஏனெனில், சில சமயங்களிலே, தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கின பின்பு, யார் முந்தி இறங்குவானோ, அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்” (யோவா 5:3-4)

“அந்தக் குளத்தின் கரையிலே, வெகுகாலமாக (முப்பத்தெட்டு வருட காலமாக) சோர்ந்து போகாமல் எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் ஒரு மனுஷன் காத்திருந்தான். தண்ணீர் கலக்கும் போது, அவனைக் குளத்தில் கொண்டு போய் விடுகிறதற்கு ஒருவருமில்லை. அவன் போகிறதற்கு முன்னே, வேறொருவன் முந்திக்கொண்டு இறங்கி விடுகிறான். எனினும் அவனிலே ஒரு நல்ல குணாதிசயத்தைப் பார்க்கிறேன். முப்பத்தெட்டு வருடமாய் சுகம் கிடைக்காமல் போனாலும், அவன் தன் நம்பிக்கையை தளரவிடவில்லை. இன்னும் நான் முயற்சி செய்வேன். சோர்ந்து போய் விட்டுவிடமாட்டேன்” என்று உறுதியோடிருந்தான். I will never give up.

ஆகவே எத்தனையோ வியாதியஸ்தர்கள் அங்கே இருந்தாலும், இயேசு அவன் அருகிலே வந்தார்.அப்பொழுது இயேசுவுக்கு மிஞ்சி மிஞ்சி போனால், 33 வயதுதான் ஆகியிருந்திருக்கும். அவனோ, முப்பத்தெட்டு வருஷம் காத்திருந்தான். அப்படியானால், அவன் பெதஸ்தா குளத்தண்டை வந்த பிறகுதான், இயேசு கிறிஸ்து பிறந்திருக்கக்கூடும். அவன் ஒருவேளை, “தம்பி, நாசரேத் ஊரின் தச்சனாகிய, யோசேப்பின் மகனே” என்று, கூப்பிட்டிருக்கக்கூடும்.

“பெதஸ்தா” என்ற வார்த்தைக்கு “இரக்கத்தின் வீடு” என்று அர்த்தம். ஆனால் அந்த குளத்தில் அவனுக்கு இரக்கம் கிடைக்கவில்லை. தேவதூதன் இறங்கி கலக்கினாலும், அவனுக்கு இரக்கம் கிடைக்கவில்லை. இவ்வளவு சீனியராயிருக்கிறார். சரி, அவர் சுகமடைந்து விட்டு போகட்டும் என்று, யாரும் அவருக்கு விட்டுக்கொடுப்பதாகவுமில்லை. பெதஸ்தா குளத்திலிருந்த இரக்கத்தைப் பார்க்கிலும், தேவதூதனிடம் இருந்த இரக்கத்தைப் பார்க்கிலும், கிறிஸ்துவிடத்தில் அதிகமான இரக்கம் இருந்தது. “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்.” (எபேசி 2:4)

“முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.” “முயற்சி திருவினையாக்கும்” என்றார்கள், முதியவர்கள். கிறிஸ்து அந்த திமிர்வாதக்காரனின் விடாமுயற்சியைப் பார்த்தார். நம்பிக்கையையும், விசுவாசத்தையும் கண்டார். “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று அன்போடு விசாரித்தார் (யோவா 5:6) “எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட” என்று, இயேசு சொன்ன போது, அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து போனான்.

நீங்கள் ஒருவேளை வியாதியினாலே, நீண்ட காலம் படுத்திருக்கக்கூடும். எந்த டாக்டரும் சரியாக, சிகிச்சை கொடுக்காவிட்டாலும், இன்றைக்கு கர்த்தருடைய பாதத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். “எனது தகுதியைப் பார்த்து அல்ல, உம்முடைய கிருபையின் படி, எனக்கு இரக்கம் செய்யும்” என்று கேளுங்கள்.

நினைவிற்கு :- “அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று ஏசாயா தீர்க்கதரிசியினாலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது” (மத் 8:17)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]