Zion Church

முயற்சியும், விசுவாசமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

“விசுவாசம், அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.”                   (யாக் 2:22)

உலகத்தார் முயற்சி செய்கிறார்கள். தங்கள் படிப்பு, திறமை அனுபவத்தின் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால் நாமோ, கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, முயற்சி செய்கிறோம். அஸ்திபார மூல உபதேசத்திலே ஒன்று, தேவன் பேரில் வைக்கிற விசுவாசமாகும்.

என்னுடைய மகள், சிறு வயதிலிருந்தே, தான் ஒரு மிஷனெரி டாக்டராக வேண்டும். அப்பொழுது தான், சுவிசேஷத்தை, ஜனங்கள் ஏற்றுக்கொள்வார்கள். என்று சொல்லுவாள். ஆனால் அவள் +2 பரீட்சை எழுதும் போது, மிக அதிகமான மதிப்பெண் எடுக்கவில்லை. ஆனாலும் அவளுக்குள் “டாக்டராவேன்” என்ற விசுவாசம் இருந்தது. இந்தியாவிலுள்ள எல்லா மெடிக்கல் கல்லூரிக்கும் விண்ணப்பம் செய்திருந்தாள். நாங்கள் கர்த்தர் மேல் விசுவாசம் வைத்த படியினால், எம். எல். ஏ., மந்திரி போன்றவர்களை நோக்கி ஓடவில்லை. இடம் கிடைக்க லஞ்சமோ, டொனேஷனோ கொடுப்பதில்லை, என்று தீர்மானமாயிருந்தோம். போராடி ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தோம்.

ஒரு கல்லூரியாகிலும் அவளுக்கு இடம் கிடைக்கவில்லை. என் மகளோ, மனம் தளரவில்லை. ஜுன், ஜூலை மாதம் கடந்தது. எல்லா மெடிக்கல் கல்லூரிகளும் திறந்து விட்டன. பாடங்களும் வேகமாய் ஓட ஆரம்பித்துவிட்டது. ஆகஸ்ட் மாதம் வந்தது. நான் என் மகளிடம், “நாட்கள் கடந்து செல்லுகிறது. அடுத்த ஆண்டு இன்னும் தீவிரமாய் முயற்சிப்போம். கவலைப்படாதே. அதுவரை ஏதாவது ஒரு Bsc-யில் சேர்ந்து, நேரத்தை வீணாக்காமல் படித்துக்கொண்டிரு” என்றேன்.

அவளோ மிக விசுவாசத்தோடு, “கர்த்தர் நிச்சயமாய் எனக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் தருவார்” என்றாள். ஒரு சில நாட்களுக்குள் ஒரு தேவ மனிதன் ஜெபித்துவிட்டு, “கர்த்தர் உனக்கு ஒரு மலையடிவாரத்தில், ஒரு இடத்தை ரிசர்வ் செய்து வைத்திருக்கிறார். இந்தக் கல்லூரியினுடைய தோற்றம் இப்படியிருக்கும் என்று கல்லூரியை வர்ணித்தார். அடுத்த வாரம், தீர்க்கதரிசன வரமுடைய ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவி, எங்களுடைய வீட்டுக்கு வந்து, என் மகளை அழைத்து, “உன் பிறந்த நாள் எப்பொழுது வருகிறது? அப்பொழுது கர்த்தர், உனக்கு பிறந்த நாள் பரிசாக , மெடிக்கல் கல்லூரியில் இடம் தருகிறார்” என்றார்கள். அது எங்களுடைய விசுவாசத்தை பெலப்படுத்தினது.

மகளுக்கு பிறந்த நாள் வந்தபோது, அவள் கம்ப்யூட்டரை பார்த்தாள். அங்கே நாங்கள் விண்ணப்பிக்காத, நேபாள தேசத்திலுள்ள, ஒரு கல்லூரியிலிருந்து, “உனக்கு எங்கள் கல்லூரியில் இடம் கொடுத்திருக்கிறோம். எந்த நன்கொடையும் இல்லை. உடனே வந்து கல்லூரியில் சேரவும்” என்று வந்திருந்தது. அது மிக நல்ல யூனிவர்சிட்டி. நான்கு மாதங்களுக்குப் பிறகுதான், ஒரு தேவ மனிதன் மூலமாக, கர்த்தர் ஒரு இடத்தை வாங்கிக் கொடுத்தார். என்பது தெரிந்தது. கர்த்தருடைய வழி ஆச்சரியமானது! அது சுழல் காற்றிலும், பெருங்காற்றிலும் இருக்கிறது.

தேவ பிள்ளைகளே, கர்த்தர் இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல அழைக்கிற தேவன். இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்க பண்ணின தேவன், வெறுமையும் ஒழுங்கின்மையிலுமிருந்து, உலகத்தில், சகலவற்றையும் சிருஷ்டித்துக்கொண்டேயிருந்தார். நிச்சயமாக, உங்களுக்கும் ஒரு அற்புதத்தை செய்வார்.

நினைவிற்கு :- “நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.” (எபி 3:14)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]