CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

விடாப்பிடியான ஜெபம்

விடாப்பிடியான ஜெபம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

“இடைவிடாமல் ஜெபம் பண்ணவேண்டும்மென்று எவ்வளவு எளிதாக வெறுஞ்சொற்களால் நாம் கூறிவிடுகிறோம்! ஆனால் நம்முடைய ஜெபத்திற்கு ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ பதில் கிடைக்காவிடில், ஜெபம் செய்வதை நிறுத்திவிடுவதுதான் சரியென்று விட்டுவிடுகிறோம்! அவருடைய சித்தத்தின் செயலினால் நாம் கேட்பதை தேவன் கொடுத்து விடுகிறார். என நினைத்துக் கொள்கிறோம். இயற்கை மற்றும் இரக்கத்தின் ஆண்டவராயிருக்கும் அவர் தம் செயலைச் செய்வதற்கு சில சமயங்களில் ஒரு வழியையும், மற்ற சமயங்களில் வேறொரு வழியையும் தெரிந்து கொள்கிறார் என்று நாம் எண்ணுவதில்லை. சில சமயங்களில் ஒரு ஜெபத்திற்கு பதில் அளிக்கப் பல ஆண்டுகள் ஆகும். அதற்குப் பதில் கிடைக்கும் போது, நாம் பின்னோக்கி பார்க்கும் போது அது சரியானபடிதான் நடைபெற்றது என அறியலாம். தேவன் எல்லாக் காலங்களையும் அறிவார். நாம் மறுபடியும், மறுபடியுமாக ஜெபிக்க வேண்டியது என்பது அவரது சித்தம். மேலும் அதினால் இடைவிடாமல் ஜெபம் பண்ணுவது என்றால் என்ன என்ற உண்மையை அறிந்து கொள்ளுகிறோம்.”

“சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்…” (லூக்கா 18:1) என்று நமது ஆண்டவராகிய இயேசு கூறினார். மேலும் அவருடைய வார்த்தைகள் இடம்பெற்ற உவமையானது சோர்ந்து போவதிலிருந்தும், பலவீனமான ஜெபத்திலும் இருந்தும் மக்களை மீட்கும் படியான நோக்கத்துடன் கூறப்பட்டது. சோர்ந்து போவதிலிருந்து காக்கப்பட வேண்டும். விடாமுயற்சியோடு ஜெபம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதே நமது ஆண்டவரின் நோக்கமாகும். நமது ஜெபத்தின். இந்தத் தவிர்க்க முடியாத விசேஷ அம்சத்தை செயல்படுத்துவதின் முக்கியத்துவத்தை எல்லாரும் ஏற்றுக்கொள்வர்.

விடாப்பிடியான ஜெபம் தேவனை நோக்கி செல்லும் ஆத்துமாவின் வல்லமையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. அது பரலோக கிருபையின் சிங்காசனத்தை நோக்கிய ஆத்துமாவின் ஆழ்ந்த சக்திகளின் அசைவு. அதனால் நிலைத்திருக்கவும், பின் தொடரவும், காத்திருக்கும் படியான திறமை உண்டு. ஓய்வில்லா ஆவலும், நிம்மதியான பொறுமையும், அது உள்ளடக்கியது. அது ஒரு நிகழ்வோ அல்லது நிகழ்ச்சியோ அல்ல, ஆனால் ஆத்துமாவின் பேரார்வம். அது அரைகுறையான தேவையல்ல. ஆனால் நிச்சயமான தேவை.

விடாப்பிடியான ஜெபங்களின் போராட்ட குணம் சரீர ஊக்கத்தினாலோ அல்லது உடலின் பலத்தினாலோ ஏற்படுவதில்லை. அது பலத்தினால் ஏற்படும் துடிப்போ அல்லது வெறும் ஆத்துமாவின் ஊக்கமோ அல்ல. அது உள்ளாகச் செயல்படும் ஆற்றல், உள்ளாகப் பதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியினால் தூண்டப்படும் இயல்திறன். கிட்டத்தட்ட, அது நம்முன் தேவ ஆவியின் பரிந்து பேசுதலாகும். மேலும், “…நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) நமக்குள்ளாக இருக்கும் ஒவ்வொரு பாகத்திலும் தம்முடைய சொந்த முயற்சியின் ஆற்றலினால் தெய்வீக ஆவியானவர் தெரிவிப்பது, விடாப்பிடியின் சாராம்சம் ஆகும். அக்கினி விழுந்து ஆசீர்வாதம் கீழ் இறங்கும் வரை நாம் இரக்கத்தின் இருப்பிடத்தில் இருந்து நம்மை ஜெபிக்கும் படி வற்புறுத்தும். இந்த ஜெபத்தில் போராட்டம் ஆரவாரமானதாகவோ, ஆவேசமிக்கதாகவோ இல்லாமலிருக்கலாம். ஆனால் அமைதியானதும், விடாப்பிடியானதும், அவசரமானதுமாகும்.

தேவனுடைய பிள்ளைகளைத் தெளிவாகவும், வல்லமையாகவும் வித்தியாசப்படுத்திக் காட்டுவது ஜெபத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அதுதான் ஒருவன் கிறிஸ்தவன் என்பதற்கு நல்ல அடையாளமாகும். கிறிஸ்தவர்கள் அதிகமாக ஜெபிப்பவர்கள், உலகப்பிரகாரமானவர்கள் ஜெபிப்பதில்லை. கிறிஸ்தவர்கள் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறார்கள். உலகைச் சார்ந்தவர்கள் தேவனை அலட்சியம் செய்கின்றனர். மேலும் அவரது நாமத்தைக் கூப்பிடுவதில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் தொடர்ச்சியாக ஜெபம் செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். ஜெபம் வழக்கமானதொன்றாக இருக்கவேண்டும் . பழக்கத்தைவிட அதிக மேலானதாக இருக்கவேண்டும். அது ஒரு கடமையாகும். ஆனால் ஒருவர் இன்னும் மேலாகச் சென்று அதன் அர்த்தத்தின் சாதாரண தாக்கத்தை கடந்து செல்ல வேண்டும். அது தேவனோடு உள்ள உறவின் வெளிப்பாடு, பரமனோடு தொடர்பு கொள்ள ஓர் ஏக்கம். அது உள்ளான வாழ்வு, வெளியேயும் மேலேயும் உயர்ந்து அதன் தொடக்க நீர் ஊற்றை நோக்கிச் செல்லும் சீரான நீரோட்டம். அது மனிதனை நித்தியத்துடன் இணைக்கிறது.

ஆத்துமாவை தேவனுடைய சாயலாக வடிவமைக்கவும், தெய்வீக இரக்கத்தின் அளவை மேம்படுத்தவும், விரிவாக்கவும் தேவையான எல்லாம் ஜெபத்தில் உண்டு. ஆத்துமாவை தேவனோடு முழுமையான உறவில் இணைக்கவும் அதனிடம் எல்லாம் உண்டு. ஆத்துமா தேவனை அனுபவிப்பதில் பலப்படுத்தப்படவும், அகலப்படுத்தப்படவும், முதிர்ச்சியடையவும் அதனிடம் எல்லாம் உண்டு. ஜெபிக்கிற வழக்கம் இல்லாத ஒருவரை கிறிஸ்தவன் என்று அழைக்க முடியாது. அவனுக்கு எவ்வித முகாந்தரத்தினாலும் தன்னைக் கிறிஸ்தவன் என்று அழைக்கவோ, அதற்குரிய முக்கியத்துவங்களைப் பெற்றுக்கொள்ளவோ அதிகாரம் கிடையாது. அவன் ஜெபிக்காவிடில், நிச்சயமாக, சாதாரண பாவிதான். ஏனெனில், கிறிஸ்துவைப்போன்ற ஆவி மற்றும் வல்லமையின் ஆதாரத்துடன் உறவும், தொடர்பு கொள்ள மனிதனுடைய ஆத்துமாவிற்கு ஜெபம் மட்டுமே ஒரே வழியாகும். எனவே ஒருவர் ஜெபிக்காவிடில் அவன் விசுவாசக் குடும்பத்தைச் சார்ந்தவரல்ல.

இந்த பாடத்தில் ஜெபத்தின் ஒரு பகுதிக்கு நம் சிந்தனைகளை திருப்புகின்றோம். அதுதான் அதன் விடாப்பிடியான தன்மை. அது அவசரத்துடனும், விடாப்பிடியுடனும் நமது விருப்பங்களை தேவன் மீது வைப்பது; அவ்விதமான விட்டுவிடாத, மன இறுக்கமுடன் செய்யும் ஜெபம் ஓய்ந்திருக்காது. அதன் விண்ணப்பம் கேட்கப்படும்வரை, அது நிறைவேறும்வரை நின்றும் போகாது.

யாருக்கு தேவனைப்பற்றி சரியான எண்ணமும், தேவனுடைய குணாதிசயங்களைப்பற்றி வேதாகமக் கருத்துக்களும் இருக்கிறதோ, யார் தேவனை நெருங்கும் போது கிடைக்கும் நற்பலன்களைப் போற்றுகிறார்களோ, யார் தேவன் தனக்கென்று வைத்திருக்கிற உள்ளான தேவைகளைப் புரிந்து கொள்ளுகிறார்களோ, அந்த மனிதன் தான் ஆவல் கொண்டுள்ள, வெளிப்படையாக மனம் திறந்து பேசுகிற, விடாப்பிடியாக ஜெபிக்கும் குணம் உடையவர்கள். பரிசுத்த வேதாகமத்தில் ஜெபத்தின் கடமையைக் குறித்ததான வார்த்தைகள் அதிக அழுத்தத்துடன் கூறப்பட்டுள்ளன. தேவன்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஜெபமானது, நீதியுள்ள மனிதன் செய்யும் உள்ளார்வமிக்க ஊக்கமான ஜெபத்தின் வெளிச்சிதறல். அதுதான் அக்கினியாக பற்றியெரியும் ஜெபம்.  அது வலுக்குறைந்த, நிலையற்ற அக்கினி ஜுவாலை அல்ல. மிகக் குறுகிய கால அளவே நீடித்திருக்கிற திடீரொளி அல்ல. ஆனால் உறுதியுடன், நிதானமாக கொழுந்து விட்டு பிரகாசிக்கும் சுடரொளியாகும்.

சோதோமும், கொமோராவும் இரட்சிக்கப்படும்படியாக ஆபிரகாம் திரும்பத் திரும்ப அவர்களுக்காக வேண்டிக்கொண்ட நிகழ்ச்சி ஓயாமல் வற்புறுத்தி கெஞ்சி கேட்கிற ஜெபத்தையும், அதனால் கிடைக்கும் பலனையும் நாம் அறிந்து கொள்ள உதவுகிறது. யாக்கோபு இரவு முழுவதும் தேவனோடு போராடியது, விடாப்பிடியான ஜெபத்தின் வல்லமையையும், அது எப்படி வெற்றி பெறுகிறது என்பதையும் காட்டுகிறது.

நாம் ஏற்கனவே பார்த்தபடி, இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக வந்த தேவகோபாக்கினையை நிறுத்தும்படியாக மோசே நாற்பது நாள் இரவும், பகலும் ஜெபித்தார். அவர் காட்டிய முன்மாதிரியான வாழ்க்கையும், வெற்றியும், தற்கால விசுவாசத்தின் இருண்ட காலங்களில் ஊக்கம் கொடுக்கக்கூடியதாக உள்ளது. எலியா தொடர்ந்து ஏழுமுறை ஜெபத்தை ஏறெடுத்த போது அது அவருடைய ஜெபத்தின் சாதனையாகவும், விசுவாசத்தின் வெற்றியடையாளமாகவும் காணப்பட்டது. வானத்தில் மழை மேகங்கள் தோன்றின. ஒரு சமயத்தில் தானியேல் தளர்ந்து பலவீனமானபோதும் மூன்று வாரங்கள் தான் வேண்டிய காரியத்திற்கு ஜெபித்தபோது, பதிலும், ஆசீர்வாதமும் கிடைத்தது.

தன்னுடைய பூலோக வாழ்க்கையின் போது பல இரவுகள் இயேசுக்கிறிஸ்து ஜெபத்தில் கழித்தார். கெத்சமனேயில் தம்முடைய ஒரே வேண்டுகோளை, தீவிரத்தில் எவ்வளவும் குறைவுபடாமல், அவசரமாகவும் ஆனாலும் தாழ்மையோடும், விடாப்பிடியோடும், ஆத்துமாவின் முழு பெலத்தோடும், கண்ணீரோடும், இரத்தம் கலர்ந்த வேர்வையோடும் வெளிப்படும்படியாக மூன்று முறை ஏறெடுத்தார். விடாப்பிடியான ஜெபங்களின் போது அவர் வாழ்க்கையின் இன்னல்கள் தெளிவாக குறைக்கப்பட்டிருந்தன. அவர் வாழ்க்கையின் நோக்கங்கள் எல்லாம் வெற்றியடைந்தன.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]