CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

விடாமுயற்சி

விடாமுயற்சி

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

“நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாகா. நாம் தளர்ந்துபோகதிருந்தால், ஏற்ற காலத்தில் அறுப்போம்” (கலா 6:9)

“விடாமுயற்சி” என்றால், நீண்ட காலம் சோர்ந்துபோகாமல், தைரியத்தை கைவிடாமல், உறுதியாய் நிற்பதைக் குறிக்கிறது. வேதத்தின்படி, விடாமுயற்சியானது பாடுகளின் சூழ்நிலைகளை, பொறுமையோடு சகிப்பது மட்டுமன்றி, கீழ்ப்படிதலோடும், நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும், முன்னேறுவதாகும்.

சுகமளிக்கிற ஊழியத்திலே, அநேக மக்களை குணமாக்கிய தேவ மனிதன், ஓரல் ராபர்ட்டை பார்த்து, ஒரு நிருபம், ஒரு கேள்வியைக் கேட்டார்கள். நீங்கள் 100 வியாதிஸ்தருக்காக, ஊக்கமாக ஜெபிக்கிறீர்கள். ஆனால் அவர்கள் குணமடையாமல், மரித்துப் போகிறார்கள். அதற்குப் பிறகு, 101- ம் நபருக்காக ஜெபிக்க கூப்பிடுகிறார்களென்றால், உங்கள் மனநிலைமை எப்படியிருக்கும்? அவிசுவாசமும், அதைரியமும் உங்களை பற்றிப் பிடிக்காதா? என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த பக்தன் சொன்னார், “ஜெபிக்க வேண்டியது என்னுடைய கடமை. குணமாக்குவாரோ. இல்லையோ? அது கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. கர்த்தர் குணமாக்க வல்லமையுள்ளவர் என்று திட்டமும், தெளிவுமாக நான் விசுவாசிக்கிறேன். நான் சோர்ந்துபோகாமல், விசுவாசத்தோடு ஜெபிப்பேன்.” என்றார். அப். பவுல் சொல்லுகிறார். “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை, அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.” (2தீமோத் 1:12)

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ. என்ற மூன்று வாலிபர்களும், அன்றைக்கு சர்வாதிகாரியாயிருந்த நேபுகாத்நேச்சாரைப் பார்த்து, “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன், எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிசூளைக்கும் , ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை. நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.” (தானி 3:17,18)

அவர்கள் கர்த்தர் மேல் வைத்த அன்பிலும், விசுவாசத்திலும், தவறவில்லை. மரணத்தைக்கண்டு பயப்படவுமில்லை. பின் வாங்கவுமில்லை. கர்த்தர் அவர்களுடைய விசுவாசத்தைக் கனப்படுத்தினார். அந்த எபிரெய வாலிபர்கள், உறுதியாய்ப் பிடித்துக் கொண்ட கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? “நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய். அக்கினி ஜூவாலை உன்பேரில் பற்றாது.” (ஏசா 43:2) நேபுகாத்நேச்சார், அக்கினி சூளையை ஏழு மடங்கு, அல்ல எழுபது மடங்கு, சூடாக்கினாலும், அதைக் குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை. அக்கினியின் நடுவிலே எங்களோடு இருப்பேன் என்றவர், நிச்சயமாக அக்கினியின் உக்கிரத்தை அவித்துப் போடுவார்.

இரண்டு வித அக்கினி உண்டு. ஒன்று, இயற்கையான அக்கினி. அடுத்தது, பரிசுத்த ஆவியின் அக்கினி. பரலோக அக்கினி இறங்கி வரும்போது, உலக அக்கினியால், நம்மை எந்த விதத்திலும் சேதப்படுத்த முடியாது. பாடுகளாகிய அக்கினியை, தேவ பிரசன்னமாகிய அக்கினி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். தேவ பிள்ளைகளே, கர்த்தர் மேல் விசுவாசமாயிருங்கள் அவர் ஒரு நாளும் உங்களை விட்டு விடுவதில்லை. “நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே நான் உன் தேவன்” என்று அவர் சொல்லுகிறார். (ஏசா 41:10)

நினைவிற்கு – “யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே. நான் உனக்கு துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.” (ஏசா41:14)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]