CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

வில்லியம் பூத்தின் ஆத்தும ஆதாயம்

வில்லியம் பூத்தின் ஆத்தும ஆதாயம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

வில்லியம் பூத் தேவனிடத்தில் மனந்திரும்பியதின் காரணமாக தனது வட்டிக்கடை வேலையையோ, தன் தாய்க்கும் சகோதரிகளுக்கும் உதவி செய்வதையோ அவர் எவ்விதத்திலும் மாற்றிக்கொள்ளவில்லை. தேவனிடத்தில் மனந்திரும்புதலானது தன் வேலையிலிருந்தோ மற்ற மக்களிடம் பழகுதிலிருந்தோ அவரைத் தடுக்கவில்லை. ஆனால் அவரது வாழ்விற்கு அது ஒரு நோக்கத்தைக் கொடுத்தது. அவர் தேவனால் அழைக்கப்பட்டதைப் போன்றே தேவனை நோக்கி முன்னேறியும் சென்றார். ஆனாலும் பாவியாய் இருந்த தனக்கு ஓர் இரட்சகர் தேவை என்பதை அவர் உறுதியாக விசுவாசித்தார். “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனைக் கிருபையாக அனுப்பி  அவருடைய மரணத்தின் மூலமாக இரட்சிப்பின் வழியை நமக்கு ஏற்படுத்தினார். அதை விசுவாசிக்கிற அனைவரும் இரட்சிப்பை அடைய முடியும்.” என்ற மெத்தடிஸத்தின் கொள்கையின்படி அவர் தீவிரமாக செயல்பட்டார். அதன் விளைவாக அவர் ஏழ்மையின் கொடுமை, பணத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்ற ஏக்கம் ஆகியவற்றிலிருந்து விடுதலையடைந்தார். தேவனுக்கு ஊழியம் செய்வதின் மூலமாக அவர் தனது நிகழ்காலச் சூழ்நிலையையும் எதிர்காலத்தையும் தேவனுடைய கரங்களில் அர்ப்பணித்தார்.

இந்நாட்களில் பூத்தின் இணைபிரியா நண்பராக விளங்கியர் வில் சாம்சன் என்பவராவார். வில் என்று அனைவராலும் அவர் அன்புடன் அழைக்கப்பட்டார். வில் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவரான போதும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த வில்லியத்துடன் நட்புடன் பழகினார். வில் சாம்சன் மென்மையானவர், ஆனால் அவரது நண்பரான வில்லியம் மிகவும் உறுதிபடைத்தவராவார்.

இவ்விரண்டு வாலிபர்களுக்குள் ஏற்பட்ட நெருங்கிய நட்பிற்கு அவர்களுடைய  விசுவாசமே ஆதாரமாக விளங்கிற்று. வில் சாம்சனும் வில்லியம் பூத்தும் பக்தி வைராக்கியம் கொண்டவர்களாக விளங்கினார். அவர்கள் வளர வளர அவர்களுடைய பக்தியும் தீவிரமடைந்து விசுவாசத்தை செயலில் காட்ட வேண்டும் என்னும் அவர்களுடைய உறுதியின் காரணமாக, நட்டிங் ஹாம் நகரில் பரிதாபமான நிலையிலிருந்த ஒரு பிச்சைக்காரிக்கு அவர்கள் உதவ முற்பட்டனர். அவள் தங்குவதற்கான ஓரிடத்தைக் கண்டு பிடித்ததுடன் அவளுக்கு வேண்டிய உதவிகளையும் செய்தனர். இவ்விதமாக அவளுடைய கடினமான வாழ்வை கேட்பாரற்ற விதத்தில் தெருவில் சாவதையும் தவிர்த்தனர். இதுவே சமூக சேவையில் பூத்தின் முதல் அனுபவமாகும்.

பூத்தும் சாம்சனும் தெருக்கூட்டங்களில் நற்செய்தி அறிவித்து அதைத் தொடர்ந்து வீட்டுக்கூட்டம் நடக்கும் இடம் வரைக்கும் ஊர்வலத்தையும் நடத்திச்சென்றனர். இவ்விதக் கூட்டங்களை நடத்தும்படி வில் சாம்சன் தூண்டினார். நண்பர்களின் உற்சாகத்தின் பேரில் ஒரு வீட்டின் முகப்பில் போடப்பட்டிருந்த பீடத்தில் ஏறி, பிரசங்கம் செய்யத் தொடங்கினார். சில சமயங்களில் பூத், தெருவில் உள்ள வாலிபர்களைத் திருச்சபையின் கூட்டங்களுக்கு அழைத்து வருவார். இவ்விதமான அவரது முயற்சியால் “பீசும் ஜேக்” என்ற பெயர்பெற்ற குற்றவாளி டேவிட் கிரீன்பெரி என்பவர் பேசிய கூட்டத்தில் இரட்சிக்கப்பட்டார். இவ்விதமாக பூத்தும் அவரது நண்பரான வில் சாம்சனும் திருச்சபையின் நடைமுறை பழக்கங்களையும் மீறிச் செயல்பட்டு ஆத்துமாக்களை ஆதாயம் செய்து வந்தனர். ஆனால் இந்த நண்பரின் அகால மரணமானது வில்லியம் பூத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்தது.

நட்டிங்ஹாமில் உள்ள ஏழை மக்களைப்பற்றி அறிவதானது பூத்தை அவர்களுடைய ஆத்தும இரட்சிப்பிற்காக உழைக்கும்படி அதிகமாகத் தூண்டியது. அவர்களுடைய உலக வாழ்க்கை என்னும் பயணத்தின் போது அவர்கள் ஏழ்மைத் துன்பத்தின் வழியாகச் செல்ல நேர்ந்தாலும் அவர்களைப் பரலோகத்திற்கு வழி நடத்துவது அவருக்கு ஆறுதல் அளிப்பதாய் இருந்தது. எனவே அவர் பிறருக்காகவே உழைக்கவும் வாழவும் முடிவு செய்தார்.

வில்லியம் பூத் இளைஞராய் இருந்தபோது மெத்தடிஸ்டு திருச்சபையைச் சேர்ந்த பல பிரபல பேச்சாளர்கள் நட்டிங்ஹாம் நகருக்கு வந்த ஜாண் வெஸ்லி வலியுறுத்தி வந்த இரட்சிப்பின் ஆவிக்குரிய தன்மையை மீண்டும் நிலைநிறுத்த முயன்றனர். இவர்களில் ஜாண் ஸ்மித், டேவிட் கிரீன்பெரி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் தங்களது வித்தியாசமான பேச்சாற்றலினால் மக்களை மனந்திரும்பச் செய்ததுடன் பரிசுத்த வாழ்விற்கான வழிகாட்டிகளாயும் விளங்கினார். பூத்தின் உத்தம குணத்தை அறிந்த டேவிட் கிரீன்பெரி அவரைப் பிரசங்கம் செய்யும்படி உற்சாகப்படுத்தினார். மேலும் அவரது வசீகரமான தோற்றமும் முனைப்பான செயல்திறனும் மக்களைக் கவருவதாய் அமைந்திருந்தன. தனது சுயநலமான கூச்சத்திலிருந்து விடுபட்டு, தேவனுக்காகச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றும்படி வாலிபரான பூத்திற்கு டேவிட் கிரீன்பெரி அறைகூவல் விடுத்தார்.

இச்சமயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மெத்தடிஸ்டு பேச்சாளரான ஜேம்ஸ் காஹி என்பவர் வில்லியம் பூத்தின் வாழ்வில் பெரிய தூண்டுதலை ஏற்படுத்தினார். பூத் இரட்சிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து 1846-ம் ஆண்டில்தான் காஹியின் பிரசங்கத்தை பூத் முதன் முதலாகக் கேட்க நேர்ந்தது. அவருடைய பேச்சானது பூத்தின் சிந்தனையை இங்கிலாந்தின் எழுப்புதலுக்காகச் செயல்படும்படி தூண்டியது.

சார்லஸ் கிராண்டிசன் பின்னி, போபி பால்மர் ஆகிய அமெரிக்க நாட்டு நற்செய்திப்பணியாளர்களின் பேச்சுகளும் வில்லியம் பூத்தின் பிற்கால வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியபோதிலும், ஜேம்ஸ் காஹி தான் பூத்தின் சிந்தனையிலும் செயலிலும் இங்கிலாந்தில் நற்செய்திப்பணி செய்ய வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியதாவார். ஆகவே பூத், காஹியின் வாரிசாக உருவானார். தெளிவாக திட்டமிடுதலின் மூலமாக அநேகர் மத்தியில் மனந்திரும்புதலை ஏற்படுத்த முடியுமென்பதை அவர் பூத்திற்குத் தெளிவுப்படுத்தினார். திட்டமிட்டு, விளம்பரம் செய்து, ஜெபித்து நடத்தப்படும் நற்செய்தி ஊழியங்கள் வெற்றிபெறும் என்பதை அவர் தெரிவித்தார். அவர்கள் ஒருவரை ஒருவர் 1846-ம் ஆண்டில் சந்தித்தது முதல் 1812-ம் ஆண்டில் பூத் மரிக்கும் வரையில் பெருங்கூட்டங்களின் மூலமாகவும், வீடுகளைச் சந்திப்பதின் மூலமாகவும், தனிப்பட்ட சாட்சியின் மூலமாகவும் ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணவேண்டுமென்ற எண்ணம் பூத்தின் வாழ்வில் மேலோங்கி இருந்தது.

தேவன் கிறிஸ்துவுக்குள்ளாக வில்லியம் பூத்தைக் கண்டார். வில்லிம் பூத் விசுவாசத்தின் மூலமாகத் தேவனிடத்தில் திரும்பினார். அப்போதிலிருந்து வில்லியம் பூத்துடைய வாழ்வின் அஸ்திபாரமாக இருந்து உறுதியும் மனமாற்றமும் தொடர்ந்து நீடித்தது.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]