[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
ஒரு தாய் தனது பத்து வயது மகளுடன் ரயிலை விட்டு இறங்கி வெளியே செல்வதற்கான வாசலை றோக்கி சென்று கொண்டிருந்தாள். அது கடுமையான குளிர்காலம். ஒரு வயதான பிச்சைக்காரன் குளிரில் நடுங்கிக் கொண்டே ஒரு சிறிய பாத்திரத்தை நீட்டி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.அந்தத் தாய் தன் மகளிடம் சில நாணயங்களைக் கொடுத்து பிச்சைக் காரன் நீட்டிக் கொண்டிருந்த பாத்திரத்தில் போடுமபடி கொடுத்தாள். அந்த சிறிய மகள் பிச்சைக்காரனைப் பார்த்த “தாத்தா, இந்தாங்க” என்று சொல்லி பாத்திரத்தில் நாணயங்களைப் போட்டாள். பின்னர் தாயும் மகளும் அதைக் கடைந்து நடந்து சென்று கொண்டிருந்தனா். யாரோ தங்களை பின் தொடர்வதை உணர்ந்து இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அதே பிச்சைக்காரன் தங்களை நோக்கி வேகமாக வருவதை கண்டு அந்தத் தாயார் “என்ன வேண்டும்?” என்று கேட்டார்கள். “அம்மா, இன்றுவரை என்னைத் தாத்தா” என்று யாரும் சொன்னதே இல்லை. ஆனால் உங்களுடைய சின்ன மகள் என்னைப் பார்த்து அன்போடு “தாத்தா” என்றழைத்தாள். மீண்டும் ஒரு முறை என்னைத் “தாத்தா என்று அழைக்கச் சொல்லமாட்டீர்களா? என்று கண்ணீரோடு கேட்டான்.
.
இப்படிப்பட்ட நம்முடைய அன்பான சொல்லுக்காக அன்பின் செயலுக்காக இரட்சக்கணக்கான மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கிஙார்கள். உண்மையான கிறிஸ்தவ அன்பை வெளிப்படுத்தன் கற்றுக் கொள்ள வேண்டும். உழையான சேற்றில் கிடந்த நம்மை தேவன் தமது அன்பின் காரணமாக நம்மைத் தூக்கி எடுத்தார். தேவன் நமக்கு காட்டிய அதே அன்பை, அதே கரிசனையை நாமும் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த கலைகளை, மேன்னையமன விஞ்ஞானத்தை கற்றுக் கொள்ளலாம், மேன்மையான இடத்தை அடைந்து கொள்ளலாம். ஆனால் மற்றவர்களுக்கு அன்பையும் தயையையும் காட்டக் கற்றுக் கொள்ளத் தவறுவோமானால் நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தைவிட்டே தவறிவிடுகிறோம். நாம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் போது தேவன் நம் மூலமாக மற்றவர்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறார்.
“அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவு இருக்கிறார்” (1 யோவான் 4:8)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]