CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

அற்பமான ஊழியத்திலும் உண்மையாயிருங்கள்

அற்பமான ஊழியத்திலும் உண்மையாயிருங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

பல திறமைகள் நிறைந்த வாலிபன் ஒருவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தன் ஜீவியத்தை ஒப்புவித்தான். அவருக்கென்று முழு நேரமும் ஊழியஞ்செய்ய விரும்பினான். சபை ஊழியஞ்செய்ய விரும்பிய பல சபைகளை அணுகினான். ஆனால் அவனுக்கு அனுகூலமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு சபையை அணுகினான். அது பெரிய சபை. பத்துக்கும் மேற்பட்ட உதவிப்போதகர்கள் அந்த சபையிலே இருந்தார்கள். அங்குள்ள தலைமைப்போதகர் அவனைச் சேர்த்துக் கொண்டார். தன்னுடைய திறமைகளைப் பாராட்டி மிகப்பொறுமையான ஊழியத்தை தன்னிடம் ஒப்புவித்தார். என்று மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தான். ஆனால், தலைமைப்போதகர், அவனை காலணிகள் கழட்டி வைக்குமிடத்தில் அவற்றைக் கவனித்து ஒழுங்குபடுத்த நியமித்தார். அவனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோபமும் எரிச்சலும்தான் வந்தது. ஆனாலும் சற்று கட்டுப்படுத்திக்கொண்டான். அதே வேலையில்தான் அவன் நீண்ட நாட்கள் தொடர்ந்தான். அவன் இருதயத்திற்குள்ளே குமுறி அழுதான். ஆனால், ஆண்டவர் அவனைப் பொறுமையோடிருக்கும்படிச் சொன்னார்.

அவனுக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ஆராதனைக்கு வருவோர் கழட்டி வைக்கும் காலணிகளையெல்லாம் சுத்தம் செய்து பாலிஷ் போட ஆரம்பித்தான். ஆராதனை முடிந்து வருவோர்.தங்கள் காலணிகள் பாலிஷ்போட்டு பிரகாசமாய் வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆராதனைக்குத் தவறாது வர உற்சாகமடைந்தனர். இதைக்கேள்வியுற்றோர், தங்கள் காலணிகள் இலவசமாகப் பாலிஷ் போடப்பட வேண்டுமென்று விரும்பி இந்த ஆலய ஆராதனைக்கு வர ஆரம்பித்தார்கள். சபையினர் எண்ணிக்கை கூட ஆரம்பித்தது.

புத்தாண்டு முழு இரவு ஆராதனை நடந்தது. அந்த வாலிபன் மிகுந்த உற்சாகத்தோடு பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தான். திடீரென்று தலைமைப் போதகர் ஒரு அறிவிப்பைக் கொடுத்தார். இந்த வாலிபனை தனக்கு அடுத்த இரண்டாவது ஸ்தான போதகராக நியமிக்கிறேன் என்றார். புத்தாண்டு முதல் அவன், தலைமைப் போதகருக்கு அடுத்த நிலைப் போதகர். மகிழ்ச்சியில் அவனது கண்களில் கண்ணீர் வடிந்தோடியது. “கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்”(மத் 25.21) என்று இயேசு சொன்னது அவனது இருதயத்தில் தொனிப்பதை உணர்ந்தான். வெளியரங்கமாக யாவரும் அறிய ஆண்டவர் பிரதிபலனைக் கொடுக்கிறவர்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]