சங்கிலி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று திரும்பும்பொழுது ஒரு அம்பாசிடர் கார் நிறைய பொருட்களோடு வந்திறங்கினான். கழுத்திலும் கையிலும் தங்கம் மினுங்க ஒரு தோற்றம். அது பக்கத்துவீட்டு கண்மணியின் கண்ணில் பட தன் கணவரையும் வெளிநாட்டிற்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் உருவாகியது.
.
ஒன்றிரெண்டு நாட்கள் மனதில் அடக்கிவைத்த அந்த காரியம், அவளுக்கு அதிக மன அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்தது.
.
அது அவள் மனதை உடைத்து வெளியே வந்த வார்த்தை. நீரும் இருக்கிறீரே பக்கத்து வீட்டு சங்கிலியைப்பாரும், என்று அடுக்க ஆரம்பித்த அவள், நீரும் எப்படியாவது வெளிநாடு செல்ல வேண்டும். நம்முடைய குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டுவரவேண்டும் என்று முடித்தாள்.
.
பாவம் அன்னார், சற்று நேரம் அமைதியாக இருந்தார். நம்ம வீட்டில் என்னதான் குறை. தேவன் அற்புதமாக நடத்திவருகிறாரே, இப்பொழுது எதுவும் பேசினால் வீட்டில் பிரச்சனைதான் என்பதை மனதில் புரிந்துக்கொண்டார். இந்த உலக ஆசை எத்தனை கொடூரம் என்பதை அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதை அவர் நினைக்கலாயினார்.
.
தேவ பக்தியுள்ள அந்த மனிதன் தன் குடும்பத்தை நன்றாக நடத்த அறிந்திருந்தான். ஆண்டவரின் பாதத்தில் சென்று இந்த காரியத்தில் எனக்கு உதவும் ஆண்டவரே என்று விண்ணப்பித்தான்.
பரிசுத்த வேதாகமத்திலிருந்து லோத்து, நகோமி, இளையகுமாரன் வாழ்க்கைகளை நாசுக்காக சொல்லியும் கேட்டபாடில்லை.
.
தனது குடும்ப நபர் ஒருவரை அணுகி இதற்காக முன் பணமாக பேசி 70000 ரூ கொடுத்தார். ஒரு மாதத்தில் விசா வரும் என்று சொன்ன அந்த வார்த்தை பொய்யாக மாறியது. ஒரே டென்சன், ஏமாந்துவிட்டோமோ! ஐயோ! என் கணவர் வேண்டாம் என்று சொல்லியும் முந்திவிட்டேனோ என்று தன்னையே உருவக் குத்திக்கொண்டாள். மறுபக்கத்தில் கணவரோ! இதை கண்டுக்கொள்ளாதவராகவே இருந்தார்.
.
இரண்டு நாட்கள் களித்து கண்மணி நான் சொன்னதை நீ கேட்டிருப்பாயேயானால் இவ்வளவு ரூபாய் இழந்து இந்த பாடத்தை கற்றிருக்க வேண்டாமே என்றார். அவள் வெட்கி தலைகுனிந்தாள்.
.
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1தீமோ-6:10
.
இன்றும் அநேகர் அப்படிதான், வேதவசனத்திற்கு கீழ்படியாமல் அங்கும் இங்கும் அலைந்து திரியும்பொழது தேவன் அவர்களுக்கு செய்முறையிலேயே (Practical) பாடங்களை கற்றுக்கொடுக்கிறார். அருமையானவர்களே! நாம் பேராசைகளை களைந்து போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1தீமோ-6:6 ஏன்பதை இந்த கதையின் மூலமாக மனதில் நிறுத்திக்கொள்ளுவோம்.
.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென். l
க முன் பணமாக பேசி 70000 ரூ கொடுத்தார். ஒரு மாதத்தில் விசா வரும் என்று சொன்ன அந்த வார்த்தை பொய்யாக மாறியது. ஒரே டென்சன், ஏமாந்துவிட்டோமோ! ஐயோ! என் கணவர் வேண்டாம் என்று சொல்லியும் முந்திவிட்டேனோ என்று தன்னையே உருவக் குத்திக்கொண்டாள். மறுபக்கத்தில் கணவரோ! இதை கண்டுக்கொள்ளாதவராகவே இருந்தார்.
இரண்டு நாட்கள் களித்து கண்மணி நான் சொன்னதை நீ கேட்டிருப்பாயேயானால் இவ்வளவு ரூபாய் இழந்து இந்த பாடத்தை கற்றிருக்க வேண்டாமே என்றார். அவள் வெட்கி தலைகுனிந்தாள்.
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1தீமோ-6:10
இன்றும் அநேகர் அப்படிதான், வேதவசனத்திற்கு கீழ்படியாமல் அங்கும் இங்கும் அலைந்து திரியும்பொழது தேவன் அவர்களுக்கு செய்முறையிலேயே (Practical) பாடங்களை கற்றுக்கொடுக்கிறார். அருமையானவர்களே! நாம் பேராசைகளை களைந்து போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1தீமோ-6:6 ஏன்பதை இந்த கதையின் மூலமாக மனதில் நிறுத்திக்கொள்ளுவோம்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.