[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
ரஷ்யக் கிராமம் ஒன்றில் ஒரு ஏழைக் குடும்பம் வசித்து வந்தது. தாய் ஒரு விதவை, ஆயினும் பக்கிதியுள்ள கிறிஸ்தவப் பெண். கை கால் ஊனமான 12 வயது பையன் மூத்தமகன், அவனால் ஒரு இடம்விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்ந்தும் போக முடியாது. அவனுடைய தங்கைமார் இருவர்.
.
அது கொடிய யுத்த காலம். நெப்போலியனது பட்டாளம் ரஷ்யாவிறகுள் மிகவும் முன்னேறிவிட்டது. ஆயினும் குளிரின் மிகுதியால் அவன் சேனை பின்வாங்க நேரிட்டது. பின்வாங்கும் போது வழியிலுள்ள கிராமங்களைக் கொள்ளையிட்டு நாசம் செய்தனர். அப்படிப்பட்ட கிராமத்தினர் தப்பிப் பிழைக்க வகை தேடினர். தங்கள் உடமைகளை அள்ளிக் கொண்டு ஓடினர்.
.
இந்தக் ஏழைக் குடும்பம் வசித்த கிராமமும், அந்தச் சேனை பின்வாங்கும் வழியில் இருந்தது. கிராமத்தின் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற வேறிடம் சென்றனர். ஆயினும் இந்த ஏழைக் குடும்பத்தின் மீது யாரும் அக்கறை காட்டவில்லை. அந்த ஏழை விதவைக்கு உதவக் கூடிய நன்பர்கள் யாரும் இருக்கவில்லை. பையனால் நகர முடியாது. தாய்க்கு சுமந்து செல்லத் திராணியும் இல்லை.
.
மகனுக்கு ஒரே கவலை தனக்காகத் தன் தாயும், சகோதரிகளும் கஷ்டத்திற்குள்ளாகப் போகிறார்களே என்றெண்ணி வருந்தினான். ஒரு பக்கம், அம்மா அவனைத் தனியே விட்டுவிட்டுத் தங்கைமாருடன் சென்றுவிடுவார்களோ என்ற பயம். மறுபக்கம் தன்னால் அவர்கள் கஷ்டப்படக் கூடாதே என்ற எண்ணம். இறுதியாகத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்.
.
“அம்மா, நீங்கள் தங்கைமாருடன் தப்பி ஓடிவிடுங்கள். என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஊனனாகிய என்னை போர்வீரர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்” என்றான். ஆனால் அவன் தாயாரோ, “இல்லை மகனே, கடவுள் நம்மைக் கைவிடமாட்டார்” என்று உறுதியாகக் கூறினாள்.
.
“மகனே கலங்க வேண்டாம். திக்கற்றோருக்குத் தெய்வமே துணை. தம்மை நம்பும் பிள்ளைகளுக்கு அவர் கோட்டையும் மதிலுமாய் இருக்கிறார். கடவுளால் கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்று அவனைத் தேற்றினாள். அந்நாளும் வந்துவிட்டது. இரவில் தங்களைத் தேவனுடைய கரங்களில் ஒப்புவித்து நிம்மதியாகத் தூங்கினர். காலையிலே சத்துரு கிராமத்திற்குள் வந்து விட்டான்.
.
அதிகாலையில் எழும்பிப் பார்த்தனர். உண்மையாகவே கடவுள் அவர்களின் தாழ்ந்த குடிசையைச் சுற்றிலும் ஒரு பெரிய கோட்டையை எழுப்பி இருந்தார். அதைப் பார்த்து பிரமித்துப் போய் கடவுளை நோக்கித் துதித்துப் பாடினார்கள்.
.
நடந்ததென்ன?
.
இரவில் குளிர் அதிகமாயிருந்தது. அதுவுமின்றி, இரவு முழுவதும் பனிப்புயல் வீசியது. குடிசையைச் சுற்றிலும் பனி விழுந்தது. மேலும் மேலும் பனிவிழ, உறைபனி மதிலைப் போல் சுற்றிலும் எழும்பியது. குடிசை மிகவும் தாழ்வாயிருந்ததால், குடிசை உறைபன் மதில்களுக்குள் முற்றிலுமாக மறை்க்கப்பட்டது.
.
.
இருதினங்களாக போர்வீரர்கள் அகிகிராமத்தை கொள்ளையடித்து அட்டூழியம் செய்தனர். அந்த ஏழைக் குடிசையோ அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டது.
.
“நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெரு வெள்ளத்திற்குத் தப்பும் அடைக்கலமும். வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்” (ஏசாயா 25:4).
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]