[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!
ஒவ்வொரு நாளிலும் “காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணும்” (சங் 65:8) கர்த்தருடைய நாமத்தில் நலமுடன், வளமுடன் (தேவ) பலமுடன் வாழ்த்துகிறேன். கர்த்தருடைய அடையாளங்கள் அதிகமாய் நடக்கும் ஆண்டு இது.
இது களிகூரும் ஆண்டு அனுதினமும் (THIS IS A YEAR REJOICING) “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள் என விசுவாசித்து களிகூர்ந்து மகிழுங்கள்” சங் 118:24
01. கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழுங்கள். அவர் உங்கள் பெலனாய் இருப்பார். உயர்ந்த ஸ்தலங்களில் நடக்கப்பண்ணுவார். (ஆபகூக் 3:18,19, சங் 33:1)
02. பயப்படாமல் களிகூருங்கள் கர்த்தர் பெரிய காரியங்களைச்செய்வார். எதைக் குறித்தும் கவலைப்படாதேயுங்கள் (யோவேல் 2:21)
03. உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் களிகூருங்கள். தக்கபடி இயற்கை மழையை, ஆவியின் மழையை ஊற்றுவார். (யோவேல் 2:23) இது பின்மாரியின் ஆண்டு.
04. வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ தேவன் உங்களை காலையிலே அவரது கிருபையால் திருப்தியாக்குவார். (சங் 90:14)
05. கர்த்தரை துணையாகக் கொண்டு அவரது செட்டைகளின் நிழலில் களிகூருங்கள். கர்த்தரை உங்கள் ஆத்துமா தொடர்ந்து பற்றிக்கொள்ளட்டும். கர்த்தரின் வலது கரம் உங்களை தாங்குவதை காண்பீர்கள். (சங் 36:7,8)
06.கர்த்தரில் களிகூர்ந்து அவரது இரட்சிப்பில் மகிழ்ந்திருங்கள். தேவன் உங்களைப் பொல்லாத பலவான் கைக்கும், கொள்ளையிடுவோர் கைக்கும் தப்புவிப்பார். (சங் 35:9,10)
07.தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள் என்று சொல்லும் ஆராதனைகளில், சபைகளில் களிகூருதல் காணப்பட போகிறது (சங் 66:6)
08.திரளான செல்வத்தில் களிகூருவதுபோல கர்த்தரின் சாட்சியின் வழியில் களிகூருங்கள்.(சங் 119:111)
09.சொப்பனம் காண்பது போல உங்கள் சிறையிருப்பு திரும்புவதால் விசுவாசத்தோடு களிகூருங்கள். (சங் 126:1-6)
10.தேவன் எழுந்தருளுவதால் சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்கள். புகை பறக்கடிக்கப்படுவதுபோல, மெழுகு அக்கினிக்கு முன் உருகுவதுபோல சத்துருக்கள் அழிவார்கள் (சங் 68:1-3)
இந்த ஆண்டில் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும் போதும், காணாத ஆத்துமாக்களை தேடும் போதும் களிகூர்ந்து மகிழும் அனுபவம் உண்டாகும். 1. பரலோக களிகூருதல் 2. தேவ தூதர் முன்பாக களிகூருதல் அதிகம் காணப்போகிறோம் (லூக்கா15:6,9,24) REPENT & RETURN TO GOD TO REJOICE & RECEIVE
களிகூர(ரும்) நாம் என்ன செய்ய வேண்டும்
01. கர்த்தரை நம்ப வேண்டும் (சங் 28:7)
02. பாடி, துதிக்க, சேவிக்கவேண்டும் (சங் 33:12,சங் 2:11,வெளி 19:7)
03. கர்த்தருக்கு ஒப்பானவர் யார் என்று சொல்லவேண்டும். (சங் 35:9)
04. கர்த்தருக்கு காத்திருக்க வேண்டும். (சங் 33:20)
05. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லவேண்டும். (சங் 40:16)
06. தாயைப்போல தேற்றும் கர்த்தருடைய செய்கைகளை கவனியுங்கள் (சங் 65:18, ஏசாயா 66:13-14)
07. பரிசுத்த ஆவியில் களிகூரவேண்டும். (ரோமர் 14:17, லூக்கா 1:44,47)
08. நாவிலே களிகூர வேண்டும். (யோவேல் 1:16)
09. ஆனந்த முழக்கமிட வேண்டும். (சங் 32:11)
10. உங்கள் எழும்புகளும் களிகூரட்டும் (சங் 51:8)
இறுதியாக வல்லமையுள்ள தேவன் உங்களைப்பார்த்து உங்களில் அன்புகூர்ந்து அமைதியாய் உங்களில் களிகூரப்போகிறார் (செப் 3:17, உபா 30:9)
LET THIS NEW YEAR BE A YEAR OF
REJOICING & RECEIVING GOD BLESS YOU
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]