[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
தள்ளப்பட்டேன் எனும் உணர்வு இன்று எங்கும் தலைவிரித்தாடுகிறது. சகல சண்டை சச்சரவுகளுக்கும். ஏன் கொலை பாதகங்களுக்கும் கூட இதுதான் மூலக்காரணம். இப்பிரச்சனைக்கு பதில் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வுதான். காயீன், ஆபேலின் வாழ்க்கை இதை சித்தரிக்கிறது.
காயீன் காணிக்கை:
காயீன், தான் அங்கீகரிக்கப்படவில்லை என்று ஆத்திரப்பட்டபொழுது பொல்லாதவனுக்கு தன்னை திறந்து கொடுத்தான். உடனே அவனுடைய முகநாடி வேறுபட்டது. (ஆதி 4:5-7, 1யோவா 3:12) காயீன் நிலத்தின் கனிகளைக் காணிக்கையாக கொண்டு வந்தான். நிலம் ஏற்கனவே சபிக்கப்பட்டது. அந்த நிலத்தின் கனிகளைக் கர்த்தர் எப்படி அங்கீகரிப்பார். கிறிஸ்துவுக்கு வெளியே வாழும் வாழ்க்கை சபிக்கப்பட்டது. கிறிஸ்து இல்லாதவன், எவ்வளவு பாடுபட்டு, காணிக்கை கொடுத்து தேவனை சமாதானப்படுத்த முயன்றாலும் அவர்களைக் கர்த்தர் அங்கீகரிப்பதில்லை. அங்கீகரிக்கப்படவில்லை எனும் ஆத்திரத்தால் இன்றைய மனுக்குலம் ஒருவரையொருவர் கடித்துப்பட்சிக்கிறது. (தீத்து 3:3) தேவனை பிரியப்படுத்த அவர்கள் எடுக்கும் பிரயாசங்கள் எல்லாமே வீணாகிறது.
ஆபேலின் காணிக்கை:
ஆபேல் தன் விசுவாசத்தால் காயீனிலும் அதிக மேன்மையான பலியை தேவனுக்கு செலுத்தினான். நீதிமானென்று சாட்சி பெற்றான். அவன் காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சி கொடுத்தார். அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். (எபி 11:4) கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டபொழுதே பிரியமானவருக்குள் நித்தியமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டீர்கள். உங்கள் ஜெபங்களும், காணிக்கைகளும் அவரைப் பிரியப்படுத்துகின்றன. அவரால் அங்கீகரிக்கப்படுவதற்காக நீங்கள் இனிப்போராட வேண்டியது இல்லை.
ஆபேலின் காணிக்கையில் சிந்தப்பட்ட இரத்தம் தேவனின் கவனத்தை ஈர்த்தது. நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்தபொழுது உங்கள் பாவங்களுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தை விசுவாசத்தோடு சார்ந்து கொண்டீர்கள். அந்த எளிய விசுவாசத்தைக்கண்டு களித்த கர்த்தர் தமது குமாரனுடைய களங்கமற்ற பரிசுத்தத்தை உங்கள் கணக்கில் எழுதிவிட்டார்.
இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தாவினால் நீங்கள் அங்கீகரிக்கப்பட்டவர்கள். இதைவிட பெரிய பாக்கியம் ஏது? நாட்டை ஆளும் அரசன் கண்களில் தயவு கிடைப்பதைவிட மேன்மையானது இது. இராஜாவின் தயவை, எஸ்தர் தாராளமாய் அனுபவித்தாள். (எஸ்தர் 5:2-8) நீங்களோ, மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்டீர்கள். நித்தியமாய் நன்றி சொல்ல கடன்பட்டவர்கள் நீங்கள். கிறிஸ்துவுக்குள் அவரது தகுதி, உங்கள் தகுதியாகிவிட்டது. தேவனால் அங்கீகரிக்கப்பட்டதே போதும் என்று நீங்கள் திருப்தியாய் வாழாவிட்டால் மனிதர்கள் உங்களைத் தள்ளும்பொழுது முறுமுறுப்பீர்கள். எந்த அளவுக்கு கிறிஸ்துவுக்குள் உங்களைப் பார்க்கிறீர்களோ, அந்த அளவிற்கு முறுமுறுப்பை மேற்கொள்வீர்கள்.
கிறிஸ்துவுக்கு வெளியே நீங்கள் என்ன செய்தாலும், எவ்வளவு பாடுபட்டாலும் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. (எபி 11:6) பிதாவின் மனமகிழ்ச்சியாய் இருந்த கிறிஸ்துவுக்குள் நீங்கள் இருப்பதால், நீங்கள் கொடுக்கும் சின்னஞ்சிறு காணிக்கையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியும், சுகந்த வாசனையுமாகி பிதாவின் உள்ளத்தைப் பரவசப்படுத்துகிறது. (நீதி 8:30-31, பிலி 4:18) கிறிஸ்து மட்டுமே பிதாவின் உள்ளத்தை முழுவதும் பிரியப்படுத்தினவர் (மத் 3:16-17, மத் 12:18, மத் 17:5, மாற் 1:11, 9:7, லூக் 3:22, 9:35, 2பேது 1:17, ஏசா 42:1)
கிறிஸ்துவுக்குள் நீங்கள் ஒரு பாவி அல்ல. கிறிஸ்துவுக்குள் நித்தியமாய் அங்கீகரிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டவர்கள். அவரது தயவை சம்பாதிப்பதற்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். கிறிஸ்து உங்கள் பிதாவை மகிழ்ச்சியாக்கி, அவரால் கனப்படுத்தப்பட்டார். அவர் மீது விசுவாசம் வைத்ததால், அவரது அங்கீகாரத்தை நிரந்தரமாய் பெற்றுக்கொண்டீர்கள். தேவனால் அங்கீகரிக்கப்படுவது இனி உங்களுக்கு முடிந்து விட்ட பிரச்சனை. பழைய ஏற்பாட்டுப் பக்தர்கள் தங்கள் கிரியைகளினால் அங்கீகரிக்கப்பட்டார்கள். ஆனால் நீங்களோ, கிறிஸ்து செய்து முடித்தவைகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
கிறிஸ்து செய்து முடித்தவைகளின் மேலுள்ள எளிய விசுவாசமே, உங்களை நீதிமானாக்கி தேவப்பிரியராக்கிவிட்டது. உங்கள் ஜெபத்தாலும், உபவாசத்தாலும், தியாகத்தாலும், கிரியைகளினாலும் நீங்கள் தேவப்பிரியராய் மாற நினைத்தால் கிறிஸ்துவின் கிரியைகளை மட்டுப்படுத்துகிறீர்கள். விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம். (எபி 11:6) விசுவாசத்தினால் வராத எதுவும் பாவமே. (ரோமர் 14:23)
இன்று பல விசுவாசிகள் தங்கள் கிரியைகளை தேவன் கனப்படுத்தவில்லை என்று தேவன்மீதே கோபப்படுகிறார்கள். அவரை எப்படியாவது பிரியப்படுத்த வேண்டுமென்று அயராது உழைத்து அலுத்துப்போனவர்களுமுண்டு. ஆனால் இரகசியம் என்ன தெரியுமா? நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருப்பதாலும், அவர் உங்களுக்காகச் செய்த தியாகத்தாலும் நீங்கள் ஏற்கனவே பூரணமாய் அங்கீகரிக்கப்பட்டு விட்டீர்கள். சஞ்சலத்தோடு போராடுவதை நிறுத்தி, அவரைச் சார்ந்து கொள்ளுங்கள். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சலித்து வாழும் வாழ்க்கையல்ல, சந்தோஷமாய் வாழும் வாழ்க்கை.
பிரியமானவர்களே, இந்த முழு உலகமும் உங்களைத் தள்ளினாலும், உங்கள் பரமதகப்பன் உங்களை அன்புப்புன்னகையோடு அரவணைக்கிறார். மக்கள் உங்களை மட்டுப்படுத்தும் பொழுது, அசட்டை செய்யும் பொழுது, சோர்வடைந்து சஞ்சலப்படாதீர்கள். கிறிஸ்து போதும் என்று அவரைச் சார்ந்து கொள்ளுங்கள். அவருக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள். சர்வவல்லவரால் மேன்மைப்படுத்தப்பட்ட நீ்ங்கள் உங்கள் இரட்சகரின் விலையேறப்பெற்ற சொத்துக்கள். இனி இந்த உலகத்தி்ல் உங்களுக்கு என்ன வேண்டும்?
என்னையும் என் காணிக்கைகளையும் நீர் அங்கீகரித்திருக்கிறீர், அதினாலே என்னை நீதிமானென்றும், என்னுடைய காணிக்கைகளைக் குறித்தும் நீர் சாட்சி கொடுக்கிறீர். நான் இலவசமாய் உம்முடைய கிருபையினாலே நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன். நான் உம்முடைய நேசகுமாரன். என்னில் நீர் பிரியமாயிருக்கிறீர். நான் பிரியமானவருக்குள் சுவிகார புத்திரனாக முன் குறிக்கப்பட்டுவிட்டேன். எல்லாம் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால், உமக்கு நன்றி. (எபி 11:4, ரோம 3:23, மத் 3:17, எபே1:6)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]