CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

கிறிஸ்துவுக்குள் உலகிற்கே ஆசீர்வாதம்

கிறிஸ்துவுக்குள் உலகிற்கே ஆசீர்வாதம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

ஆபிரகாமின் ஆசீர்வாதம் அவன் சந்ததிக்கு மட்டுமல்ல, அவனுக்குள், பூமியிலுள்ள சகல வம்சங்களும் ஆசீர்வதிக்கப்பட்டது. இன்றும் அகில உலகிலும் உள்ள கிறிஸ்தவரும், முகம்மதியரும், யூதரும் ஆபிரகாமினால் ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகிறார்கள்.

ஆபிரகாமின் வித்தாகிய இயேசு, அகில உலகையும் ஆசீர்வதிக்கும் படி வந்தார். ஒவ்வொரு விசுவாசியும் முழு உலகையும் ஆசீர்வதிக்க வாஞ்சிக்க வேண்டும். உங்கள் ஆசீர்வாதத்திற்கு நீங்களே  எல்லையைக் குறிக்காதீர்கள். அகில உலகையும் ஆசீர்வதிப்பதே தேவனுடைய கனவு. இயேசு உலகத்தில் இவ்வளவாய் அன்பு கூர்ந்து அதை இரட்சிக்க வந்தார்.(யோவான் 3:16) தனது புது சிருஷ்டிகளும் உலக தரிசனத்தோடு முழு உலகையும் சந்திக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

பூமியின் கடைசி பரியந்தமும் தேவனுடைய ஆசீர்வாதங்களைக் கொண்டு செல்வதற்காகவே புது சிருஷ்டிகள் மேல் பரிசுத்த ஆவியானவர்  இறங்கி வந்திருக்கிறார். கிறிஸ்துவுக்குள் வாழும் நீங்கள், ஒரு இடத்திற்கோ, இனத்திற்கோ கட்டுப்பட்டவர்கள் அல்ல. நீங்கள் அகில உலகத்திற்கும் ஆசீர்வாதம் (மத் 28:18-20, லூக் 24:47, மாற் 16:15,அப் 1:8)

எந்த அளவிற்கு கிறஸ்துவுக்குள் இருக்கிற சிலாக்கியங்களை அறிந்து, அதை அனுபவிக்கிறீர்களோ, அந்த அளவு, உங்கள் ஆசீர்வாதத்தின் எல்லை முழு உலகையும் தொடும்வரை விரிந்துகொண்டே சொல்லும். முழு உலகமும் தன்னால் ஆசீர்வதிக்கப்படும் என ஆபிரகாம் கனவில்கூட நினைத்திருக்கமாட்டான். நாம் வேண்டிக்கொள்வதற்கும், நினைப்பதற்கும் மிக அதிகமாய் செய்பவர் நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். (எபே 3:20)

உங்கள் இரட்சகர் இயேசு உங்கள் வாழ்வில் மூலமும், ஊழியத்தின்  மூலமும் முழு உலகையும் ஆசீர்வதிக்க காத்துக்கொண்டிருக்கிறார். அண்ட சராசரங்களையும் ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்தே புறப்படுவார். (மீகா 5:2, மத் 2:6) எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றானவரோடு நீங்கள் ஒன்றாகிவிட்டதால், உலகிற்கும் நீங்கள் ஆசீர்வாத ஊற்றாகி விட்டீர்கள்.

அன்பானவர்களே, கிறிஸ்துவுக்குள் வாழும் உங்கள் வாழ்வு இவ்வையகத்தில் ஈடு இணையற்ற ஆசீர்வாத வாழ்வு, எழும்புங்கள்! உங்களுக்குள் இருக்கிற ஆசீர்வாத நதிகளை திறந்து விடுங்கள். உங்கள் நேரத்தையும், தாலந்துகளையும், பொக்கிஷங்களையும் இந்த உலகத்தைச் சந்திப்பதற்காக செலவிடுங்கள். நீங்கள் உலகத்தையே ஆசீர்வதிப்பவர்கள்.

உங்கள் தரிசனத்தையும், பயன்பாட்டையும் அதிகரியுங்கள். உங்களால் பூமியில் வாழும் அனைத்து குடும்பங்களையும் நேரில் சென்று சந்திக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் மன்றாட்டு ஜெபத்தினாலும், தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஊழியர்களைத் தாங்குவதிலும் இந்த முழு உலகத்தையும் நீங்கள் தொட்டு விடலாம்.

நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். உங்களுடைய பயன்பாட்டுக்கு  எல்லை குறிக்காதீர்கள். உங்கள் சொல்லும், செயலும் மற்றவரை ஆசீர்வதிப்பதிலேயே கண்ணாயிருக்கட்டும். உங்களுக்குள்தான் பூமியிலுள்ள சகல குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படுகிறது என்பதை மறவாதீர்கள். இந்த வெளிப்பாட்டோடு வாழப் பழகிவிடுங்கள்.

ஆண்டவரே,

எனக்குள் பூமியிலுள்ள சகல வம்சங்களும் ஆசீர்வதிக்கப்படும்.என்ஒ ளியினிடத்திற்கு ஜாதிகள் நடந்து வருவார்கள். பரிசுத்த ஆவியானவரின் பலத்தினாலே நான் பூமியின் கடைசிபரியந்தமும் உம்முடைய சாட்சியாயிருப்பேன். எல்லாம் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால், உமக்கே நன்றி.

ஆதி 22:18, ஏசா 60:3, அப் 1:8

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]