CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

முற்றிலும் ஜெயம் கொடுக்கும் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவரான (எபி 7:25) தேவநாமத்தில் வாழ்த்துக்கள்.

தண்ணீர்களைக் கடக்கும்போது உன்னோடு இருப்பேன். அக்கினியில் நடந்தாலும் வேகாதிருப்பாய். ஆறுகளைக் கடந்தாலும் அவைகள் உன்மேல் புரளுவதில்லை என்ற (ஏசா 43.2) வசனத்தின்படி இம்மாதத்தில் தண்ணீர்கள், அக்கினி புரளும். அதுபோன்ற மூன்றுவித சோதனைகள் மேலும் வெற்றியைக் கர்த்தர் தருவார்.

01. கர்த்தரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலைத் தரமுடியும். (11நாளா 20:30)

02. நாம் யுத்தம் செய்ய கர்த்தர் நமக்கு பெலன் தந்து வெற்றியைத்தர முடியும்.(யாத் 14:14)

03.  கர்த்தரே யுத்தம் செய்து வெற்றியைத்தர முடியும். ஆகவே அமர்ந்திருந்து கர்த்தருடைய தெளிவான நடத்துதலைப் பெற்றுக்கொள்ளுங்கள். (சங் 46:10, ஏசா 30:15, சங் 37:7) அவர் யுத்தத்தில் வல்லவர். கர்த்தர் என்பது அவர் நாமம்.

கர்த்தரையும், கர்த்தருடைய தீர்க்கதரிசிகளையும் நம்புங்கள் (11நாளா 20:20) நம்புகிறது அவராலே வரும். (சங் 62:5)

நமது விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயம். (1யோ 5:5) தேவனால் நடக்கும் எந்த காரியமும் நிச்சயம் வெற்றியைத் தரும்.

பரீட்சை எழுதும் பிள்ளைகளுக்காய் அதிகம் ஜெபிக்கிறோம். கர்த்தர் பத்து மடங்கு சமர்த்தராக்குவார். எந்த அரசு வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் ஜெபிக்கும் தானியேலாய் மாற்றுவார்  (தானி 6:28)

உங்கள் மேல் பிறரால் வரும் எரிச்சல், வழக்கு, போராட்டம், யுத்தம் எல்லாவற்றிலும் ஜெயம் தரும் உங்கள் தேவன் உங்கள் வலதுகையைப் பிடித்து “பயப்படாதே” நான் உனக்கு துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறார். (ஏசா 41:13)

சிறு கூட்டமே, பூச்சியே (In English little worm) சிறுப்புழுவே நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் உன் மீட்பருமாகிய இஸ்ரவேலின் பரிசுத்தர் உரைக்கிறார். (ஏசா 41:14)

நிச்சயம் உங்களுக்கு வெற்றி உண்டு. நிச்சயமாகவே ஆசீர்வாதமும் பூமியின் தூள் போன்ற பெருக்கமும் உண்டு. (எபி 6:11, ஆதி 28:14)

தேவ கிருபை, சமாதானம் உங்களோடிருப்பதாக.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]