CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் ஊக்கமும்

ஜெபமும் ஊக்கமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

ஜெப நேரத்தில் தேவனுக்கு முன்பாக ஊக்கத்தோடு ஜெபிப்பது முக்கியமானது. அப்போது அவருடைய கரங்களில் இருந்து சீக்கிரமான, வளமான பிரதிபலன் கிடைக்கிறது. ராஜாவின் இருதயம் ஆண்டவரிடம் திரும்பியபோது தேவன் அவருக்குச் செய்த காரியங்களைக் குறித்து சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்.

“அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர்”      (சங் 2:12) வேறொரு தருணத்தில், தன்னுடைய வேண்டுதலை கேட்டருளியதற்காக அவர் தேவனிடத்தில் நேரடியாக கூறுகிறார்.

“ஆண்டவரே, எங்கள் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை” (சங் 38:9) எவ்வளவு  மகிழ்ச்சியான செய்தி! நம்முடைய உள்ளான குமுறல்கள், நம்முடைய  மறைமுகமான விருப்பங்கள், நம் இருதய வாஞ்சைகள் யாவும் நாம் யாருடன் ஜெபத்தில் ஈடுபடுகின்றோமோ அவருடைய கண்களுக்கு மறைவாக இருக்கவில்லை.

ஜெபத்தில் தணியாப்பற்று அல்லது ஊக்கம் தேவன் பதிலளிப்பதற்கு முன்னோடியாகும். ஜெபத்தில் தேவனுடைய முகத்தை நாம் நாடும்போது, நாம் வெளிப்படுத்தும் ஆவியின் தணியாப்பற்றுக்கு சமமாக நம் இருதயங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

தணியாப்பற்று மிகுந்த புத்தியிலோ அல்லது அறிவுசார்ந்த மனதின் திறன்களிலோ இல்லாமல் இருதயத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. எனவே ஊக்கமானது அறிவுசார்ந்த வெளிப்பாடல்ல. ஆவியின் தணியாப்பற்று. கவிதைகளின் சார்ந்த நயங்களுக்கும், உணர்வுசார்ந்த  எண்ணக்கோவைகளுக்கும் அப்பாற்பட்டது. அது வெறும் தெரிந்தெடுத்தலுக்குப் புறம்பானது, இந்தத் தணியாப்பற்று உணர்வின் துடிப்பும், வெளிப்படுத்துதலும் ஆகும்.

நமது விருப்பப்படி ஆவியில் தணியாப்பற்றை உண்டாக்குவது என்பது நமது சொந்த பலத்தினால் முடியாத ஒன்று. ஆனால் நமக்கு அருளப்படும் படியாக நாம் தேவனிடம் ஜெபிக்கலாம். அது நம்முடையது. எனவே அதை போஷிக்கும் படியாகவும், அழிந்து போகாமல் காப்பாற்றும் படியாகவும், குறைபட்டுப் போய்விடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதென்பது ஜெபம் செய்வது மட்டுமல்ல, தேவனிடத்தில் தெரியப்படுத்துவது மட்டுமல்ல , தணியாப்பற்றுள்ள அல்லது ஊக்கமாக ஜெபிக்கும் ஆவியை பெற்றுக்கொள்ளுவதும், அதை வளர்க்கும்படியாக நாடுவதுமாகும். எந்த இடத்திலும் தேவன் தணியாப்பற்றுள்ள ஜெபத்தின் ஆவியை உயிர்த்துடிப்புடன் காத்துக்கொள்வதற்காக ஜெபிக்கலாம்.

ஜெபம் எப்படியோ அப்படியே மிகுந்த பற்று தேவனோடு சம்பந்தப்பட்டது. ஆவலுக்கு எப்பொழுதும் ஒரு நோக்கமுண்டு. மிகுந்த பற்றினால் எந்த அளவிற்கு நம்முடைய ஆவிக்குரிய விருப்பங்களை உருவெடுக்க வைக்கிறோமோ அந்த அளவிற்கு அது நமது ஜெபத்தின் ஊக்கத்தை நிர்ணயம் செய்யும். ஜெபமானது மிகுந்த ஊக்கத்தினாலும் வல்லமையினாலும், பலத்தினாலும் மூடப்பட்டிருக்க வேண்டும். அது தேவனை மையமாகக்கொண்ட ஆற்றலாகும். உலகத்தின் நன்மையான காரியங்களுக்காக அவருடைய திட்டங்களை நிர்ணயம் பண்ணும். ஆவியில் தணியாப்பற்றுடைய மனிதர்கள் நீதியையும், நியாயத்தையும், இரக்கத்தையும், எல்லா மேன்மையான குணநலன்களையும் அடைய பிரயாசப்படுவார்கள்.

ஒரு காலகட்டத்தில் தேவனிடத்தில் உண்மையாக இருந்த ஒரு ராஜா வாழ்க்கையில் வெற்றியும், செல்வ செழிப்பும் வந்தபோது தன்னுடைய விசுவாசத்தை இழந்துபோனபோது, ஒரு தைரியமுள்ள  தீர்க்கதரிசி மூலமாக தேவன் இவ்வாறு கூறுகிறார்.

“தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர். ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.” (2நாளா 16:9)

ஆசாவின் ஆரம்பகால வாழ்க்கையில் தேவன் அவரது ஜெபத்திற்கு செவிகொடுத்தார். ஆனால் அவர் ஜெப வாழ்க்கையையும், விசுவாசத்தையும் விட்டு விட்டபோது அழிவு வந்தது. துன்பங்கள் நேர்ந்தது.

ஜெபத்தில் தன்னோடு ஒன்றுபடும்படியாக பவுல் வேண்டுதல் செய்யும்போது ரோமர் 15:32-ம் வசனத்தில் “…போராட…” என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். கொலோசெயர் 4:12-லும் அதே வார்த்தையைக் காண்கிறோம். “எப்பாப்பிராவும்..தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்” தன்னுடைய ஜெப போராட்டத்திலே தனக்குத் துணையாக இருக்கும்படியாக “தன்னோடு சேர்ந்து ஜெபத்திலே போராடும்படியாக” பவுல் ரோம சபையாரைக் கேட்டுக்கொள்கிறார்.

விசுவாசத்தை செயல்படுத்துவதையும், அதற்காகக் கிடைக்கும் வெகுமானத்தைப்பற்றியும், பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிகள், கிட்டத்தட்ட ஒவ்வொரு நிகழ்வுகளிலும், விசுவாசம் நம்பிக்கையோடு கலந்துள்ளதைப் பார்க்கும் போது, விசுவாசம் நம்பிக்கையினால் விழுங்கப்பட்டு விட்டதா என்று சொல்லும் அளவிற்கு இருக்கும் நிலையை நாம் எளிதாகக் காணலாம். விசுவாசம், நம்பிக்கை ஆகிய இந்த இரண்டும் தன்மைகளின் குறிப்பிட்ட செயல்பாடுகளை தனித்தனியாக பிரித்துப் பார்ப்பது கடினமானது.

எல்லா உறுதியற்ற, தற்செயல் நிகழ்வுகளுக்கும் அப்பால் ஒன்று உண்டு. சொல்லப்போனால் விசுவாசமானது அதனுடைய பொறுப்புகளில் இருந்து விடுபடும்போது, நம்பிக்கை அதன் அருகில் வந்து, “நீ செய்ய வேண்டிய உன்னுடைய பங்கை செய்து முடித்துவிட்டாய், மீதி என்னுடையது!” என்று கூறும்.

பட்டுப்போன அத்திமர நிகழ்ச்சியில் நம்முடைய ஆண்டவர் விசுவாசத்தின் ஆச்சரியமான வல்லமையை தமது சீஷர்களுக்கு அளிக்கிறார். அவர்கள் ஆச்சரியமடைந்து, “…இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று!…” (மத்தேயு 21:20) என்று கூறியபோது, அவர் ”அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

“மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.”     (மத்தேயு 21:21-22) ஒரு கிறிஸ்தவ விசுவாசி இவ்வளவு பெரிதான விசுவாசத்தை அடையும்போது, அவர் நிறைவான நம்பிக்கையின் பகுதிக்குள் அடியெடுத்து வைக்கிறார். அவர் எவ்வித நடுக்கமுமின்றி தனது ஆவிக்குரிய தொடர்புகளில், சிகரத்தின் உச்சியில் நிற்கிறார். அவர் விசுவாசம் பாறையின் செங்குத்தான பகுதியின் உச்சியை அடைந்துவிட்டார். அது ஜீவனுள்ள  தேவனுடைய பலத்தின் மீது அசைக்க முடியாத, மாற்ற முடியாத, பிரிக்க முடியாத நம்பிக்கையாகும்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]


Warning: Array to string conversion in /home/u579205003/domains/zionchurch.lk/public_html/wp-content/plugins/fixed-bottom-menu/lib/class-fixedbottommenu.php on line 192