[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
தேவன் மனிதர்களால் கீழ்ப்படிய முடியாத கட்டளைகளைக் கொடுக்கிறாரா? கீழ்ப்படிய முடியாத கட்டளைகளைக் கொடுப்பதற்கு அவர் அவ்வளவு சர்வாதிகாரியா? கொடுமையானவரா? அன்பற்றவரா? பரிசுத்த வேதாகமத்தின் மொத்த வரலாற்றுகளிலும் ஒரு மனிதனுடைய சக்திக்கு மீறிய ஒரு காரியத்துக்குக் கீழ்ப்படியும்படி தேவன் கூறினார் என்பதாக ஒரு சம்பவம் கூட பதிவு பெறவில்லை என்பதுதான் பதில். ஒரு மனிதனால் செய்யமுடியாத ஒன்றை அவன் செய்யும்படிக் கேட்பதற்கு தேவன் அவ்வளவு அநீதியுள்ளவரா? அல்லது அக்கரையற்றவரா? நிச்சயமாக இல்லை. அவ்வாறு யூகிப்பது தேவனுடைய குணாதிசயத்தை அவதூறு பண்ணுவதாகும்.
இதைப்பற்றி ஒரு கணம் சிந்திப்போம். உலகப்பிரகாரமான பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளால் செய்ய முடியாத வேலைகளை அவர்களைச் செய்யச் சொல்கின்றனரா? அவ்வளவு அநீதியாகவும், சர்வாதிகாரமாகவும் இருக்க நினைக்கிற தகப்பனார் எங்கே இருக்கிறார்? தேவன், தவறு செய்கிற உலகப்பிரகாரமான பெற்றோரை விட குறைவான கருணையும் நீதியும் உடையவரா? இது எவ்வளவு முட்டாள்தனமான ஒரு நினைவு?
தேவனுக்கு கீழ்ப்படிவது உலகப் பெற்றோருக்குக் கீழ்ப்படிவது போன்றதுதான். பொதுவாக ஒருவனுடைய சொந்த வழியை விட்டுவிட்டு இன்னொருவர் வழியைப் பின்பற்றுவது, சொந்த சித்தத்தை இன்னொருவர் சித்தத்திற்கு விட்டுவிடுவது. பெற்றோருடைய அதிகாரத்திற்கும் சொல்லுக்கும் ஒரு பிள்ளை கீழ்ப்படிவது ஆகியவைகளெல்லாம் அதற்குள் அடங்கியிருக்கின்றன. பரலோகப் பிதாவிடமிருந்து அல்லது உலகப்பிரகாரமான தந்தையிடமிருந்து வரும் கட்டளைகள் அன்பைக் காட்டுபவை. அப்படிப்பட்ட கட்டளைகள் அனைத்தும் தம் மக்களின் சிறந்த நலனுக்காகும். தேவனுடைய கட்டளைகள் கொடுமையாகவோ சர்வாதிகாரமாகவோ கொடுக்கப்படுவதில்லை. அவைகள் எப்பொழுதும் அன்பினாலும் நம்முடைய நலனுக்காகவும் கொடுக்கப்படுகின்றன. ஆகவே அவைகளுக்குச் செவிகொடுத்து கீழ்ப்படிய அவைகள் நம்மை ஏவுகின்றன. நம்முடைய நன்மைக்காக நாம் செயலாற்ற தேவன் நமக்குக் கட்டளைகள் கொடுத்த பின் நாம் கீழ்ப்படிவது நமக்குப் பலன் தருகிறது. கீழ்ப்படிதல் அதற்கான பரிசைக் கொண்டு வருகிறது. தேவன் அதை ஆணையிட்டிருக்கிறபடியினால் நம்முடைய சக்திக்கு மிஞ்சிய காரியத்தை நாம் செய்யும்படி தேவன் ஒரு போதும் எதிர்பார்க்கமாட்டார் என்பதை மனித ஞானத்தினால் புரிந்து கொள்ளலாம்.
கீழ்ப்படிதல் ஒருவித அன்பாகும். ஒவ்வொரு கட்டளையையும் நிறைவேற்றுகிறது அன்பாகும். தன் உணர்வுகளைக் காட்டுகிற அன்பு. எனவே கீழ்ப்படிதல் என்பது நம்மிடம் எதிர்ப்பார்க்கப்படுகிற கடினமான ஒன்றல்ல. ஒரு கணவன் மனைவிக்குச் செய்கிற பணியைக்காட்டிலும் அல்லது ஒரு மனைவி அவளுடைய கணவனுக்குச் செய்கிற பணியைக்காட்டிலும் ஒன்றும் அதிகமான தல்ல. கீழ்ப்படிதலில் அன்பு மகிழ்கிறது. அதை நேசிப்பவர்களை அது மகிழ்விக்கிறது. அன்பில் சிரமங்கள் இல்லை. அதிக முயற்சி தேவைப்படலாம். ஆனால் வெறுப்பு இருக்காது. அன்பினால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமில்லை. எவ்வளவு எளிமையுடன், எவ்வளவு உண்மையான வழியில் அப்போஸ்தலர் யோவான் இவ்வாறு கூறுகின்றார்.
“அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்” (1யோவான் 3:22)
இதுதான் கீழ்ப்படிதல் அனைத்துக் கட்டளைக்கும் ஒவ்வொரு கட்டளைக்கும் முன்பாக ஓடுவது . இது எதிர்ப்பார்த்தவுடன் கீழ்ப்படிகின்ற அன்பு. சூழ்நிலை காரணமாகவோ அல்லது பாரம்பரியத்தினாலோ அல்லது இயல்பான விருப்பத்தினாலோ மனிதர்கள் பாவம் செய்யக் கட்டுப்பட்டவர்கள் என்று கூறுவார்கள் தவறு செய்கின்றனர். தேவனுடைய கட்டளைகள் தீங்கு விளைவிப்பவைகள் அல்ல. அவைகளுடைய வழிகள் மகிழ்ச்சியின் வழிகள் அவைகளுடைய பாதைகள் சமாதானத்தின் பாதைகள். கீழ்ப்படிவதற்காக எடுத்துக்கொள்ளும் முயற்சி கடினமான ஒன்று அல்ல.
“என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத் 11:30)
தம்முடைய பிள்ளைகளால் முடியாதவைகளைச் செய்யும்படி நம்முடைய பரலோகப் பிதா கேட்பதில்லை. அனைத்து காரியங்களிலும் அவரை மகிழ்விப்பது முடிகிற ஒன்றாகும்; கடினமான ஒன்றல்ல. அவர் கடினமான எஜமானுமல்ல, கண்டிப்பான ஆண்டவருமல்ல. “….நான் வைக்காததை எடுக்கிறவனும் விதைக்காததை அறுக்கிறவனும்….” (லூக்கா 19:22) அல்ல என்பதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் தன்னுடைய பரலோகப் பிதாவை மகிழ்விப்பது செய்யமுடிகிற ஒரு காரியமாகும். மனிதர்களை மகிழ்விப்பதைக் காட்டிலும் அவரை மகிழ்விப்பது செய்ய முடிகிற ஒரு காரியமாகும். மனிதர்களை மகிழ்விப்பதைக் காட்டிலும் அவரை மகிழ்விப்பது மிகவும் எளிதானது. மேலும் அவரை மகிழ்விக்கும் போது. அது நமக்குத் தெரியும். பிதாவின் சித்தத்தை தாங்கள் செய்வதையும், தங்களுடைய வழிகள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருபவை என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளும்படி தேவனுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற உள்ளான தெய்வீக நிச்சயம் ஆவியின் சாட்சியாகும்.
தேவனுடைய கட்டளைகள் நீதியிலும். நேர்மையிலும், ஞானத்திலும் அடித்தளமிடப்பட்டவைகள். ஆகவே நியாயப்பிரமாணங்கள் பரிசுத்தமானவைகள் கட்டளைகள் பரிசுத்தமும், நேர்மையும், நல்லவைகளுமாகும். கீழ்ப்படிவதற்காக கிருபையைத் தேடுகிறவர்கள் எல்லாராலும் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும். இந்த கட்டளைகளுக்கு நிச்சயம் கீழ்ப்படியவேண்டும். தேவ பிள்ளைகள் அவருக்குக் கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறார்கள். கீழ்ப்படியாமை அனுமதிக்கப்படமாட்டாது. எதிர்த்து நிற்கும் ஆவி, பாவத்திற்கு மூலகாரணமாகும். தேவனுடைய அதிகாரத்தை அது மறுக்கிறது. தேவன் அதை சகித்துக் கொள்ளமாட்டார். அவர் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை. அவர் உன்னதத்தின் குமாரனை மனிதர் மத்தியில் தோன்றச் செய்த காரணம் அவருடைய இயல்பை எல்லாருக்கும் எடுத்துக்காட்டுவதற்கேயாகும்.
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும் படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும். பாவத்தை போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின் படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச்செய்தார். (ரோமர் 8:3-4)
தேவனுடைய உயர்வான இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மனிதகுலம் மிகவும் பெலவீனமாகவும் உதவியற்றதாகவும் இருக்கிறது என்று எவரேனும் குறைகூறினால், கிறிஸ்துவின் பாவநிவர்த்தி கீழ்ப்படிவதற்கான பெலனை மனிதருக்களிக்கிறது. என்கிற பதில் சரியாயிருக்கிறது. பாவநிவர்த்தி என்பது நமக்காக நாம் தண்டனையை அடையாமலிருக்க கிறிஸ்து செய்தது. தேவன் நமக்குள் கிரியை செய்து புதுப்பித்தல் மூலமாகவும், ஆவியானவர் மூலமாகவும் தம்முடைய கிருபையை நமக்கு அருளுகிறார். ஜெபத்திற்கு பதில் கொடுக்கும்படியாகக் கிருபை அளவில்லாமல் அருளப்படுகிறது. தேவன் கட்டளையிடுகிற அதே நேரத்தில் அதை நாம் சந்திப்பதற்கு நமக்குத் தேவையான அனைத்து ஆத்தும சித்தத்தையும் கிருபையையும் நமக்கு வழங்குவதற்கு வாக்குறுதி அளிக்கிறார். தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்வது இயலாத காரியம் என்று கூறுவார்கள், ஜெபம் விசுவாசம் ஆகிறவைகளின் மூலம் மனிதனுடைய இயல்பு மாற்றப்படுகிறது என்பதையும், அவர்கள் தெய்வீக இயல்பைப் போல் மாறமுடியும் என்ற முக்கியமான உண்மைகளையும் காணத்தறுகிறார்கள். தேவனுக்கு கீழ்ப்படிவதற்கு அவனுடைய விருப்பமின்மை எடுக்கப்படுகிறது என்பதையும், வீழ்ந்துபோன நிலையின் காரணமாக தேவனுடைய கட்டளையைக் கைக்கொள்வதற்கு அவனது இயலாமையும் மகிமையாக மாற்றப்படுகிறது என்பதையும் காணத் தவறுகிறார்கள். இந்தத் தீவிர மாற்றத்தினால் அனைத்து வழிகளிலும் தேவனுக்கு கீழ்ப்படிவதற்கும், முழுமையாக மகிழ்ச்சியான நம்பிக்கையைப் பெறுவதற்கும் மனிதன் வல்லமையைப் பெற்றுக்கொள்ளுகிறான். பின்பு அவன் “என் தேவனே உமக்குப் பிரிமானதைச் செய் விரும்புகிறேன்.”(சங் 40:8) என்று கூறமுடியும். மனிதனுக்குரிய இயல்பான எதிர்ப்பு அவனிடமிருந்து நீக்கப்படுவது மட்டுமல்ல, தேவனுடைய வார்த்தைக்கு மகிழ்ச்சியான, கீழ்ப்படிகிற இருதயத்தை ஆசீர்வாதத்துடன் பெற்றுக்கொள்ளுகின்றான்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]