CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் தேவனுடைய வார்த்தையும் 2

ஜெபமும் தேவனுடைய வார்த்தையும் 2

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

வேதாகமத்தில் ‘நிலம்’, ‘விதை’ ‘விதைக்கிறவன்’, ‘அறுக்கிறவன்’, ‘விதைக்கிற நேரம்’, ‘அறுவடை’ என்கிற வார்த்தைகளை எவ்வளவு தொடர்ச்சியாகக் காண்கிறோம்? அதுபோன்ற உருவகங்களைப் பயன்படுத்துவது இயற்கையின் உண்மையை, கிருபையின் உவமானத்தின் மூலம் விளங்குகிறது. நிலம் உலகம், நல்ல விதை தேவனுடைய வார்த்தை. வார்த்தை பேசப்பட்டிருந்தாலும், எழுதப்பட்டிருந்தாலும் அது இரட்சிப்புக்கான தேவனுடைய  வல்லமை. நம்முடைய சுவிசேஷப்பணியில் முழு உலகமும் நம்முடைய நிலம், ஒவ்வொரு சிருஷ்டிப்பும் நம்முடைய முயற்சிக்கு இலக்கு, ஒவ்வொரு புத்தகமும் துண்டுப்பிரசுரமும் தேவனுடைய விதை.

தேவனுடைய வார்த்தை ஜெபத்தின் ஒரு பதிலாகும். (record of prayer) அது ஜெபிக்கிற மனிதர்களின் ஜெபம். அவர்கள் பெற்றுக்கொண்டது. ஜெபத்துக்கான தெய்வீக அழைப்பு. ஜெபிக்கிறவர்களுக்குக்  கொடுக்கப்பட்ட உற்சாகம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது. தேவனைப்பற்றியும் இவ்வுலகில் அவருடைய கிரியையின் வெற்றி ஜெபத்தால் கட்டப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ளாத ஜெபமற்ற மக்கள் பூமியில் தேவனால் ஒருபோதும் பயன்படுத்தப்பட்டதில்லை. ஜெபம் செய்யும் மனிதர் இந்த உலகில் தேவனுடைய பிரதிநிதிகளாவர். ஜெபம் செய்யாதவர்களை தேவன் ஒருபோதும் பயன்படுத்துவதில்லை.

தேவனுடைய பரிசுத்தமான நாமத்துக்கான பயபக்தி அவருடைய வார்த்தையின் மேல் காட்டுகிற பெரும் மரியாதையுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. தேவனுடைய நாமம் பரிசுத்தப்படுவது, பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப்படுவது. தேவனுடைய ராஜ்யம் நிறுவப்படுவதும் மகிமையடைவதும், இயேசு மனிதருக்குக் கற்றுக்கொடுத்த உலகளாவிய ஜெபத்தில் இருப்பதுபோல ஜெபத்தில் வெகுவாக இருக்கின்றன. விடாப்பிடியாக கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்த விதவையின் உவமையில் அந்தப் பெரிய சத்தியத்தை இயேசு கிறிஸ்து கூறியதுபோல “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்…..(லூக்கா 18:1)

வீட்டின் புனிதமான அலுவல்களில் ஜெபம் மிக முக்கியமானதொன்றாக இருப்பதால் தேவனுடைய வீடு “ஜெப வீடு” என்றழைக்கப்படுவது போல, வேதாகமத்தையும் ஜெபபுத்தகம்  என்றழைக்கலாம். மனித சமுதாயத்துக்கு ஜெபம் பெரும் கோட்பாட்டையும் அதிலிருக்கிற செய்தியையும் கொடுக்கிறது.

தேவனுடைய வார்த்தை முக்கியமானது. விசுவாச ஜெபத்துக்கு தேவனுடைய வார்த்தை அடிப்படை விவரங்களடங்கிய புத்தகம். “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக் கொண்டு உங்கள் இருதயத்திலே கர்த்தரைப்பாடி…..” (கொலோ 3:16) என்று தூய பவுல் கூறுகிறார்.

நமக்குள் வாசம்பண்ணுகிற கிறிஸ்துவின் இந்த வார்த்தை நம்மை மாற்றி அவருடைய ஒன்றிப்போகச் செய்கிறது. வார்த்தையினால் விசுவாசம் கட்டப்படுகிறது. விசுவாசம் ஜெபத்தின் சரீரமாகவும் சாரமாகவும் இருக்கின்றது. ஜெபம் பல்வேறு நிலைகளில் தேவனுடைய வார்த்தையை சார்ந்திருக்கிறது. இயேசு கூறுகிறார்: நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” (யோவான் 15:7)

தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் விண்ணப்பம் ஏறெடுக்கப்படுகிறது. அதனால் காரியங்கள் வல்லமையாய் அசைக்கப்படுகின்றன. தேவன் ஜெபத்துக்கு தம்மையும், தம்முடைய நோக்கத்தையும், தம்முடைய வாக்குறுதியையும் ஒப்புக்கொடுத்திருக்கிறார். நம்முடைய ஜெபத்துக்கு அவருடைய வார்த்தை அடித்தளமாகவும், ஊக்குவிப்பதாகவும் இருக்கிறது. விடாப்பிடியாக ஜெபிப்பதின் மூலம் அவருடைய வாக்குறுதிகளை அதிகமாக நாம் பெறலாம் என்கிற சூழ்நிலைகளும் இருக்கின்றன. பழைய பரிசுத்தவான்களைப்பற்றி “விசுவாசத்தினாலே அவர்கள் …. வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்….” என்று கூறப்பட்டிருக்கிறது. (எபிரெயர் 11:33) வார்த்தைக்கும் அப்பால் சென்று, அவருடைய வாக்குறுதிக்கும் அப்பால் சென்று தேவனுடைய பிரசன்னத்துக்குள்ளாகச் செல்லும் பெலன் ஜெபத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

யாக்கோபு வாக்களித்தவரோடு போராடியதைப்போல வாக்குத்தத்தத்தோடு போராடவில்லை. நாம் வாக்களித்தவரைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வாக்குத்தத்தம் ஆதாரமற்றதாகிவிடும். தேவனுடைய வார்த்தையை செறிவூட்டுவது ஜெபம் என்று உணர்ந்து தேவனையே பிடித்துக்கொள்ள வேண்டும். வாக்குறுதியாளரைப் பற்றிக்கொள்வதால் ஜெபம் மீண்டும் வெளிவருகிறது; வாக்குறுதி தனி நபருக்குடையதாயிருக்கிறது. “உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும், உம்மைப் பற்றிக்கொள்ளும் படிக்கு விழித்துக்கொள்ளுகிறவனும் இல்லை…..” (ஏசாயா 64:7)

 “என் பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்…” (ஏசாயா 27:5) ஆகிய வசனங்கள் ஜெபத்தைப்பற்றி தேவனுடைய செயல்முறைக் குறிப்புகளாகும்.

 ஆன்மீக வரம்புக்குக் கீழாக ஜெபத்தை, விசுவாசத்தின் விண்ணப்பம், கீழ்ப்படிதல் என்று பிரிக்கலாம். “….விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வார்த்தையினாலே வரும்” என்பதால் விசுவாச ஜெபம் எழுதப்பட்டிருக்கிற வார்த்தையின் அடிப்படையிலானது (ரோமர் 10:17) எதற்காக ஜெபிக்கப்படுகிறதோ அதுவே பதிலாகப் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]