கணவரின் அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னென்ன செய் யலாம் என்று கொஞ்சம் பார்ப்போமா.. கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அவரை ஜெபித்து அனுப்பி வையுங் கள். திரும்பி வந்ததும் ப்ரைஸ் தெ லார்ட் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் யென்று சொல் லுங்கள். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும். கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்கு வாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன்.
.
அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான் என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன் னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புங்கள். நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை? 1கொரி-6:7 கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள்.
.
நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள். கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாக ரமாக வெடிக்க வாய்ப்புண்டு. எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்ல எப்படி இருந்தேன் தெரியுமா என்று மூக்கைச் சிந்த ஆரம்பிக்காதீர்கள். அது கணவருக்கு எரிச்ச லூட்டும். முடிந்தால் அம்மா வீட்டில் போய், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக் குறாங்க தெரியுமா என்று கணவர் புகழ் பாடு ங்கள். உங்களவருக்கு உங்கள் மீது கிரேஸ் கூடும். கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்கள். கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும். உங்க அம்மா இருக்காங்களே, உங்க அக்கா, தங்கச்சி இருக்காங்களே மனுஷிங்களா ராட் சசிங்க என்று மட்டும் மாமியார், நாத்தனார் ளைப் போட்டுக் கொடுக்காதீர்கள். குறை இருந்தால் சொல்லலாம், ஆனால் பட்டென உடைத்து படாரென பேசி கெடுத்து விடக் கூடாது. எதையும் நேரம் காலம் பார்த்து சொல்ல வேண்டும். இல்லை என்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்களே மண்ணை அள்ளிப்போட்டது போன்றாகிவிடும். எதையும் நாசுக்காக எடு்ததுச் சொல்லுங்கள். அவர் புரிந்து கொள்வார். உங்கள் மாமியார், நாத்தனார் பிரச்சனை செய்தாலும் கூட என் பொண்டாட்டி சும்மா தான் இருக்கா நீங்க தான் அவ கூட சண் டைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வருகிறீர்கள் என்று உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார். சண்டை போடாத கணவன், மனைவி இருக்க முடியாது. அப்படி சண்டை போட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது மறந்துவிட வேண்டும்.
.
நல்ல பாத்திரங்களை விருந்தாளிகளுக்கு மட்டும் ஒதுக்கி வைக்காமல் உங்க கணவருக்கும் அதில் கொடுங்கள் கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில்லை. அன் பாலும் உங்கள் பக்கம் சாய வைக்கலாம். இதையெல்லாம் செய்து பாருங்கள், பிறகு உணர்வீர்கள் அருமையான மாற்றங்களை…!
அந்தப்படி மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள் அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயி ருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத் திக்கொள்ளப்படுவார்கள். 1பேது-3:1-2