[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
இரு நாடுளின் மத்தியில் ஒரு பெரிய ஏரி. அந்த ஏரியின் மேல்பகுதி நாட்டினர், கீழ்பகுதி நாட்டு மக்களுடன் அடிக்கடி மோதிக்கொண்டனர். அவர்களின் மோதலுக்கு ஒரு காரணமும் இருந்தது. ஏரியின் மத்தியில் ஒரு தீவு இருந்தது. இரு நாட்டாரும் அந்தத் தீவு தங்களுக்கு சொந்தமானது என்றனர். அது மிகவும் அழகான ஓர் தீவு. நீர் வளமும் நிலவளமும் நிறைந்தது. யாரும் அப்படிப்பட்ட ஒரு சொத்தை இழக்க விரும்பமாட்டார்கள்.
.
இந்த ஓயாத சண்டையினிமித்தம் சலித்துப் போன மக்கள், ஒரு முடிவுகட்ட விரும்பினர். முடிவும் கிட்டவில்லை. சண்டையும் ஓயவில்லை. இறுதியில், இரு நாட்டாருக்கும் நண்பரான மூன்றாம் நாட்டுப் பெருந்தலைவர் ஒருவர் சமாதானம் செய்து வைக்க விரும்பினார். நியாயமான பல வழிகளையும் தீர ஆலோசித்த நண்பர், வழியொன்றும் காணாமல், இறுதியில் ஒரு போட்டியை ஏற்படுத்தத் தீர்மானித்தார்.
.
இரு தலைவர்களையும் அழைத்து, “நண்பர்களே, இன்றுள்ள நிலையில் அந்தத் தீவு உங்கள் இருவருக்குமே சொந்தமில்லை. ஆயினும் உங்களில் ஒருவர் அதைப் பரிசாகப் பெறலாம். ஒரு போட்டியை ஏற்படுத்துவேன். வென்றவர் தீவைப் பரிசாகப் பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.
.
இரு நாட்டாரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். இருநாடுகளுக்கும் எல்லையான ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து இரு படகுகள் தங்கள் தங்கள் தலைவருடன் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட வேண்டும். தீவின் கரையில் எந்தத் தலைவர் தம் கையை முதன் முதலாக வைக்கிறாரோ, அவருக்கே அந்தத் தீவு சொந்தம்- இதுதான் போட்டி.
.
குறிப்பிட்ட நேரத்தில் போட்டி ஆரம்பித்தது. பயங்கர முயற்சி ஓய்வில்லாத தண்டு வலிப்பு! முந்துபவர் யாரோ? முடிவு சொல்ல முடியாத அளவுக்கு பலத்த போட்டி. இன்னும் நூறு கெஜ தூரம்தான். ஆயினும் ஒன்றையொன்று முந்தமுடியவில்லை. மூச்சுவிட முடியாத எதிர்பார்ப்பு.
.
ஐம்பது கெஜ தூரமிருக்கும் போது, கீழ்நாட்டுப்படகு சற்று முந்த ஆரம்பித்தது. மேல்நாட்டுப் படகு தோற்கும் நிலை. சீக்கிரத்தில் முடிவு தெரிந்துவிடும். கீழு்நாட்டுப் படகு கரையிலிருந்து ஐந்து கெஜ தூரத்திரிலுக்கும் போது மேல்நாட்டுப் படகு பத்து கெஜ தூரத்திலிருந்தது.
.
மேல்நாட்டு அதிபர் தம் தோல்வி உறுதி என்று கண்டார். அவர் மனக்கண்முன் தம் நாட்டு மக்களுக்கு ஏற்படவிருக்கும் ஏமாற்றமும், பெருநட்டமும் படம் போல் தோன்றின.
.
தண்டு வலிப்பதை நிறுத்தினார். கண்மூடி விழிக்கும் முன் தம் வாளை உருவி தம் இடது கையை முழங்கையிலிருந்து துண்டித்தார். தம் முழு பலத்தையும் கூட்டி வலது கரத்தால், இடது கையை ஏரிக்கரை மணலில் விழும்படி வீசியெறிந்தார். கீழ்நாட்டுப்படகு இரண்டு கெஜ தூரத்தில் இருக்கும் போதே, மேல் நாட்டு அதிபரின் கை மணலில் “தொப்” பென விழுந்தது. கரைக்கு ஏழு கெஜத்துக்கு அப்பால் இருந்து கொண்டே “தீவு” எனக்கே! என்று ஆர்ப்பரித்தார்.
.
நிபந்தனையின் படி வெற்றி மேல்நாட்டவருக்கே என்று முடிவாயிற்று. தங்கள் தலைவரின் தியாகத்தைக் கண்ட மக்கள் கண்ணீர் சொரிந்தனர். தலைவரைப் பாராட்டிப் பணிந்தனர். தோல்வியுள்ள கீழ் நாட்டவரும்கூட தியாகத்தைப் பாராட்டினர்.
.
“நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்” (1கொரிந்தியர் 9:24).
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]