[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
இன்றைய கிறிஸ்தவ உலகில், ஆராதனையில் எழுப்புதலையும், புதுமையையும், எழுச்சியையும் நாம் காண முடிகின்றது. எல்லா சபை மக்களும் ஆராதனைகளில் கரங்களைத் தட்டி அல்லேலுயா பாடி தேவனை மகிமைப் படுத்துகின்றனர். துதிபலிகள் எங்கும் தொனிக்கின்றன. நல்லது, தேவனை கருத்துடன் பாடிப் போற்றுவது அவசியம், கர்த்தருக்குப் பிரியமானதும் அதுவே. துதி என்பது எபிரேய பதத்தில் எக்சிகிட்டா (Excikitta) ) எனப்படும். இதன் பொருள் “அக உணர்வுகளின் வெளிப்பாடு” அல்லது பிரதிபலிப்பது. அதாவது ஆண்டவரைக் குறித்து நம் உள்ளத்தில் ஏற்படும் இன்ப உணர்வுகளை வாயின் வார்த்தையினால் வெளிப்படுத்துவதே துதியாகும்.
.
இந்த உலகில் ஜனங்கள் அரசியல்வாதிகளுக்கும், மதத்தலைவர்களுக்கும், பிரபலமான சினிமா நடிகர், நடிகைகளுக்கும் மன்றங்கள் அமைத்து வாழ்க வாழ்க என்று கோஷம் போட்டு அவர்களை இவ்வளவாக உயர்த்துவார்களானால்.. சர்வ உலகத்தை தம் வார்த்தையினால் படைத்தவரும், சதாகாலங்களில் உயிரோ டிருப்பவரும், நம்மை உண்டாக்கினவரும், சர்வ அதிகாரங்களையும், வல்லமைகளையும் உடையவரும், நம்மை நியாயந்தீர்க்க வருகிறவரும், நரகத்திலே தள்ள வல்லவரும், நித்திய ஜீவனை நமக்கு அளிப்பவருமாகிய நம் ஆண்டவருக்கு நாம் எவ்வளவாய் துதிபாட வேண்டும்!. அவர் நாமத்தை எவ்வளவாய் உயர்த்த வேண்டும்!. அந்தோ! அழிந்து போகின்ற மனிதனையும் அவனுடைய சுயநலமுள்ள கிரியைகளையும் பாராட்டி போற்றுவார்களானால்…அழியாத மகிமை உடையவராய், மாசற்றவராய், சகல துதிக்கும், வல்லமைக்கும், ஞானத்திற்கும், கனத்திற்கும், மாட்சிமைக்கும் பாத்திரரான நம் தேவனுடைய கிரியைகளை எண்ணி அவரை உயர்த்துவது எத்தனை அவசியமானது ஒருவருக்கு செய்யும் நன்மைகளை அந்த நபர் கடைசிவரைக்கும் நன்றியறிதலோடும், செய்த நன்மைகளை பிறரிடம் கூறி தன்னை உயர்வாகக் கருதவேண்டும் என்றும் நினைப்பதும் மனித இயல்பு. சின்ன சின்ன காரியங்களைக் குறித்து ஒரு மனிதனின் எதிர்பார்ப்பு இவ்வாறாக இருக்குமென்றால் நம்மை படைத்து, நாள்தோறும் நன்மைகளால் முடிசூட்டுகிற தேவனுக்கு நாம் எவ்வளவாய் கடமைபட்டிருக்கின்றோம். “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள்” ஏசா 43:21. என்று ஒரு நோக்கத்தோடும் ஏக்கத்தோடும் கர்த்தர் நம்மை ஏற்படுத்தியுள்ளார். பிரியமானவர்களே! அவர் நம்மை ஏற்படுத் தின நோக்கத்தை நிறைவேற்றுவோம்.
.
இவ்வண்ணமாக அநேகநாளாக ஒரு பெண்மணி ஆண்டவரிடம் ஏன் எல்லோரும் உம்மை துதிக்க வேண்டும்? நீர் என்ன அவ்வளவு பேராசை பிடித்தவரா? என்று கேட்டு கொண் டிருந்தார்களாம். அப்பொழுது ஆண்டவர் ஒருநாள் அவளோடு பேசி மகளே! நீ என்னை துதிப்பதினால் என் மகிமை கூடப் போவதுமில்லை, துதிக்காமலிருப்பதினால் என் மகிமை குறையப்போவதுமில்லை;. நான் துதிகளின் மத்தியில் வாசம் செய்வேன் என்பது உனக்கு தெரியாதா! எனவே நீ என்னை துதிக்கும் போது என் பிரசன்னம் எப்போதும் உன்கூடவே இருக்கும். அப்பொழுது எந்தப் பொல்லாங்கும் சாத்தானின் சூழ்ச்சிகளும் உன்னை அணுகமுடியாது. அப்படியாக என்மீது நீ கொண்ட உன் விசுவாசம் பெருகும். அதோடு ஆரோக்கியமான ஆவிக் குரிய வாழ்க்கைக்கு அது பெலனையும், ஜீவனையும் தரும். இதெல்லாம் உனக்குதானே நல்லது என்று விளக்கினார். ஆகவே ஆராதனை மிகவும் முக்கியம். ஆனால் இந்நாட்களிலே தேவனை ஆராதித்தால் அது கிடைக்கும் அல்லது இது கிடைக்கும் என்று சுய நலத்துடன் செயல்படுகிறவர்களோ நீங்கள்!… சற்று ஆழ்ந்து கவனியுங்கள். ஆராதனையின் நோக்கம் நம்முடைய ஜெபங்களில் உள்ளான நோக்கம் இருக்கலாம், தேவன் என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வாஞ்சை இருக்கலாம், ஆனால் நம்முடைய ஆராதனையின் உள்ளான நோக்கம் என்ன? நம்முடைய நோக்க மெல்லாம் தேவனை துதிபலிகளினால் பிரியப்படுத்துவதாய் இருக்கவேண்டும். தேவனையும், அவருடைய நாமத்தையும் மாத்திரம் உயர்த்தக் கூடியதாய் இருக்க வேண்டும்.
.
நன்மைகளை தரும் நமது அப்பாவிடம் இருந்து நமக்கு தேவையானதை பெற்றுக் கொள்ள நினைப்பது தவறில்லை. அவைகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறை நம் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் துதிபலிகள் என்பது வேறுபட்டது. அது தேவனை உயர்த்துவது. நாம், துதி ஆராதனைக்கு இப்படித்தான் செய்ய வேண்டும் என்று விதி முறைகள் கூறி அதனை வகை யறுக்க முடியாது. வேதத்தில் உள்ள பாத்திரங்கள், கர்த்தர் தங்கள் வாழ்க்கையில் செய்த அற்புதங்களையும், அதிசயங்ளையும், எதிரிகளை வெல்லச் செய்ததையும் நினைத்து, நன்றியால் உள்ளம் நிறைந்து பூரிப்படைந்ததினால்;, உள்ளத்தில் ஜீவ ஊற்று பெருக்கெடுத்தது. அவைகளின் நிமித்தமாய் வந்த வார்த்தைகளே துதிபலிகள். இவ்வண் ணமாக துதித்து தேவனை மகிமைப்படுத்தி தேவனோடுள்ள ஐக்கியத்தை இன்னும் வலுப்படுத்தினர். இவ்வாறாக அவர்களுக்கு தேவன்பால் கொண்ட அன்பு பெருகியது.
.
அருமையானவர்களே நம்முடயை துதி ஆராதனை எப்படி உள்ளது? சுயநலமான எண்ணங்களும், நோக்கங்களும் துதி ஆராதனையில் இடமில்லை என்பதை நாம் புரிந்து கொண்டோமா!;. ஜெபம் : நாம் ஆண்டவரிடத்தில் கேட்பது ஆராதனை : நாம் ஆண்டவருக்கு கொடுப்பது இன்றைய கிறிஸ்தவர்களின் துதிகள்… இன்று துதி, ஸ்தோத்திரபலிகள் புத்தகங்களாக வெவ்வேறு வகையில் வெளி வந்து கொண்டிருக்கிறது. நல்லது தான் அதனை வாங்கி வாசிப்பதில் தவறில்லை. இதன் மூலம் தேவனை துதிக்கும் விதங்களை அறிந்து கொள்ளலாமே தவிர, அதுவே துதியாக மாறி விடாது. இப்படிப்பட்ட புத்தகங்கள் வெளிவருவது புதிதாக கர்த்தரை ஏற்றுக் கொண்டு, தேவனைப் பற்றியும், வேதத்தைப் பற்றியும் அறியாதவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதுதான். ஆனால் இன்று நம்மில் அநேகருக்கு வேதம் கூட வேண்டாம். அந்த ஸ்தோத்திரபலி புத்தகம் மாத்திரம் போதும். தனி ஜெபவேளையிலும், உபாவாச வேளையிலும் ஆயிரம் ஸ்தோத்திரபலிகளை மடமடவென்று வாசித்துவிட்டு நான் உம்மை துதித்து விட்டேன், ஆகையால் என் விண்ணப்பம், விருப்பத்தை கர்த்தர் நிறைவேற்றி ஆகவேண்டும் என்று நினைக்கின்றனர். ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று கூறிக்கொண்டே இருந்தால், தேவனுடைய விருப்பத்தை மாற்றி, தன் விருப்பத்தை நிறைவேற்றிவிடலாம் என்று நினைக்கின்றனர், என்னே பரிதாபம்! ஆண்டவரின் நாமத்தினை உயர்த்தும் துதிபலிகள் கூட இன்று சுயநல நோக்கமாய் மாறிவருகின்றது. வெறும் வாயிலிருந்தும், உதட்டளவிலிருந்தும் வருகின்ற துதிபலிகளில் தேவன் பிரியமாக இருக்கமாட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா!
.
பிரியமானவர்களே அவர் நம் உள்ளத்தை காண்கின்ற தேவன், யாரும் அவர் மனதை வெளிப்புறமான கிரியைகளினால் குளிர வைக்க முடியாது. புறஜாதியார் செய்யும் சுலோகம் போன்ற மனதுடன் ஒவ்வாத அல்லது மனதை மாற்றாத எந்த ஒரு துதிபலிகளும் தேவனுக்கு உகந்ததல்ல. இப்படிப்பட்ட ஆராதனையை தேவன் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக கடிந்து கொண்டார் என்பதை நாம் மறந்து போகக்கூடாது(ஏசாயா 29: 13). “இந்த ஐனங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள்;;, அவர்கள் இருதயமோ எனக்கு தூரமாய் விலகியிருக்கிறது” என்றார். இன்றைய நூதன உபதேசம். இப்படியாக சிலர் 7 நாள் துதித்தால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்று வேதத்தின் அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டு செயல்படும் அன்பர்களே! நம் இருதயத்தின்; கிரியைகளினால் தேவனைப் பிரியப்படுத்தாதபடி, புத்தக வழிபாடு போல் வாயினாலே மாத்திரம் செய்யப்படுகின்ற சுயநலமுள்ள துதியினால் 7 நாள் என்ன? 70வது நாள் துதித்தாலும் நம் பிரச்சனை மாறாது, ஒவ்வொரு பிரச்சனைகளையும் தேவன் நமக்கு அனுமதிப்பதற்கு ஒரு நோக்கம் உண்டு (சிலவேளைகளில் நாமாகவே பிரச்சனைகளை நமக்கு வருவித்துக் கொள்கிறோம். அது வேறு விஷயம்). அந்த நோக்கம் நமக்கும், தேவனுக்கும் உள்ள இணைப்பை இன்னும் அதிகரிக்க செய்து நித்திய ஜீவனுக்கு செல்லும் பாதைக்கு நம்மை அழைத்து செல்லும். ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? பிரச்சனை மாறவேண்டும் என்பதற்காக சபை ஆராதனையிலோ அல்லது ஜெபக்கூடுகையிலோ மாத்திரம் தேவனை துதித்து போற்றுகிறோம். மற்ற நேரங்களிலும், நம் அன்றாட வாழ்க்கையிலும் தேவன் யாரோ! நாம் யாரோ!…. நாம் செய்யும் காரியங்கள் யாவும் கர்த்தர் அருவருக்கிற காரியங்கள் (பொய், புரட்டுவாய், மேட்டின்மை, புறங்கூறல், சினிமா, சிகரட், போதை பழக்கம்…). சில வேளைகளில் இயேசு கிறிஸ்துவை புதிதாக ஏற்றுக்கொண்டு தேவனின் அன்பை ருசிபார்த்தவர்களின் ஆரம்ப விசுவாசத்தை தேவன் கனப்படுத்தி பிரச்சனைகளை மாற்றலாம். ஆனால் அதனையே நாம் நிரந்தரமாக்கி விடக்கூடாது. எப்போதும் தேவனோடு உள்ள ஐக்கியம் அதிகமாக இருக்கும்போது எவ்வித எதிர்பார்ப்புமின்றி முழு இருதயத்தோடு; தேவனை துதிக்க முடியும்.
.
இப்போது நீங்கள் ஒருவேளை நினைக்கலாம் எரிகோ மதிற்சுவர் துதி சத்தத்தினால் அல்லவா இடிந்து விழுந்தது. பவுலும், சீலாவும் பாடித் துதித்துக் கொண்டிருக்கும் போதல்லவா அவர்கள் சிறையிருப்பு தகர்க்கப்பட்டது. எனவே தான் என் வாழ்க்கையிலும், எரிகோ மதிற்சுவர் போன்ற என் பிரச்சனைகளும், என் கட்டுகளும் மாறுவதற்கு நான் துதிக்கிறேன் என்று சொல்லலாம். அவர்கள் துதித்த போது மதிற்சுவர் இடிந்ததும், கட்டுகள் தகர்ந்ததும் உண்மைதான். ஆனால் இந்த இரண்டு சம்பவங்களையும் சற்று ஆழ்ந்து சிந்திப்போமானால் நம்முடைய துதிக்கும், அவர்களின் துதிக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளமுடியும். மதிற்சுவர் தகர்ந்த துதி: யோசுவா 6-ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஆர்ப்பரித்தபோது எரிகோ கோட்டை இடிந்து விழுந்ததை காணலாம். யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கானான் நாட்டிற்கு வழிநடத்தி செல்வதற்கு தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தலைவன். அவன் கானான் தேசத்தை அடைவதற்கு முன்பாக அநேக நாடுகளையும், யோர்தானையும், கடக்க வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு காரியங்களையும் தேவ சமூகத்தில் நின்று, தேவ சத்தத்தை கேட்டு, தேவ ஆலோசனைக்கு செவி கொடுத்து ஒவ்வொரு தடைகளையும் தாண்டி சென்று இப் படியாக தேவ திட்டமாகிய கானான் தேசத்தை சுதந்தரித்தனர். பிரியமானவர்களே! எந்த ஒரு நேரத்திலும் யோசுவா சுயபலத்தையோ, ஆள்பலத்தையோ நம்பாமல் தேவனுடைய சத்தத்திற்கு மாத்திரம் செவி கொடுக்கும் நல்ல தலைவ னாகவும் தேவபலத்தையே சார்ந்திருந்து தேவனோடு சஞ்சரிக்கின்ற தேவனுடைய ஊழியக்காரனாகவும் இருந்தான். இப்படிப்பட்ட யோசுவா, எரிகோ அலங்கம் இடிந்து விழுவதற்கு ஆண்டவர் கூறிய ஆலோசனையின்படி ஜனங்கள் எக்காளம் ஊதி ஆர்ப்பரித்தபோது அலங்கம் இடிந்து விழுந்தது. இதில்; நாம்; தேவனை துதித்து ஆர்ப்பரித்த காரி யத்தை மாத்திரம் பார்க்கின்றோம். ஆனால் வெற்றிக்கு மறைக்கப்பட்டுள்ள மிக முக்கியமான காரணம் விசுவாசத்துடன் கூடிய கீழ்படிதல். இதே இஸ்ரவேல் ஜனங்கள்; “ஆயி” ப்ட்டணத்தை பிடிப்பதற்கும், “யோர்தானை” கடப்பதற்கும், தேவனால் யோசுவாவுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை வேறு. இந்த சூழ்நிலைகளில்; அவர்கள் எக்காளத்தை ஊதி ஆர்ப்பரிக் கவில்லை. எனவே ஒவ்வொரு பிரச்சனைகளையும் மேற்கொள்வதற்கு தேவனை துதிப்பது மாத்திரம் வழியல்ல….. தேவபிள்ளைகளாய் அவருடைய வார்த்தைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு விசுவாசித்து கீழ்படிவதே ஆகும். யோசுவா 6:27ல் கர்த்தர் யோசுவாவோடே கூடயிருந்தார் என்று வாசிக்கிறோம். இன்று கர்த்தர் நம்மோடு கூடவே இருப் பதை நாம் உணர முடிகின்றதா? தேவஆலோசனையை நாடுகின்றோமா? தேவசத்தத்திற்கு எப்போதும் கீழ்ப்படிகின் றோமா? தேவன் நம்மோடு கூடவே இருக்கும்படிக்கு நம் எண்ணங்களும், செயல்களும் எப்போதும் தேவனோடு இசை ந்து தேவனுக்காக செயல்படுகின்றதா? அப்போது தான் ஒவ்வொரு பிரச்சனைகளையும் கடப்பதற்கு சரியானபடி தேவ ஆலோசனையை பெறமுடியும். சிறைச்சாலை தகர்ந்த துதி: அப் 16:20 முதல் தொடர்ந்து வாசிக்கும் போது பவுலும், சீலாவும் சிறைக்காவலலில் அடைக்கப்பட்டு அவர்கள் கால்கள் தொழுமரத்தில் மாட்டிவைக்கப்பட்ட நிலையிலும், நடுராத்திரியிலே ஜெபம் பண்ணி தேவனை துதித்துப் பாடினார்கள். நடந்தது என்ன? பூமி அதிர்ந்தது.. எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று நன்றாக கவனியுங்கள்… இப்பகுதியில் அவர்களுடைய நோக்கம் சிறையிருப்பை துதிபலிகளினால் தகர்க்க வேண்டும் என்பதல்ல. மாறாக, கால்கள் தொழுமரத்தில் மாட்டி வைக்கப்பட்ட நிலையிலும், வலிவேதனையால் நிரம்பாமல் கர்த்தரை உயர்த்தும் துதிபலிகளால் நிரம்பி அவர்களின் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் தேவனோடு உறவாட வேண்டும் என்பதே. பாருங்கள், கர்த்தருடைய பிரசன்னம் அந்த இடத்தில் இறங்கியது. உடனே பூமி அதிர்ந்தது, கட்டுகள் கழன்றது. அருமையானவர்களே! ஒருவேளை எப்படியாவது கட்டுகள் அவிழ்க்கப்பட்டு நாம் விடுதலை ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு துதித்திருப்பார்களானால், கட்டுகள்; கழன்றதும் தப்பி ஓடியிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. மாறாக தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் சுவிஷேச பாரத்தோடு அந்த இடத்திலேயே இருந்தபடியினால் சிறைச்சாலைக்காரனும் அவன் வீட்டாரும் இரட்சிக்கப்பட்டனர். ஒரு வேளை அந்த இடத்தில் நாமாக இருந்திருப்போமானால் நான் துதித்தேன். தேவன் என்னை விடுதலையாக்கினார் என்று சொல்லி தப்பித்து ஓடியிருப்போம். ஆனால் அந்த இடத்தில் தேவன் கட்டுகளை உடைத்ததின் நோக்கம் ஒரு வீட்டாரின்; இரட்சிப்பு. எவ்வித எதிர்பார்ப்புமின்றி முழு இருதயத்தோடு தேவனை துதிப்பது தான் உண்மையான துதி. எதிர்பார்ப்புள்ள துதிகள் தேவசித்தத்தை அறியாதபடி நாமாக ஒன்றை எதிர்பார்த்திருந்து துதிக்கும் துதிபலிகளினால் அந்த காரியம் கைகூடாவிடில் ஒரு விசுவாசியின் நிலை ¨ அவனை சோர்வுக்குள்ளாக்கும் ¨ நம்பிக்கையும் விசுவாசமும் குறைந்து விடும் ¨ ஆவிக்குரிய வாழ்க்கை நிலையைக் குறுகச் செய்யும் ¨ கிறிஸ்துவை விட்டே நம்மை பிரித்துவிடும் சங்கீதக்காரனின் துதி துதிக்கு நல்ல எடுத்துக்காட்டு சங்கீதக்காரனின் துதியாகும். தாவீது இவ்வண்ணமாக கர்த்தரை நான் எக்காலத் திலும் ஸ்தோத்தரிப்பேன். அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் என்றான். சங்கீத புஸ்தகங்களை வாசிக்கும் போது ஆசாப், மோசே, தாவீது மூவருமே தேவனை துதித்தார்கள். அவருடைய கிரியைகளையும் படைப்புகளையும், மகத்துவத்தையும் பாடி மகிழ்ந்தனர். “ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை”. “தேவரிர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன”;. சங்கீதம் 86:8,10 “கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன”;. சங்கீதம் 108:2 தாவீதின் விண்ணப்பங்களும், வாஞ்சைகளும் கூட இப்படியாக இருந்தது. “என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக”. சங்கீதம் 71:8 “கர்த்தாவே, என் வாயின் உற்சாக பலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்”. சங்கீதம் 119:108 “கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம் பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது” சங்கீதம் 147:1 இன்னும் தன்னை தாழ்த்தி “துதிப்பதே என் தகுதி” என்றான். மோசேயும், தாவீதும் எப்போதும் தேவனைத் துதித்து உறவாடிக் கொண்டிருந்தபடியால் தேவன் மோசேயோடே முகமுகமாக பேசினார். தாவீதும் தேவ னுடைய இருதயத்திற்கு ஏற்றவனாக இருந்தான். இவர்களுடைய துதிபலிகள் எவ்விதத்திலும் சுயநல நோக்க முடையதாய் அமைந்திருக்கவேயில்லை.
.
கடைசியாக…. பிரியமானவர்களே! வேதாகமத்தில்; மோசே, மிரியாம், தெபோராள், அன்னாள் என்று ஒவ்வொருவரும் கர்த்தரிடத்தி லிருந்து வெற்றியைப் பெற்றவுடன் கர்த்தரை புகழ்ந்துப் பாடினர். நமக்கு மாத்திரம் இந்த பழக்கம் இருக்குமானால், ஒவ்வொரு நாளும் நம் ஒவ்வொரு காரியத்திலும் நம்மை வெற்றி சிறக்கச் செய்யும் இயேசு கிறிஸ்துவை நாம் நினைவுகூர்ந்து, அவர் செய்த நன்மைகளை நினைத்து துதிப்போமானால் எந்த ஒரு நேரத்திலும் எந்த ஒரு நிலை யிலும் நமக்கு வெற்றியைத் தருவது தேவன் என்பதை உள்மனதில் பதிக்கின்றோம். இதன் விளைவு “பெருமையின் ஆவி” நம்மை நெருங்க முடியாது. எந்த வகையான வெற்றியின் பாதையிலும் “நான் அல்ல தேவனே, என்று நாம் நினைவுகூருகிறோம். இதன் மூலம் நாம் தாழ்மையாக இருக்கமுடியும். அதே நேரத்தில் தோல்விகளிலும் சங்கீதக் காரனைப் போல கர்த்தரை துதிக்கும் துதி நம் வாயிலிருக்குமானால் நாம் கர்த்தருக்குள் நம்மை திடப்படுத்தி, அந்த தோல்வியிலும் கூட கிறிஸ்துவுக்குள் ஒரு நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ள முடியும். தோல்வியிலும், விசுவாசம் வளரும். தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகளாய் மாறிவிடும். ஆகவே கர்த்தரைத் துதிக்கும் துதியும் அவசியமாகயிருக்கிறது. ஏனென்றால் துதிகளின் மத்தியில் அவர் வாசம் பண்ணுகிறார், துதிகளில் பிரியப்படுகிறார்.
.
எனவே நாமும் கர்த்தரைத் துதிக்கும் போது எந்த ஒரு எதிர் பார்ப்பும் இன்றி சுயநலம் இல்லாதவாறு வாயிலிருந்து வராதபடி நம் உள்ளத்திலிருந்து நன்றி உணர்வோடு தேவன் நமக்கு பாராட்டி வருகின்ற அவருடைய பெரிதான கிருபைகளையும், கிரியைகளையும் நினைவு கூர்ந்து துதிப்போம். அவருடைய படைப்புகளை எண்ணி துதிப்போம். மகத்துவம், மாட்சிமை, மகிமை அவருக்கே உரியது. துதி ஸ்தோத் திரபலியினால் மாத்திரம் தேவனை பிரியப்படுத்தி விட முடியாது. சுயநலம் இல்லாத துதி சத்தத்தினால் சர்வவல்ல மகத்துவமுள்ள தேவனை நாம் உயர்த்தி மகிழும் போது, நம் பிரச்சனைகள் நம் பார்வைக்கு ஒன்றும் இல்லாததாய் மாறிவிடும். தேவ ஆலோசனையைப் பெற்று தேவ சத்தத்திற்கு கீழ்படிந்து பிரச்சனைகளை கடந்து சென்று தேவ சித்தத்தை நிறைவேற்றுகிறவர்களாய் இருப்போம். சத்துருவை ஜெயிக்கிறவர்களாய் இருப்போம். ஆமென். அல்லேலுயா!
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]