CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

துன்பப்படவேண்டியது அவசியம்

துன்பப்படவேண்டியது அவசியம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

சிலுவை இல்லாத ஒரு கிறிஸ்தவத்துக்கு நேராக மார்க்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா துன்பங்களும், வேதனைகளும் சாத்தானிடமிருந்து வருகிறது. நாம் எவ்வித துன்பமும் அனுபவிக்க வேண்டியதில்லை; இயேசுவை ஏற்றுக்கொண்டால் எல்லாம் இன்பமயம், துன்பங்கள் யாவும் ஓடிப்போகும்; நினைத்ததெல்லாம் வாய்க்கும் என்றெல்லாம் பொதுவாக அனைவரும் கற்றுக்கொடுக்கின்றனர்.

இவை கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன. ஆனால் முழு உண்மையல்ல                               (only a partial truth) இவைகளால் பலரும் சோர்ந்து போவதற்கு இடமுண்டாகும்.

தேவன் நல்லவர், நன்மை செய்கிறவர் என்பது சத்தியம். நன்மையான எல்லா ஈவுகளும் ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. என்பது மாற்றமில்லாத உண்மை. இவைகளை விசுவாசிக்க விசுவாசிக்க நமது ஆவிக்குரிய ஜீவியம் புதுபெலன் அடைகிறது. வாழ்க்கை வளமுள்ளதாகிறது.

கர்த்தர் நம்மை இரட்சித்தார், அவரது சொந்தப்பிள்ளையாக்கினார். உலகிலுள்ள எவரிலும் மேன்மையான ஒரு இடத்தையும், சிலாக்கியத்தையும் அவரது பிள்ளைகளாகிய நமக்கு அவர் தந்தருளியிருக்கிறார். அவர் சிலுவையில் சம்பாதித்து வைத்திருக்கும் பாவ மன்னிப்பு, சமாதானம், தெய்வீக சுகம், பரிசுத்தம், தேவ ஞானம், தேவ மகிமை அனைத்துக்கும் நாமே சுதந்தரவாளிகள். இவைகளையெல்லாம் விசுவாசத்தால் பெறும் பாக்கியம் ஏழைகளாகிய நமக்கு அவரது கிருபையால் கிடைத்திருக்கிறது. விசுவாசத்தால் நமது தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படும்.

இவைகளையெல்லாம் நாம் நினைக்கும்பொழுது மிகவும் சந்தோஷப்படுகிறோம்; அவரைக் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூறுகிறேன். சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூருகிறோம்.

“என்றாலும் துன்பப்பட வேண்டியது அவசியமானதால்”  என்று கர்த்தர் சொல்லுகிறார். (1 பேதுரு 1:6) தேவன் நம்மை தேவையில்லாமல் துன்பப்படுத்துகிறவர் அல்ல. நாம் துன்பப்படுவது அவருக்கு சந்தோஷமல்ல. ஆனால் அவசியமாக இருக்கிறபடியால், மிகத் தேவையானபொழுது பலவிதமான சோதனைகளை (Manifold temptations) நமக்குத் தருகிறார்.

எல்லாருக்கும் எப்பொழுதும் ஒன்றுபோலுள்ள சோதனையும் வேதனையும் அல்ல. ஒவ்வொருவருக்கும் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ற அளவான சோதனை (Calculated amount of temptations) உண்டு. ஆகையால் துன்பங்களில் தேவனுடைய பிள்ளைகள் சோர்ந்து போகக்கூடாது. சாத்தான் நம்மைத் துன்பப்படுத்தவும் அவன் நமது உரிமைகளைப் பறித்துக்கொள்ளவும் விடக்கூடாது. இவைகளிலே ஒரு பகுத்தறிதல் நமக்குத் தேவையாக இருக்கிறது.

நாம் துன்பப்பட வேண்டியது ஏன் அவசியம்?

(What is need  of Trials)

  1. பொறுமையுண்டாக

கிறிஸ்தவ நற்பண்புகளுக்கு அடிப்படையானது பொறுமை. பொறுமை நமக்கு உறுதியையும், உறுதி நம்பிக்கையையும் தருகிறது. ஆகையால் உபத்திரவத்திலேயும் மேன்மை பாராட்டுகிறோம். ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களில், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் என்று பவுலடியார் கூறுகிறார். (ரோமர் 5:4, 2கொரி 12:10)

பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் கூறுகிறார். (லூக்கா 21:19) பொறுமை பூரண கிரியை செய்யக்கடவது. என்பது யாக்கோபின் கூற்று. நமது வாழ்க்கையில் பொறுமையை உருவாக்கவும் அதைப் பூரணப்படுத்தவும் உபத்திரவத்தைப்போல் ஏற்ற எத்தனம் வேறொன்றுமில்லை.

  1. நொறுக்கப்பட (For Brokenness)

தேவன் நம்மில் கிரியை செய்ய நாம் நொறுக்கப்பட்ட நிலைமைக்கு வரவேண்டியது மிகவும் அவசியம். “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். (சங் 34:18) “…..நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்” (ஏசாயா 57:15) “தேவனுக்கு ஏற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங் 51:18) இந்த நொறுக்குதலுக்கு துன்பம் மிகவும் தேவையாக இருக்கிறது. தேவன் தமது அன்பர்களையெல்லாம் துன்பத்தின் பாதை வழியாக நடத்தி அவர்களை நொறுக்கி, பண்படுத்தி தனது கரத்தின் ஆயுதங்களாக்கியிருக்கிறார். தேவமக்கள் கடந்துபோனது போன்ற கடுமையான பாதைகள் வழியாக வேறு யார் கடந்து போயிருக்கிறார்கள்?

  1. கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள

(எபி 5:8-10) விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் பல சோதனைகள் வழியாக நடத்தப்பட்டான். வாக்குத்தத்த தேசத்தில் வந்ததும் பஞ்சம் உண்டாயிற்று; செல்வம் பெருகினபொழுது லோத்து தன்னைவிட்டுப் பிரியவேண்டியது வந்தது. ஆகாரையும் இஸ்மவேலையும் தன் வீட்டை விட்டுத் துரத்த வேண்டியதாயிற்று. முடிவிலே தனது வாக்குத்தத்த புத்திரனும் தனது நம்பிக்கையுமாயிருந்த ஈசாக்கைப் பலியிட வேண்டி வந்தது. இவைகளெல்லாம் உத்திரவங்களல்லவா? மகனைப் பலியிடும் வேளையில் தான் கர்த்தர் சொல்லுகிறார், “நீ தேவனுக்குப் பயப்படுகிறவன், கீழ்ப்படிகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்.” (ஆதி 22:12)

ஆண்டவர் இயேசுவும் “……பட்டப்பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு ….தாம் பூரணரான பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி” (எபி 5:8-9) பூரணமாகுதலுக்கு அடிப்படையான கேள்வியற்ற கீழ்ப்படிதல் (implicit obedience) பாடுகளின் மூலமாகவே வருகிறது. அவ்வண்ணமே பரிசுத்தவான்கள் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டனர்.

  1. தாழ்மையடைய

மேன்மைக்கு முன்னானது தாழ்மை. தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கும் தேவன் நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் வாசம் பண்ணுகிறார். கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுகிறவர்களை அவர் உயர்த்துகிறார்.

மனித உள்ளம் சுபாவமாக மேட்டிமையுள்ளது. அதைத் தாழ்மையுள்ள தாக்க உபத்திரவம் மிகவும் தேவையானது. என் வாழ்க்கையில் வந்த உபத்திரவங்கள் தான் என் ஒரளவாகிலும் தாழ்மையுள்ளவனாக்கியது. மகா கொடிய வேதனை அனுபவித்துக்கொண்டிருந்த தேவ ஊழியர் தமது வேதனையின் மத்தியில் என்னிடம் சத்தமிட்டு சொன்னார்., “பாஸ்டர், கர்த்தர் என் ஆகங்காரத்தை அடக்குகிறார்”, இது எவ்வளவு பெரிய உண்மை! வேதனையினாலும் தாழ்மைப்படாதவர்கள் இருக்கலாம். ஆனால் பொதுவாக உபத்திரவம் நமக்குத் தாழ்மையைக் கொண்டு வருகிறது.

அன்னாள் தான் புருஷனால் நேசிக்கப்பட்டவள் என்ற பெருமையுள்ளவள்.  ஆனால் மலடி என்ற பட்டமும் சக்களத்தியின் பரிகாசமும் அவளை வேதனைப்படுத்தியபொழுது தான் அவள் தாழ்மையடைந்தாள். நான் மனகிலேசமுள்ள ஸ்திரீ ….. மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரம் மட்டும் விண்ணப்பம் பண்ணினேன் என்று கூறுகிறாள். “கர்த்தர் அவளது வேதனையையும், தாழ்மையையும் கண்டார். அவளை ஆசீர்வதித்தார். பிள்ளையையும் கொடுத்தார். (1 சாமு 1:5-18)

  1. பரலோக இராஜ்யத்தில் பிரவேசம் அடைய

“…..நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்” (அப் 14:22) உபத்திரவம் பரலோகத்துக்குப்போகும் வழியில் தேவன் வைத்திருப்பது. உபத்திரவப்பட்டால் நாம் பரலோகம் போகலாம் என்பது அதன் கருத்தல்ல. ஆனால் அங்கு போகும் வழியில் உபத்திரவம் உண்டு என்பது பொருள். நீங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தினிமித்தம் பாடு அனுபவிக்கிறவர்களாயிருக்க அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு… அதுவே அத்தாட்சி…… உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும்…” (2 தெச 1:5-6) ஆகவே உபத்திரவம் நாம் பரலோகம் செல்லப்போகிறோம் என்பதற்கு ஒரு அத்தாட்சி. அவருக்காகப் பாடுபடுகிறவர்களுக்கு அந்த இராஜ்யத்தைத் தருவது அவருக்கு நீதியாயிருக்கிறது.

பரலோகத்திலே “வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்?” என்று கேட்டபொழுது கொடுக்கப்பட்ட பதில், “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்.” என்பதே.

  1. இயேசுவுக்காக துன்பம் சகிப்பது ஒரு மேன்மை

“…..கிறிஸ்வின் மகிமை வெளிப்படும் போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்……. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்…. ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடனுபவிக்கிறவர்கள் ….”(1 பேதுரு 4:12-19)

  1. பாவ சிந்தையிலிருந்து விடுதலையுண்டாகும்

பாடு அனுபவிக்கிறவனுக்கு பாவ சிந்தைக்கு நேரமில்லை. ஆகவே பாவம் செய்வதிலிருந்து விடுதலையுண்டாகிறது. “மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கு காலம்வரைக்கும்…. பாவங்களை விட்டோய்ந்திருப்பான்”                                (1 பேதுரு 4:1-2) எல்லாரும் யுத்தக்களத்திலிருக்கும்பொழுது அரண்மனை உப்பரிகையில் உலாவிக்கொண்டிருந்த தாவீது பாவத்தில் விழுந்தான்!

  1. களிம்புகளை மாற்றுகிறது

“…அவர் என்னை சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10) தேவனே, எங்களை சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர் …தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்துவிட்டீர் (சங் 66:10-12) “இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன்” (ஏசாயா 48:10) “அவர் உட்கார்ந்து …..அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்” (மல் 3:3) களிம்புகள் நீக்கப்பட்டால்தான் நாம் தேவனுடைய பரிசுத்த ஜனமாக, உண்மையுள்ள ஊழியர்களாக மாறமுடியும். அதற்கு அவர் நம்மை உபத்திரவமாகிய குகையில் அனுப்புகிறார்.

  1. நல்வழியில் நடத்த

“….அவர் உன்னைச்சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு …..ஒருவன் தன் புத்திரனை சிட்சிக்கிறதுபோல …உன்னை சிட்சிக்கிறார்…” (உபா 8:2-5) நான் உபத்திரவப்படுவதற்றுமுன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். (சங் 119:67,71) நமது முரட்டு இருதயம் தேவனுடைய சத்தியங்களைக் கற்றுக்கொள்ள உபத்திரவம் எவ்வளவு தேவை!

  1. நித்திய மகிமையை அடைய

பூவுலகிலே நாம் அடையும் துன்பங்கள் மாபெரும் தேவ மகிமையைக் கொண்டுவரும் என்பது வேதம் வெளிப்படுத்தும் மாற்றமில்லாத சத்தியம் “உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்” (1பேதுரு 1:7) “கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்” (1 பேதுரு 4:13) “….அதி சீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.”(2 கொரி 4:17, ரோம 8:17-18)

  1. அவரோடு ஆள

ஆளுவோம், இயேசுவோடு ஆளுவோம் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆயினும் ஆளுவதற்குரிய ஒரு நிபந்தனை பாடு என்பதை மறக்க வேண்டாம். “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்….”(2 தீமோ 2:12)

இப்படியே பாடுகளின் பலனை அடுக்கிக்கொண்டே போகலாம். வேதம் பாடுகளால் நிரம்பியிருக்கிறது. இப்பாடுகள் இயேசுவுக்காகவும் அவரது சத்தியத்துக்காகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். எப்பொழுதுமே பாடுகளின் முடிவில் ஒரு மேன்மையுண்டு.

பாடுகள் வரும்பொழுது ஒருவரும் சோர்ந்து போகக்கூடாது. தகப்பன் சிட்சியாத புத்திரன் உண்டோ? கர்த்தருடைய சிட்சையை அற்பமாய் எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது  சோர்ந்து போகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனை அவர் சிட்சித்து தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார். நாம் அவருடைய பரிசுத்தத்தில் பங்குள்ளவர்களாக வேண்டுமென்று நமது பிரயோஜனத்துக்காகவே அவர் சிட்சிக்கிறார்.

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கின பின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். (யாக் 1:12)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]