எனக்கு அருமையான சகோதரிகளே,
உங்களோடு தொடர்பு கொள்ள செய்த தேவாதி தேவனுக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம்.
நாம் கர்த்தரோடிருக்க வேண்டும்.
நாம் கர்த்தரோடிருக்க வேண்டும் என்றால் அதிகாலையில் எழுந்து வேதம் வாசித்து ஜெபிக்க வேண்டும்.
இயேசப்பா இதை தான் விரும்புகிறார்.
என் பிள்ளைகள் என்னை விரும்புகிறார்களா? என்னோடு பேசுவார்களா? என்னோடு வாழ்வார்களா? என்று தான் நம்மிடம் எதிர்பார்கிறார்.
நாம் அவருடைய வசனத்தை குறித்து தியானிக்க வேண்டும். நாம் அவ்வாறு தியானிக்கும்போது நமது மனம் தெளிவடையும்.
மன கலக்கம், மன பாரம் எல்லாம் நம்மைவிட்டு அகன்று போகும். அவர் நம்முடைய மனதை தெளிவுபடுத்துவார். அன்றைக்குரிய காரியத்தை குறித்து நம்மிடம் பேசுவார்.
நாம் மட்டும் அல்ல-
நம் வீட்டில் உள்ளவர்களையும், நமக்கு அருமையானவர்கள் அனைவரையும் இதை போல் தியானிக்க சொல்வோம்.
நாம் கர்த்தரோடு நெருங்கி வாழும்போது அவர் நம்மோடு கூட உறவாடுவார்.
நம் மீது மிகவும் அன்புள்ளவராய் நம்மை அதிகம் அதிகமாய் நேசிக்கிறவராய் இருக்கிறார்.
எல்லா பிரச்சனைகளுக்கும், சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் நம்மை விலக்கிகாப்பார். தாய் தன் பிள்ளையை தோள் மீது சுமந்து காப்பது போல, அவர் நம்மை நம்முடைய எல்லா தீங்குகளுக்கும் விலக்கி அவருடைய தோளில் சுமந்து காக்கிறார்.
நாம் எந்த வேலை செய்தாலும் இதயத்தில் அவரை துதித்துகொண்டே, ஸ்தோத்தரித்துகொண்டே எல்லா பணிகளையும் செய்ய வேண்டும்.
அப்பொழுது அவர் நம்ம விட்டு விலகாமல் நம்மோடு கூட எப்பொழுதும் இருப்பார்.
இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ள, ‘நாம் அவரோடு இருப்போம் அவர் நம்மோடு இருப்பார்’.
II நாளாகமம் 15 : 2
ஆமென்.