[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
“நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான். துன்மார்க்கரோ, தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்” (நீதி 24:16)
உலகத்தார் சோர்ந்து போகலாம். முயற்சியை கைவிட்டுவிடலாம். அதைரியப்பட்டு டிப்ரஷனுக்குள் போய்விடலாம். ஆனால், தேவபிள்ளைகள் அப்படியிருக்கக்கூடாது. பாடுகளின் நேரத்தில், உங்களுக்கு சார்ந்துக் கொள்ளக்கூடிய ஆத்தும நேசர் இருக்கிறார். ஆவியானவர் துணை நிற்கிறார். பணிவிடை ஆவிகளாக தேவதூதர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்துவின் குடும்பத்தில், உங்களுக்கு உண்டாயிருக்கிற, எல்லா சிலாக்கியங்களையும் எண்ணிப்பாருங்கள்.
தாவீது ராஜா சொல்லுகிறார், “கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங் 55:22) அப். பேதுரு எழுதுகிறார், “அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1பேது 5:7) உங்களுடைய பாரங்களையும், கவலைகளையும், தீங்குகளையும், கர்த்தர்மேல் வைத்துவிட்டு, இளைப்பாறக் கற்றுக்கொள்வீர்களென்றால், நீங்கள் சோர்ந்துபோக மாட்டீர்கள். முயற்சி கைவிடமாட்டீர்கள்.
இரண்டு தவளைகள், கெட்டியான தயிர் சட்டிக்குள்ளே விழுந்து விட்டன. அதிலிருந்து வெளி வருவதற்காக, இரண்டு தவளைகளும், கால்களை அடித்து, நீண்ட நேரம் முயற்சித்தன. முடியவில்லை. ஒன்று மிகவும் சோர்வடைந்து, களைத்துப் போய்விட்டது. “என்னால் முடியாது” என்று, தன் முயற்சியை கைவிட்டுவிட்டு, மரித்து, தயிர் சட்டியின் ஆழத்துக்குள் போனது.
ஆனால் மறு தவளையோ, சோர்ந்து போகவில்லை. அதற்கு கொஞ்சமே பெலனிருந்தாலும், நான் கடைசி வரை போராடுவேன். நான் நிச்சயமாய் வெற்றி சிறப்பேன் என்று, உறுதியான தீர்மானம் கொண்டது. பாருங்கள்! இந்த தவளை முயற்சி செய்ய செய்ய, தயிருக்குள்ளிருந்த வெண்ணெய் உருண்டு, திரண்டு வந்தது. அதைப் பார்த்ததும், இந்த தவளைக்கு ஒரே சந்தோஷம். வெண்ணெயின் மேல் ஏறி நின்று, ஒரே குதியாய் குதித்து, தயிர் சட்டியைவிட்டு, வெளியே வந்துவிட்டது.
அதுபோல, நீங்களும், ஜெபத்தோடுகூட, கர்த்தர் என்னை ஒருநாளும் கைவிடமாட்டார். அவரை ஆயிரம் கோடி முறை நம்பலாம். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு என்று, முயற்சித்துக் கொண்டிருக்கும் போதே, நீங்கள் வெளிவரக்கூடிய ஒரு பாதையை கர்த்தர் உங்களுக்கு காட்டுவார். உங்களை பாதுகாத்து, ஜெயத்தைத் தருவார்.
“ஐயோ, எத்தனையோ முறை, இந்த பாவ பழக்க வழக்கத்திலே, நான் விழுந்து விட்டேன். எவ்வளவோ முயற்சி செய்து வருகிறேன். வேத வசனங்களை அறிக்கை செய்து வருகிறேன். ஊழியர்களிடம் போய் ஜெபித்து வருகிறேன். ஆனால், இந்த சோதனை என்னை மேற்கொள்ளுகிறதே, இந்த கிறிஸ்தவ வாழ்க்கையில் என்னால் ஓட முடியாது” என்றுச் சொல்லி, முயற்சியை கைவிட்டு விடாதிருங்கள்.
வெற்றி உங்களுடைய அருகில் தான் இருக்கிறது. உங்களுடைய விசுவாச கண்களினால், கர்த்தர் உங்களுக்கு தரப்போகிற வெற்றியையும், மகா பெரிய தீர்வையும் காணுங்கள். “குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா 8:36) “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவா 8:32)
நினைவிற்கு :- “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கி இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” (எபி 12:1)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]