CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

நீ எடுத்துக்கொள்ளப்படுவாயா அல்லது கைவிடப்படுவாயா?

நீ எடுத்துக்கொள்ளப்படுவாயா அல்லது கைவிடப்படுவாயா?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

“அப்பொழுது இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.” (மத்தேயு 24:40)

ஒரு கிறிஸ்தவ மனிதன் தன்னுடைய வண்டி ஒட்டுபவனிடம் இரட்சிப்பின் தேவையைப்பற்றி அடிக்கடி பேசியும் அவன் தன்னைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. ஒருநாள் அந்தக் கிறிஸ்தவர் அவனை ஒரு சுவிசேஷக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்தப் பிரசங்கியார் கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையையும் எப்படி அவரை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும் அவரோடுகூட எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் கூறினார். மற்றவர்கள் கைவிடப்பட்டு மகா உபத்திரவ காலத்தில் துன்பப்படுவார்கள் என்று கூறினார். வீட்டுக்குப் போகும் வழியில் அந்த மனிதன் தன் வண்டி ஒட்டுபவனிடம் “ஜாண், இயேசு வரும்போது என்னுடைய வண்டி எனக்குத் தேவைப்படாது, நீ அதை எடுத்துக்கொள்ளலாம்” ஜாண் சந்தோஷப்பட்டு, நன்றி ஐயா என்று கூறினான். “என்னுடைய வீடும் அதிலுள்ள தட்டுமுட்டுப் பொருட்களும் இனி எனக்குத் தேவையில்லை, அதையும் நான் உனக்குக் கொடுக்கப்போகிறேன். நீ என்னுடைய வீட்டையும் அதிலுள்ள யாவற்றையும் எடுத்துக்கொள்ளலாம் என்று அந்தக்கிறிஸ்தவர் கூறினார். அந்த வண்டி ஒட்டி மிகவும் சந்தோஷத்தோடு தன் எஜமானுக்கு நன்றி சொல்லிக்கொண்டு வீட்டுக்குப்போனான்.

அன்று இரவில் இரட்சிக்கப்படாத ஜாணால் தூங்க முடியவில்லை. அவன் தன் மனைவியிடம் தன் எஜமான் கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு அவருக்குள்ள எல்லா உடமைகளையும் தன்னை எடுத்துக் கொள்ளச் சொன்னார் என்று கூறினான். விசுவாசியான திருமதி. ஜாண் தன் கனவனிடம் கர்த்தரின் வருகைக்குப் பின் மகா உபத்திரவ காலத்தில் நடக்கிற பயங்கரமான துன்பங்களை அனுபவிக்க தனித்து விடப்படுவது மிகவும் பரிதாபமான காரியம் என்று கூறினாள். அவள் அவனிடம் நித்தியத்தை இழந்து விட்ட பின்பு இந்த உலகத்திலுள்ள ஐசுவரியம் எல்லாம் இருந்தாலும் அது வீண் என்று கூறினாள்.

தன் வாழ்க்கையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது தேவை என்பதை உணர்ந்து கொண்ட ஜாண் அன்று இரவுதானே மகிமையான இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டான். அடுத்த நாள் காலையில் தன் இருதயத்தில் மிகவும் பரவசத்தோடு சந்தோஷத்தோடும் தன் எஜமானிடத்தில் வந்தான். அவன் மிக மகிழ்ச்சியோடு சிக்கிரமாய் வேலைக்கு வந்ததைப் பார்த்து அவனுடைய எஜமான் வியப்படைந்தார். அவர் அவனிடம் எதுவும் கேட்கிறதற்கு முன்னால் ஜாண் பரவசத்துடன், ஐயா, உங்கள் வீடும் உங்கள் வண்டியும் எனக்கு வேண்டாம் என்று கூற வந்திருக்கிறேன். நீங்கள் அவைகளை எனக்கு கொடுக்க முன் வந்தது நல்ல காரியம். ஆனால் அவைகள் எனக்கு வேண்டாம் ஏனென்றால் கர்த்தர் வரும்போது உங்களோடு செல்ல நானும் ஆயத்தமாயிருக்கிறேன். ஜாணும் கர்த்தரை ஏற்றுக்கொண்டு அவருடைய அன்புள்ள வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்டது அவனுடைய எஜமானுக்கு மிகுந்த சந்தோஷம்.

வாசிக்கவும்: எபி 9:28, லூக்கா 21:27, எபி 10:37, யாக்கோபு 5:8, 1தெச 4:16-18

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]