[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
“தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுவதற்கு இடமில்லாமல் இரட்சிப்பிற்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது” (2கொரி 7:10)
தானியேல் கிரோக்கர் (DANIEL CROCKER) ஒரு நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர். அவர் அமரிக்காவில் வெர்ஸினியாவில் வாழ்ந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருந்தனர். தானியக் காப்பகம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். அவர் வெளித் தோற்றத்தின்படி நல்ல கிறிஸ்தவராக இருந்தாலும் அவரது அந்தரங்க வாழ்வில் ஒரு இருண்ட இரகசியம் ஒன்றிருந்தது. எல்.எஸ்.டி. (L.S.T) மர்ஜோனா போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிப்படையாக இருந்தது மாத்திரமல்ல 19 வயது டிரேசி (TRACY) என்ற பெண்ணைக் கொலை செய்து சடலத்தை மறைத்துவிடடார்.
ஆனாலும் அவர் சார்ந்திருந்த சபையில் அனைவரும் மதிக்கத்தக்கதான நல்ல கிறிஸ்தவராக இருந்தார். சபை தொடர்பான ஊழியங்களில் உற்சாகமாகக் கலந்துகொள்வார். இந்தச் சூழ்நிலையில் சிறைச்சாலையிலுள்ளோருக்கு நற்செய்தியளிக்கும் ஊழியத்திலும் இருந்தார். ஒரு காலகட்டத்தில் ஆண்டவரிடத்தில் அறிக்கைசெய்து போதை வஸ்துக்களிலிருந்து விடுதலை பெற்றிருந்தாலும், ஒரு பெண்ணைக் கொலைசெய்து மறைத்தது, அவரது மனதை மிகவும் அழுத்திக்கொண்டேயிருந்தது. ஒருநாள் சிறை ஊழியத்திலிருந்து திரும்பும் போது சிறையிலுள்ளோர் சிலர் தாங்கள் செய்த குற்றத்திற்குத் தண்டனையை அடைந்திருக்கிறோம். என்றும், தண்டனையைக் குறித்து தங்களுக்குக் கவலையில்லை என்றும் மனப்பூர்வமாகச் சொன்னது, தானியேல் கிரேக்கரின் மனதில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது மாத்திரமல்ல, மிகுந்த மனஅழுத்தத்தையும் உண்டாக்கியது. அன்று இரவு தன்னுடைய மனைவியிடம் இதைக் குறித்து மனம் விட்டு பேசி இருவரும் ஒருமித்து ஜெபித்தனர். தான் செய்த கொலைக்குற்றத்தை மனதின் ஆழத்தில் மறைத்து வைத்துக் கொண்டு குற்றத்தை மூடி மறைத்து தண்டனைக்குத் தப்பிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தார். நாட்டின் சட்டத்தின் அதிகாரத்திற்கு முன் சரணடைவது எப்படி என்பதைக் குறித்து சிந்திக்கலானார். சிறை ஊழியத்தின் தலைவரும் சபை பாஸ்டருமான அல் லாரென்ஸ்சை (AL LAWRENCE) ஆலோசனைக்கு அணுகினார். அவர் பாவ அறிக்கையின் அவசியத்தையும், அதில் செயல்படுத்த வேண்டிய காரியத்தைச் செயல்படுத்த வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். கிரோக்கிரிலிருந்த விசுவாசம் “பல ஆண்டுகளாக தன்னுடைய ஜீவியத்தில் மறைத்து வைத்திருந்த அந்தப் பகுதியை சீர்படுத்தியாகவேண்டும்” என்று உணர்த்தியது. அதிகாரத்திற்குச் சரணடையத் தீர்மானித்தார். இதை தன்னுடைய பிள்ளைகள் 9 வயதான ஐசக், 8 வயதான அனயெய்ஸ் இவர்களிடம் சொன்னார். பிள்ளைகள் “அப்படிச் செய்யக்கூடாது” என்று கண்ணீரோடே அழுதார்கள். அவரும் கண்ணீரோடே அப்படி அல்ல. நான் இதைச் செய்தாக வேண்டும். ஏனெனில் நான் என்னை சீர்ப்படுத்திக் கொள்ளாமல் ஒரு மாய்மாலக்காரனாக (HYPOCRITE) இருந்து கொண்டு, என் பிள்ளைகளை தேவனுடைய வார்த்தையின்படி வளர்த்த “மாய்மாலக்காரன்” என்ற குற்றமும் என்மீது சுமரும் என்று பிள்ளைகளுக்குச் சொன்னார்.
தானியேல் கிரோக்கர் நீதித்துறை முன்பாகச் சரணடைந்தார். அவரது வழக்கை நீதிமன்றம் விசாரித்து பரிசீலனை செய்தது. காலத்தால் தாமதமாயினும் மனப்பூர்வமாகத் தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட நற்பண்பையும், அவரது நல்நடக்கையையும் கருத்தில்கொண்டு தண்டனை வழங்குவதில் பரிவுகாட்டி இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்தது. இரண்டு ஆண்டு சிறைவாழ்வை முடித்து அவர் வெளியே வந்தார். பிள்ளைகள் முன்பாகவும், சபை முன்பாகவும், சமுதாயத்தின் முன்பாகவும் அவர் மீது மதிப்பு மரியாதையும் பெருகியது. அவரது நேர்மையை முழுச் சமுதாயமும் பாராட்டியது.
அப்போஸ்தலனாகிய பவுல் “நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்” (அப் 24:16) என்று குறிப்பிடுகிறது. இதுதான் நேர்மையின் (INTEGRITY) இலக்கணம். தேவனுக்கு முன்பாக நேர்மை, எல்லா மனிதர்களுக்கு முன்பாக நேர்மை, பிள்ளைகளுக்கு முன்பாக நேர்மை, எப்பொழுதும் நேர்மை. இவைகளையே “தேவனுடைய பிள்ளைகள்” என்று அழைக்கப்படுகிற நம்மிடத்தில் ஆண்டவர் எதிர்பார்க்கிறார். மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு முன்பாகவும் தானியேல் கிரோக்கரின் நடைமுறை ஜீவியத்திற்கும் முன்பாக நம்மை நிறுத்திக்கொண்டு நம்மை ஒரு சுய ஆய்வு (INTROSPECTION) செய்வோம். சீர்ப்படுத்திக்கொள்வோம். “மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத் தொடங்காதிருங்கள்.” (லூக் 3:8)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]