CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

யாரை சார்ந்து வாழ்கிறாய்?

யாரை சார்ந்து வாழ்கிறாய்?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

படிக்கும்பொழுது சிலர் தத்துவத்தில் மாத்திரம் (theory) சிறந்து விளங்குவர், சிலர் செயல் முறை ஆக்கத்தில் மாத்திரம் (Practical) சிறந்து விளங்குவர்.. இன்னும் ஒரு சிலர் இந்த இரண்டிலுமே சிறந்து விளங்குவர்.. இப்படி எல்லாவற்றிலும் சிறந்த தாவரவியல் படித்துக் கொண்டிருந்த நல்ல ஒரு மாணவன் குமார்…. புதிய காரியங்களைக் கற்றுக்கொள்வதிலே மிகுந்த ஆர்வமாக இருந்தான்..

.

ஒரு நாள் வீட்டின் அருகாமையில் நின்றுகொண்டிருந்த இரண்டு சின்ன தாவரங்களுக்கு ஒன்றை A என்றும் மற்றொன்றுக்கு B என்றும் பெயர் வைத்து, A யோடு B இணைத்து ஒரு கயிறால் கட்டி விட்டு சில நாட்கள் கவனித்து வந்தான். இரண்டும் இப்பொழுது ஒன்றாக மாறி தண்டுகள் இணைந்து… அது அவனை ஆச்சரியத்தில் வீழ்த்தியது… சற்று நேரம் யோசித்துவிட்டு ஒரு ஐடியா வந்தது…. B ன் வேரை வெட்டினால் என்ன நடக்கும்? எனறு சொல்லி வேரை வெட்டி விட்டு சில நாட்கள் தனது கண்காணிப்பில் வைத்தான்.

.

இப்பொழுது B தன்னுடைய வேர் இல்லததினால் முற்றிலும் A யை சார்ந்திருந்தது….. அதன் உணவும், பாதுகாப்பும் முழுக்க முழுக்க A யிலிருந்து வந்தது.. ….அதன் இரண்டின் தண்டுகளும் ஒன்றோடொன்று இணைந்தது.. அப்படியே ஒரு புதிய தோலும் உருவாகி இரண்டையும் ஒன்றாக்கியது..

.

ஐயா நாம் யாரை சார்ந்திருக்கிறோம் ! ! • நம்மையே நாம் சார்ந்திருக்கிறோமா? • பிற மனிதர்களை நாம் சார்ந்திருக்கிறோமா? • அல்லது நம்மை படைத்த தேவனை சார்ந்திருக்கிறோமா? ஆமாங்க.. தேவனை அண்டிக்கொள்வதே நலம்…. நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது. யோவான் 15:5 எப்பொழுது நாம் தேவனோடு சார்ந்திருக்க முடியுமானால், நம்முடைய வேர் (மாமிசம் அல்லது சுயம்) அழிந்து, இனி நானல்ல கிறிஸ்துவே என்னோடு ஜீவிக்கிறார் என்ற உன்னத விசுவாசத்தோடு அவரை பற்றிக்கொள்ளும்போது அவர் நம் கன்மலையும் பங்குமாக மாறுகிறார். என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். சங் 73:26 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். யோவ 15:7

.

Christian life is not Theoretical.. But it is Practical …..

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]