CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

வெறுமையான கல்லறை

வெறுமையான கல்லறை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

ஜெரிமி பிறவியிலேயே கோணலும் மாணலுமான சரீரத்தோடும் சரியான மூளை வளர்ச்சியற்ற நிலையில் பிறந்தவன். 12 வயது நிரம்பியும் கூட அவன் இன்னும் இரண்டாவது வகுப்பிலேயே இருந்தான். அவனுக்கு கற்றுக்கொள்ளும் திறன் மிகக்குறைவு. அவனது வகுப்பு ஆசிரியை மிஸ். சாராமில்லர் அடிக்கடி அவனைக்குறித்து எரிச்சலடைவதுண்டு. ஏனெனில் அவன் வகுப்பறையிலேயே சில வேளைகளில் உடலைப் பல கோணங்களில் அசைத்துக்கொண்டு முனகல் சப்தங்களை எழுப்புவான். அது பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அருவருப்பாயிருக்கும்.

ஆனால் சில வேளைகளில் இருண்ட அவனது மூளையில் சிறிய ஒளிவந்தது போல மிகத் தெளிவாகவும், ஞானமாகவும் பேசுவான். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் அவனைப்பற்றி வகுப்பு ஆசிரியைக்கு எரிச்சல்தான். ஒருநாள் ஆசிரியை அவனது பெற்றோரை நேரில் வந்து சந்தித்து பேசும்படி தகவல் அனுப்பினாள்.

ஜெரிமியின் தாயும் தகப்பனும் வந்தனர். வகுப்பு முடிந்தபின் ஆசிரியை மிஸ். சாராமில்லருக்கு முன்பாகப் போய் அமர்ந்தனர். அவர்களது பார்வையில் ஜெரிமியைக் குறித்து அவள் என்ன சொல்லப்போகிறாளோ என்ற ஏக்கம் பிரதிபலிக்க அமைதியாக இருந்தனர்.

“ஜெரிமி இந்தப் பள்ளியில் படிக்க வேண்டிய பையன் அல்ல. அவனைப் போன்றோருக்கு பிரத்தியேகமாக அமைந்திருக்கும் பள்ளியில் சேர்ப்பதுதான் நல்லது. நன்றாக கற்றறியும் திறனுள்ள பிள்ளைகளோடு சேர்ந்து இவனையும் வைப்பது நல்லதல்ல” என்று மிஸ். சாரமில்லர் பொறுமையோடு கூறினாள். இதைக்கேட்ட அவனது தாயார் அழுகையை அடக்க முடியாமல் அழுதே விட்டாள். தகப்பனார், அவளை சமாதானப்படுத்தும் வகையில் அவளது முகத்தை உற்று நோக்கி தோளை தட்டிக்கொடுத்து விட்டு “மிஸ். சாரா நீங்கள் சொல்வது போன்ற பள்ளி அருகாமையில் எங்குமில்லை. அவனை இந்தப் பள்ளியிலிருந்து அப்படிப்பட்ட பள்ளியில் சேர்ப்போமென்றால் அவன் அதிர்ச்சியடைந்து விடுவான். அதை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. ஏனென்றால் மிஸ் சாரா, ஜெரிமி உங்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறான்” என்று சொன்னார். அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை. நீண்ட நேர அமைதிக்குப் பின் “சரி, நீங்கள் போய்வாருங்கள்” என்று மிஸ் சாரா அவர்களை எந்த பதிலும் சொல்லாமல் அனுப்பிவைத்தாள். பெற்றோர் கனத்த இருதயத்தோடு வீடு திரும்பினார்கள்.

மிஸ் சாரா அவர்களை அனுப்பிய பின்னரும் நீண்ட நேரம் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே வெறுமையாக பார்த்துக்கொண்டேயிருந்தாள். பனி பெய்து கொண்டேயிருந்தது. ஜெரிமியின் பெற்றோர் மீது அவளுக்கு இரக்கமான சிந்தை தோன்றியது. என்னயிருந்தாலும் அவர்கள் பெற்றோர்கள், இதுவும் ஜெரிமி அவர்களின் ஒரே மகன். அவர்களுக்கு இந்த நிலையில் பிறந்திருக்கிறான் என்ற பரிவான உணர்வு ஏற்பட்டது. ஆனால் மறுபக்கம், 18 பிள்ளைகளுக்கு மத்தியில் அவர்கள் முறையாக கற்றுக்கொள்வதற்கு இவன் தடையாகயிருக்கிறானே. அவனை எவ்வளவு முயற்சி செய்தாலும் தேற்ற முடியாதே, முயற்சிப்பதே வீண்தானே. அவளது சிந்தையில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

இதையே சிந்தித்துக்கொண்டிருக்கும் போது தன்னையும் அறியாமல் “ஆண்டவரே!” என்று கதறி விட்டாள். “ஆண்டவரே, என்னுடைய பிரச்சனைகளை வைத்து நான் முறையிட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் பரிதாபமான அந்த பெற்றோரின் பிரச்சனைகளோடு ஒப்பிடும் போது இது மிகச்சிறியதுதான். ஆண்டவரே, ஜெரிமியோடு பொறுமையோடு நடந்து கொள்ள எனக்கு உதவி செய்யும்” என்று ஜெபித்து தன்னைத் தேற்றிக்கொண்டாள்.

அன்றிலிருந்து ஜெரிமியின் உடல் நெளிப்புகளையும், அருவருப்பான அவனது சத்தத்தையும் சகித்துக்கொள்ளத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டாள். ஒரு நாள் ஜெரிமி தனது பாதிக்கப்பட்ட ஒரு காலையும் இழுத்துக்கொண்டே ஆசிரியையின் மேஜை அருகில் சென்றான். “மிஸ், உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன்” என்று அவனுக்குரிய பாணியில் வகுப்பிலுள்ள எல்லாப் பிள்ளைகளும் கேட்குமளவுக்குச் சத்தமாகச் சொன்னான். மிஸ் சாராவின் முகம் உணர்ச்சி பொங்கி சிவந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டு “நல்லது ஜெரிமி, நீ உன்னுடைய இடத்தில் போய் உட்கார்” என்று அன்புடன் சொன்னாள். ஜெரிமி, புன்முறுவலோடு தனது இருக்கைக்குச் சென்றான்.

ஈஸ்டர் பண்டிகையின் நாள் நெருங்கிக்கொண்டிருந்த காலம். ஒருநாள் மிஸ் சாரா இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பிள்ளைகளுக்குச்சொல்லிக் கொடுத்தாள். ஈஸ்டர் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் பண்டிகை என்பதை பிள்ளைகள் விளங்கிக் கொண்டு அவர்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். உயிர்த்தெழுதலிலே ஒரு புதிய ஜீவன் உருவாகிறது என்பதை வலியுறுத்தி விளங்க வைக்க ஒவ்வொருவருக்கும் ஒரு பிளாஸ்டிக் முட்டைக் கூடை கொடுத்து அந்த முட்டைக் கூட்டையிலிருந்து புதிய ஜீவன் வெளிப்படுவதை விளக்கும் வகையில் முட்டைக் கூட்டில் ஏதேனும் வைத்து மறுநாள் காலை வரும்போது கொண்டுவர வேண்டும் என்று மிஸ் சாரா சொல்லிக்கொடுத்தாள். “ எல்லாரும் விளங்கிக்கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஆமாம், மிஸ்” என்று ஜெரிமி தவிர எல்லா பிள்ளைகளும் ஒருமிக்க பதிலளித்தனர். ஆனால் ஜெரிமி மிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது கண்கள் மிஸ் சாராவை விட்டு எங்கும் அகலவேயில்லை. இயேசுவின் மரணத்தைக் குறித்தும் உயிர்த்தெழுதலைக் குறித்தும் அவன் ஏதாவது விளங்கியிருப்பானா? ஒருவேளை விளங்கியிருக்கமாட்டான். எதற்கும் அவனது பெற்றோரை வருவித்து அவன் பிளாஸ்டிக் முட்டைக்கூட்டை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கூறிவிடலாம் என மிஸ் சாரா நினைத்தாள். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அன்றுமாலை மிஸ் சாராவுக்கு ஜெரிமியின் பெற்றோரிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மறுநாள் காலை பள்ளி வந்ததும் ஜெரிமி உட்பட 19 பிள்ளைகளும் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிளாஸ்டிக் முட்டைக்கூட்டை ஆசிரியையின் மேஜையில் இதற்கென வைக்கப்பட்டிருந்த கூடையில் வைத்தனர். முட்டைக் கூடுகளைத் திறக்கும் நேரம் வந்தது.

மிஸ் சாரா முதல் முட்டையை எடுத்து திறந்து பார்த்தாள். அதனுள் ஒரு அழகான பூ இருந்தது. “உண்மைதான். பூ ஒரு புதிய ஜீவனுக்கு அடையாளம்தான். செடிகள் பூமியிலிருந்து முளைத்தெழும்பி வருகின்றன. ஏற்ற காலத்தில் அந்த செடி ஒரு பூவை பிறப்பிக்கிறது. அந்த பூவின் உள் ஒரு புதிய ஜீவன் உருவாக ஆரம்பிக்கிறது” என்று மிஸ் சாரா விவரித்தாள். முதல் வரிசையில் இருந்த பிள்ளை எழும்பி “மிஸ், அது என்னுடைய முட்டை” என்று பெருமையோடு சொன்னாள். “நல்லது” என்றாள் மிஸ் சாரா.

இரண்டாவது முட்டையை எடுத்துப் பார்த்த போது அதனுள் ஒரு அழகான பலவர்ண வண்ணாத்துப்பூச்சி இருந்தது. “இதுவும் ஒரு புதிய ஜீவன் தான். முட்டையாயிருந்து புழுவாகி, பின்பு புழு ஒரு கூட்டுப்புழுவாகி, அதிலிருந்து புதிய ஜீவனையும் புதிய ரூபத்தையும் பெற்று, தரையில் ஊர்ந்து கொண்டிருந்த நிலை மாறி வானில் சிறகடித்துப் பறக்கும் புதிய ஜீவனாக மாறியிருக்கிறது.” ஒரு மாணவன் எழுந்து “மிஸ், அது என்னுடைய முட்டை” என்றான். “நல்லது” என்றாள் மிஸ். சாரா

அடுத்து முட்டையை மிஸ் சாரா எடுத்தாள். அது வெறுமையாயிருந்தது. நிச்சயமாக அது ஜெரிமியுடையதாகத்தான் இருக்கும் என்று நினைத்தாள். நான் அவனது பெற்றோரிடத்தில் சொல்லியிருக்கவேண்டும், என்னுடைய தவறுதான் என்று தனது மனதில் எண்ணிக்கொண்டாள். எனினும் எல்லா பிள்ளைகள் மத்தியிலும் அவனுக்கு சிரமமான ஒரு சூழ்நிலையை உண்டாக்க வேண்டாம். என்று கருதி ஒன்றும் சொல்லாமல் அந்த முட்டையை தூரத்தில் வைத்துவிட்டு அடுத்த முட்டையை எடுக்கப்போனாள்.

இதைக் கவனித்த ஜெரிமி, “மிஸ், நீங்கள் என்னுடைய முட்டையைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?” என்று கேட்டான்

“ஜெரிமி, நீ உன்னுடைய முட்டையில் ஒன்றுமே வைக்கவில்லையே, அது வெறுமையாக அல்லவா இருக்கிறது?”

“ஆமாம் மிஸ், இயேசுகிறிஸ்து மரித்து கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார். மூன்றாம் நாளில் அவருடைய பிதா அவரை ஜீவனோடு எழுப்பினார். வெறுமையான அந்தக் கல்லறை இயேசு புதிய ஜீவனைப் பெற்றுக்கொண்டார் என்பதற்கு அடையாளம் இல்லையா? என்று என்றுமில்லாத அளவு தங்குதடையில்லாமல் பெரிய ஞானியைப் போல அவன் பேசியது மிஸ் சாராவுக்கு பெரிய அதிர்ச்சியாகயிருந்தது. ஜெரிமி, விளங்கிக்கொள்ளவில்லை; விளங்கிக்கொள்ளும் திறன் அவனுக்கு இல்லை என்று நினைத்தேன்! நான்தான் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்பதை நிரூபித்து விட்டானே! இவனுக்கு இந்த ஞானத்தை யார் கொடுத்தது?”

இடைவேளை மணி ஒலித்தது. பிள்ளைகள்  யாவரும் வெளியே ஓடினர். மிஸ் சாரா தனிமையிலிருந்தாள். “ஆண்டவரே” என்று வாய்விட்டு அழுதே விட்டாள். “ஆண்டவரே, ஜெரிமிக்கு நீர் புதிய ஜீவனைக் கொடுத்திருக்கிறீர்.”

மூன்று மாதம் கழித்து ஒருநாள் ஜெரிமி மரித்து விட்டான் என்ற செய்தி வகுப்பு ஆசிரியை மிஸ் சாராவுக்கு அறிவிக்கப்பட்டது. அவளது இருதயமே நின்றுவிடும்போல் உணர்ந்தாள். “ஜெரிமி…. ஆண்டவர் உனக்கு புதிய ஜீவனைத் தருவார்,” என்று உள்ளத்தில் ஆழத்திலிருந்து சொன்னாள்.

பள்ளியிலிருந்து கடைசி மரியாதை செலுத்துவதற்குச் சென்றிருந்தனர். பிரேதப் பெட்டியின் மீது, ஜெரிமி முன்பே தயாரித்து வைத்திருந்த 19 முட்டைக் கூடுகள் வைக்கப்பட்டிருந்தன. யாவும் வெறுமையாகவே இருந்தன. அதில் பதினெட்டு முட்டையில் ஒவ்வொன்றிலும் அவள் வகுப்பு மாணவரின் பெயரும் ஒன்றில் மிஸ் சாரா என்று வகுப்பு ஆசிரியையின் பெயரையும் ஜெரிமி எழுதி வைத்திருந்தான். மிஸ் சாரா கண் கலங்கி கன்னத்தில் கண்ணீர் வடிய அவனுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். “ஜெரிமி…. உனக்கு எவ்வளவு பெரிய இருதயம். உனது விருப்பப்படியே நாங்களும் புதிய ஜீவனை அடைவோம் என்று உறுதி எடுத்துக்கொள்கிறேன்” என்று இருதயத்தின் ஆழத்திலிருந்து அறிக்கையிட்டாள்.

 

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]