CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமென்னும் யுத்தக்களம்

ஜெபமென்னும் யுத்தக்களம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

நமது ஜெபவாழ்க்கையை அழித்துப்போட வேண்டுமென்பதே சாத்தானின் மிகப்பெரிய நோக்கமாகும். ஜெபமில்லாத ஊழியத்திற்கோ ஜெபமில்லாத மார்க்கத்திற்கோ சாத்தான் அஞ்சான். ஆனால் நாம் உண்மையாய் ஜெபிக்கும்பொழுது அவன் நடுங்குவான். அப்படியானால் நாம் கடமைக்காக மாத்திரம் ஜெபிப்போமானால் நமது நிலைமை பரிதாபமே!

ஜெபத்தைக் குறித்து புத்தகங்களும் பிரசங்கங்களும் அநேகம். ஆனால் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும்பும் ஜெபமோ சுருக்கம். நமக்கு ஜெபத்தைக் குறித்து இன்னுமொரு புத்தகம் நமக்குத் தேவையில்லை. தேவையானது ஜெபம், ஜெபம் மாத்திரமே!

நமக்குச் சீரிய முயற்சியும், அதிகக்கட்டுப்பாடும், அளவற்ற அன்பும், மிகுந்த பொறுமையும், உண்மையும் உண்டானால் மாத்திரமே ஜெபவாழ்க்கை உண்டாகும்.

“நமக்கு சிந்திக்கவும் உணரவும் முடிகிறதே தவிர அதைச் செயல்படுத்த முடியவில்லையே. செயல்படுத்த முடியாவிடில் செயலிழந்தவர்களாகிவிடுவோம்.” என எச்சரிக்கிறார். C.S Luvis.

சிலர் உயிருள்ள ஜெபக்கூட்டம் வேண்டுமென்று வாஞ்சிக்கிறார்கள். பலர் உயிரற்ற ஜெபக்கூட்டங்களுக்குப் போவதை ஏற்கனவே நிறுத்தியும் விட்டார்கள். சிலர் கடமைக்காக இன்னமும் ஜெபக்கூட்டங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

உன்னை ஜீவனுள்ள தேவ சமுகத்துக்கு உந்தித்தள்ளுவது மனித பயமா? தேவ பயமா? ஜெபக்கூட்டங்களுக்கு மனிதரை இழுப்பு விசேஷித்த பிரசங்கிமாரா? விசேஷித்த பாடற்குழுக்களா? அல்லது தேவனைப்பற்றிய வாஞ்சையா?

ஒரு பிரசங்கம் ஆயத்தப்படுத்துவதற்காகப் பலமணி நேரங்களை செலவழிக்கும் போதகர்கள் ஜெபக்கூட்டங்களை நடத்துவதற்காக ஆயத்தம் செய்கிறார்களா? ஜெபம்தானே என எண்ணுகிறார்கள். வருகிறவர்களும் ஜெபம்தானே என வருகிறார்கள். சிலர் ஜெபக்கூட்டங்களுக்கு ஆட்களைக் கூட்ட பல உபாயதந்திரங்களைச் செய்கிறார்கள். விசேஷித்த பிரசங்கிமார், அற்புத சாட்சிகள், விசேஷப்பாடல்கள். ஆனால் அப்போஸ்தலரில் படிக்கும் ஒருமனப்பட்டு ஒரிடத்தில் என்கிற அனுபவம் எங்கே?

ஆவிக்குரிய யுத்தத்தின் உண்மையான அறிவில்லாதவர்கள் கூட்டத்தின் எண்ணிக்கையை அதன் வெற்றியென எண்ணுகிறார்கள். (2 கொரி 10:4-5) வசனங்களைக் கருத்துடன் படியுங்கள். எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவ பலமுள்ளதாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.         (2 கொரி 10:4-5)

“உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.” (வெளி 3:1) இதுதான் இன்றுள்ள நமது நிலைமையா? பரிசுத்த ஆவி இல்லாவிடில் எல்லாம் செத்த நிலமைதான், மறந்து போக வேண்டாம்.

சாத்தானின் முழு நோக்கமும் நமது ஜெபத்தை இல்லாமல் ஆக்குவதுதான். ஜெபத்திலே நம்மை அவன் மேற்கொண்டால் நாம் செய்யும் எவ்வேலையும் பயனற்றதாகிவிடும். ஜெபத்துக்கும் ஆவியின் நிறைவுக்கும் ஈடான எந்த வேலையும் இல்லை.

நாம் ஆவிக்குரிய தோல்வியை ஒத்துக்கொண்டு ஜெபத்தை சீர்ப்படுத்த முன்வருவோம். ஜெபமில்லாமல் உறுதியான ஊழியம் நடைபெறாது. கர்த்தர் நம் வாழ்வில் இருந்தால் ஜெபிக்கச் சொன்ன அவரது கட்டளையை நாம் நிறைவேற்றுவோம்.

நாம் ஆவிக்குரிய யுத்தகளத்தில் இருக்கிறோம். ஜெபம் நமது முக்கிய ஆயுதம். நாம் ஜெபிக்காதிருக்க அவனால் ஆனதெல்லாம் சாத்தான் செய்வான் என்பதை மறக்க வேண்டாம்.

ஜெபக்கூட்டத்தில் இரண்டு பேர் இருந்தாலும் சோர்ந்து போகாமல் ஜெபியுங்கள். வராதவர்களை நேரடியாக சந்தித்து ஏன் ஜெபத்துக்கு வரவில்லையென்று கேளுங்கள். பகல் முழுவதும், தேவையானால் இரவிலும் நீண்டு நிற்கும் ஜெபங்கள் தேவை. தேவைகள் உலக முழுவதிலுமுள்ள தேவைகளுக்காக ஜெபியுங்கள். ஜெபிக்க நேரம் ஆகும் என்பதை மறக்க வேண்டாம். அது எளிதாக இராது. ஜெபத்தில் சோர்ந்துபோகாமல் தைரியமாய் முன்னேற வேண்டும். கிரயம் கொடுக்க ஆயத்தமாய் இருக்க வேண்டும்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]