[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
பல்கேரியா நாட்டிலுள்ள சோபியா நகரில் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது. அக்கூட்டத்தின் முன் வாலிப பெண் நின்றாள். எல்லாருடைய கவனத்தையும் கவரும் அளவில் கிறிஸ்தவ வேதத்திற்கு விரோதமாக மிகவும் வல்லமையாக பிரசங்கித்துக் கொண்டிருந்தாள். கூடியிருந்தவர்களில் சிலர் மகிழ்ந்து பூரித்தனர். வேறு சிலர் திகைத்து நின்று செவி சாய்த்தனர். அவள் இவ்விதமாய் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று பைத்தியம் பிடித்தவள் போல் யார் விளக்கை அணைத்தது? யார் விளக்கை அணைத்தது? என்று சத்தமிட்டாள்.
கூடியிருந்தவர்கள் மரியா, விளக்கு அணைக்கப்படவில்லை. எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது என்று பதிலளித்தனர். உடனே அவள் நான் கண்பார்வை இழந்துவிட்டேனே என்று கதறினாள். கண் பார்வை இழந்து தாடுமாறின அவளை அவளுடைய நண்பர்கள் கைதாங்கி மேடையிலிருந்து இறக்கி, அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பிரசித்திப்பெற்ற வைத்தியர்கள் அவளை பரிசோதித்து, அவள் கண்பார்வை இழந்திருப்பதின் இரகசியம் அறியாது திகைத்தனர். அவளுடைய கண்களில் ஒருவித குறைபாடும் காணப்படவில்லை. ஆனால் அவள் பார்வை இழந்திருந்தாள்.
கண்பார்வையை இழந்த மரியா இரவு நேரங்களில் தூக்கமின்றி, மனநிம்மதியற்ற நிலையில், தான் பார்வை இழந்ததற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணி அல்லலுற்றாள். எல்லாவற்றையும் சிருஷ்டித்த ஒருவர் உண்டு அவர் மனம் நோகும்படி நடந்து கொண்டேனோ? என்று கலங்கினாள். அதே சமயத்தில், அதற்கு இடங்கொடாது அவ்வாறு இருக்க இயலாது என்றும் கூறி வேதனையுற்றாள். ஆனால், அவள் கூறிய வார்த்தைகளே அவளை ஏளனம் செய்வதுபோல திரும்பத்திரும்ப ஒலித்தன. வெறுப்புற்றவளாக பொதுவுடமைக் கொள்கையையுடைய எனக்கு எல்லாம் நன்றாகத் தெரியும் என்று கூறி மனமுடைந்து கதறினாள்.
மரியா நான்கு ஆண்டுகளாக பொதுவுடமைக் கருத்துக்களிலேயே ஊன்றி பயிற்றுவிக்கப்பட்டவள். பரிசுத்த வேதாகமத்திற்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் விரோதமாகப் பிரசங்கிக்க நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தாள். பொதுவுடமைப் பிதாவாகயிருந்த லெனின் கருத்துப்படி “மதப்பற்று, மக்களை போதை மயமாக்குகிறது” என்பதே. மரியா லெனினை தெய்வம்போல் பாவித்து, அவரது கொள்கைகளை விசுவாசத்துடன் பின்பற்றினாள். பல்கேரியாவில் பொதுமக்கள் முன் பேசும் திறமை பெற்றவளாக விளங்கினாள். ஆனால்…. அதன் பரிதாபமான முடிவு இப்பொழுது என்னவாயிற்று? கண்பார்வையை அவள் இழக்கநேரிட்டது. தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்திலே சொல்லிக் கொள்கிறான்” (சங் 14:1) ஆகையால் அதன் பலனை அவன் அனுபவித்தே தீர வேண்டும். பயங்கர ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
பயங்கர சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த மரியா திடீரென்று தேவன் ஒருவர் உண்டு என உணர ஆரம்பித்தாள். அவள் உரத்த சத்தமிட்டு, “இயேசுவே நீர் உண்மையாக இருக்கிறீர் என்பதை எனக்கு நிரூபித்துக்காட்டும். என்னுடைய சிறுவயதுமுதல் கற்றறிந்த பெரியோர்கள் தேவன் என்பது கிடையாது. இயேசு என்று ஒருவர் இல்லை என கூறி எனது மனதில் பதிய வைத்து விட்டார்கள். ஆனாலும் இயேசுவே, என் ஒளி இழந்த வாழ்க்கையில் நீர் அற்புதத்தை செய்வீரென்றால், முன்போல் நான் கண்பார்வையடைந்தால் உம்மை விசுவாசிப்பேன் என்று இயேசுவிடம் மன்றாடினாள்.
வியக்கத்தக்க வண்ணம்; எப்படி திடீரென்று கண்பார்வையை இழந்தாளோ, அவ்வண்ணமே திடீரென்று மீண்டும் இழந்த கண்பார்வையை, பவுலைப்போல் அற்புதமாக பெற்றுக்கொண்டாள். அற்புதத்தை தன் இருள்சூழ்ந்த வாழ்க்கையில் அனுபவித்த மரியா, அந்தஷணமே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை தன் மீட்பராகவும், சொந்த இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டாள்.
ஆனால், பொதுவுடமைக் கட்சியினர் அவள் கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்து அவளை சித்திரவதை செய்ய ஆரம்பித்தனர். தங்களுடைய நல்லதொரு பேச்சாளரை இழந்து போனபடியால் அவளைத் தண்டிக்க தீர்மானித்தனர். அவளுடைய கட்சி சீட்டைப் பிடுங்கி, அவளுடைய கண்முன்னால் கிழித்தெறிந்தனர். ஆனால் மரியா தன் மனஉறுதியிலே நிலைத்திருந்து ஒரு ஒப்பற்ற சாட்சியாய் விளங்கினாள். பேச்சுத்திறமையும், அறிவாற்றலும் பெற்ற அவள், பொதுவுடமைக் கொள்கைகளை எதிர்த்துப் பிரசங்கித்து அநேகரை இயேசுகிறிஸ்துவிடம் வழிநடத்தினாள். வேதாகமத்தை பழிப்பதற்காகவே அதைக்கற்ற அவள் அதிலுள்ள விலையேறப்பெற்ற உண்மைகளைக்கொண்டு அற்புத சொற்பொழிவாற்றி அநேகரை இரட்சிப்படைய செய்தாள். பல்கேரியா நாட்டு மக்கள் அவளை சகோதரி மரியா என்று அழைத்து கனம் பண்ணினார்கள்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]