[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
உண்மையான ஜெபம் வெறும் மனஉணர்வோ அல்லது கவிதையோ அல்லது நாவன்மைமிக்க சொல் திறனோ அல்ல என்பதை நினைவுகூருவோம். ஜெபம் என்பது “ஆண்டவரே, ஆண்டவரே” என நாம் கூப்பிடும் அழகான இசைத்தொனியுமல்ல! அது வெறும் வார்த்தைகளின் வடிவமல்ல; அது ஆண்டவரின் நாமத்தை அழைப்பது என்பது மட்டுமல்ல, அது கீழ்ப்படிதல். அது தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்கிற கற்பாறையில் அடித்தளமிடப்பட்டது. கீழ்ப்படிகிறவர்கள் தான் ஜெபிக்கிற உரிமை பெற்றவர்கள். ஜெபிப்பதற்குப்பின்னால் செய்கை இருக்க வேண்டும்; தேவனுடைய சித்தத்தை அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய ஆண்டவர் தெளிவாகக் கற்பித்ததுபோல அது ஜெபத்துக்கு வலிவூட்டுகிறது.
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” (மத்தேயு 7:21-23)
தேவசித்தத்தைச் செய்கிற கிரியை இல்லையென்றால், எந்த நாமமும், எவ்வளவு விலைமதிப்புள்ளதாகவும், வல்லமையுள்ளதாகவும் இருந்தாலும் ஒருவரைப் பாதுகாக்க முடியாது. ஜெபத்துக்கு வலிவூட்ட முடியாது. ஜெபமில்லாத செய்கைகள் மாத்திரம் தெய்வீக அங்கீகாரமின்மையிலிருந்து பாதுகாக்க முடியாது. தேவசித்தம் வாழ்க்கையை ஆளுகை செய்ய வில்லையென்றால், ஜெபம் ஆரோக்கியமற்ற ஒரு உணர்வேயன்றி வேறொன்றுமாயிராது. ஜெபம் உள்ளாகத் தூண்டுதல் செய்து, பரிசுத்தம் பண்ணி நம்முடைய பணியை இயக்கவில்லையென்றால், பணியையும், பணியாளரையும் அழிக்கிற சுயசித்தம் அப்போது உள்ளே நுழைகிறது.
ஜெபத்தின் உண்மையான பகுதிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி எவ்வளவு தவறான கருத்துக்கள் இருக்கின்றன? தங்களுடைய ஜெபத்துக்கு பதிலைப் பெற உண்மையான ஆர்வமுள்ள அநேகர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பலன் பெறாமல் ஆசீர்வதிக்கப்படாமலிருக்கின்றனர். தேவனுடைய ஒரு வாக்குறுதியில் அவர்கள் தங்கள் மனதை வைத்து அதைப்பற்றிக்கொண்டு ஜெபிப்பதற்கு போதுமான நம்பிக்கைக்காக விடாப்பிடியாக முயற்சிக்கின்றனர். பெரிய வாக்குறுதிகளில் சிலவற்றின்மேல் இவ்வாறு மனதை வைப்பது விசுவாசத்தை உறுதிப்படுத்தலாம்; ஆனால் வாக்குறுதியை இப்படிப் பற்றிக்கொள்வதற்கு இடைவிடாமல் தொடர்ந்து செய்கிற ஜெபம்கூட இருக்கவேண்டும். விசுவாசம் அதிகமாகும் வரை ஜெபம் எதிர்பார்த்தலோடு காத்திருக்க வேண்டும். தேவனுக்கு உடனடியாகவும் மகிழ்ச்சியாகவும் தொடர்ந்து கீழ்ப்படிகிற மனிதனைத் தவிர அப்படி ஜெபிப்பதற்கு திறனும் தகுதியும் உள்ள வேறு யார் இருக்கிறார்கள்?
உயர்வான விசுவாசம் என்பது தேவனுடைய வார்த்தையும் ஆவியும் வாழ்க்கையும், தேவனிடம் சரண் செய்யப்பட்டதுமான ஆத்துமாவின் இயல்பும் செயலுமாகும். ஜெபம் பண்ணத் தூண்டுவதற்கு இந்த அல்லது இன்னொரு வடிவத்தில் விசுவாசம் இருக்க வேண்டும் என்பது மெய்தான்; ஆனால் விசுவாசம் தன்னுடைய உயர்வான நிலையிலும் பெரிதான விளைவுகளிலும் ஜெபத்தின் கனியாகும். விசுவாசம் ஜெபத்தின் திறனையும் பலனையும் அதிகப்படுத்துகிறது என்பது மெய்தான்; ஆனால் அதைப்போலவே ஜெபம் விசுவாசத்தின் திறனையும் அதிகரிக்கிறது என்பதும் மெய்தான். ஜெபமும் விசுவாசமும் ஒன்றின்மேல் ஒன்றாகக் கிரியை செய்து செயலாற்றுகின்றன, எதிர் செயலாற்றுகின்றன.
தேவனுக்கு கீழ்ப்படிவது விசுவாசத்துக்கு உதவி செய்வதுபோல வேறெந்த தனி இயல்பும் அப்படி உதவி செய்துவிட இயலாது. கீழ்ப்படிதல் இருக்கும் போது விசுவாசம் கடினமான மனித முயற்சிக்கு மேலாக இருப்பதில்லை. அதை அப்பியாசப்படுத்தவும் மிகவும் சிரமம் தேவையில்லை.
தேவனுக்குக் கீழ்ப்படிவது அவரை நம்புவதற்கும் அவர்மேல் முழு நம்பிக்கை வைப்பதற்கும் உதவுகிறது. கீழ்ப்படிதலுள்ள ஆவி முழுவதுமாக ஆத்துமாவை நிரப்பும் போது, சித்தம் முழுவதுமாக தேவனுக்கு அர்ப்பணிக்கப்படும்போது, விசுவாசம் அநேகமாகத் தன்னையே நம்புகிறது. பின்பு விசுவாசம் தானாக இயங்குகின்ற ஒன்றாகின்றது. கீழ்ப்படிதலுக்குப் பின்னர் இயற்கையாகவோ அது அடுத்த அடியாகும்; அது எளிதாகவும் உடனடியாகவும் எடுத்து வைக்கப்படுகிறது. ஜெபம் பண்ணுவதற்கு சிரமம் விசுவாசத்திலல்ல; விசுவாசத்துக்கு அடித்தளமான கீழ்ப்படிதலில் இருக்கிறது.
நாம் ஒன்றாக ஜெபித்து ஜெபத்தினால் அதிகமாகப் பெற்றுக்கொள்ள விரும்பினால் நம்முடைய கீழ்ப்படிதலையும், இரகசியமான நடத்தையையும். தேவனுக்கு முன்பாக வைத்து நம்முடைய இருதயத்தின் உத்தமத்தையும் நாம் நன்கு கவனித்து கொள்ள வேண்டும். கீழ்ப்படிவது பலனளிக்கின்ற ஜெபத்தின் ஆரம்ப கட்ட வேலை. தேவனுக்கு அருகில் நம்மைக் கொண்டு வருவது இதுதான்.
நம்முடைய வாழ்க்கையில் கீழ்ப்படிவதிலுள்ள குறைவு நம்முடைய ஜெபத்தை உடைக்கிறது. அநேக நேரங்களில் வாழ்க்கை கிளர்ச்சி செய்வதாக இருக்கிறது; அதனால் மன்னிக்கிற இரக்கத்துக்காக வேண்டுதல் செய்வதைத் தவிர மற்ற ஜெபம் செய்ய முடியாமல் போகிறது. கீழ்ப்படியாமல் வாழ்வது மகா பரிசுத்த இடத்திற்குச் செல்லும் வழியைத் தடை செய்கிறது. கீழ்ப்படியாத எந்த மனிதனும் ஜெபிக்க முடியாது உண்மையாகவே ஜெபிக்க முடியாது.
வெற்றியுள்ள ஜெபத்துக்கு நம்முடைய சித்தம் தேவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட வேண்டும் என்பது ஒரு அடிப்படை நிபந்தனையாகும். தேவனுக்குக் கீழ்ப்படிய நாடும் நமது சித்தம், குணத்தை உருவாக்குகிறது; நம்முடைய நடத்தையை கட்டுப்படுத்துகிறது. ஆகவே வெற்றிகரமான ஜெபம் அனைத்திலும் நம்முடைய சித்தம் முக்கியமான அங்கம் வகிக்கிறது. நம்முடைய சித்தம் முழுவதும் தேவனுக்கு சரண் செய்யப்படாதபோது, பயனளிக்கின்ற உண்மையான ஜெபம் அங்கே இருக்க முடியாது.
சிறப்பான, உண்மையான, மிகுந்த பலனளிக்கிற ஜெபத்துக்கு, தேவனுக்கு முன் இந்த நெறிவழுவாத விசுவாசம் தவிர்க்க முடியாத ஒரு நிபந்தனையாகும். நாம் “நம்பவும் கீழ்ப்படியவும் வேண்டும்; இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதற்கு வேறொரு வழியில்லை நம்பவும் கீழ்ப்படியவும் வேண்டும்!”
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]