[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
“மேடலியின் ஃப்ளட்செர் (Fletcher of Madeley) அவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்ட கீழ்ப்படிதலை நான் விவரிக்க வேண்டும் அல்லது அதை மாதிரியாகப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு சிலுவையையும் ஆர்வத்துடனும் மகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ளுவதற்கு கீழ்ப்படிதல் அவருக்குள் ஒரு ஆயத்தமான மனதை உருவாக்கியது. மந்தையின் ஆடுகளுக்காகத் தனிச்சிறப்பான அன்பைப் பெற்றிருந்தார். அவைகளுக்குக் கற்பிப்பதற்கு முழு முயற்சியுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதற்கு வேண்டிய தனித் திறனைப் பெற்றிருந்தார். என்னுடனான அவருடைய தொடர்பெல்லாம் ஜெபத்துடனும் துதியுடனும் இருந்தது. ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு தடவையும் அவரோடு சேர்ந்து உண்ட உணவும் நறுமணத்துடன் இருந்தது.”
மோசேயின் பிரமாணத்தின்படி கீழ்ப்படிதல் “….பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும்….” (1சாமுவேல் 15:22) மேன்மையாகக் கருதப்பட்டது. உபாகமம் 5:29-ல் இதை கடைப்பிடிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை மோசே உணர்ந்து கொண்டார். தம்முடைய ஜனங்கள் வழிதவறிச் செல்லுவதைக்குறித்து கர்த்தர் “அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்” என்றார்.
கேள்வியே கேட்காமல் கீழ்ப்படிவது மிக்க நல்ல பண்பாகும். ஒரு இராணுவ வீரனின் சிறப்புப் பண்பு, கீழ்ப்படிவதாகும். அது ஒரு இராணுவ வீரனுக்கு முக்கியமாக இருக்க வேண்டியது. அது அவனுடைய முதலும், முடிவுமான பாடமாகும். கேள்வி கேட்காமல் குறை கூறாமல் அதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை அவன் கற்றுக்கொள்ளவேண்டும். மேலும் கீழ்ப்படிதல் செயற்படுத்தும் விசுவாசமாகும். அது அன்பினால் சோதிக்கப்படுவதால் வழிந்தோடுகிறது.
“என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான்…” (யோவான் 14:21) மேலும் கீழ்ப்படிதல் அன்பைக் காக்கிறது. அன்பான வாழ்க்கையைக் கொடுக்கிறது.
“நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறது போல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10)
கீழ்ப்படிதலினால் நல்ல உறவு உருவாக்கப்பட்டு காப்பாற்றப்படுவது எவ்வளவு அருமையாகக் கூறப்பட்டிருக்கிறது! தேவனுடைய குமாரன் தம்முடைய கீழ்ப்படிதலினால் பிதாவினுடைய அன்பின் மார்பில் வைக்கப்பட்டிருக்கிறார்! தேவகுமாரன் எப்போதும் தம்முடைய பிதாவின் அன்பில் நிலைத்திருக்கச் செய்கிற காரணத்தை “….பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால்…” (யோவான் 8:29) என்று அவருடைய சொந்த வார்த்தையினால் வெளிப்படுத்துகிறார்.
ஒருவரோடு பரிசுத்த ஆவியானவர் பெரிய அளவில் இடைபடுவது அவர் அன்புடன் கீழ்ப்படிவதைச் சார்ந்திருக்கிறது.
“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்பது எஜமானுடைய வார்த்தை, “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.”(யோவான் 14:15-16)
ஆவிக்குரிய பயன்பாடு, உள்ளான திருப்தி, இருதயத்தின் உறுதி ஆகியவைகளெல்லாம் தேவனுக்குக் கீழ்ப்படிவதின் ஒரு நிபந்தனையாகும். “நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்” (ஏசாயா 1:19) கீழ்ப்படிதல் பரிசுத்த நகரத்தின் வாசல்களைத் திறக்கிறது. ஜீவவிருட்சத்துக்கு அணுகும் வழியைத் தருகிறது. “ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.”(வெளி 22:14)
கீழ்ப்படிதல் என்றால் என்ன? அது தேவனுடைய சித்தத்தைச் செய்வது, அது அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவது. கட்டளைகளில் எத்தனைக்குக் கீழ்ப்படிவது கீழ்ப்படிதலை உண்டாக்குகிறது? அவைகளில் ஒரு பாதியைக் கைக்கொண்டு இன்னொரு பாதியை உடைப்பது உண்மையான கீழ்ப்படிதலா? ஒன்றைத் தவிர மற்ற எல்லாக் கட்டளைகளையும் கைக்கொள்ளுவது கீழ்ப்படிதலா? இதைப்பற்றி யாக்கோபு அப்போஸ்தலர் மிகத்தெளிவாகக் கூறுகிறார். “…ஒருவர் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்” (யாக்கோபு 2:10)
ஒரு மனிதன் ஒரு கட்டளையை மீறும்படித் தூண்டுகிற ஆவி, அனைத்துக் கட்டளைகளையும் மீறும்படி அவனைத் தூண்டும். தேவனுடைய கட்டளைகள் பிரிக்கப்படாத மொத்தமான ஒன்றாகும். ஒன்றை உடைப்பது பின்னணியிலுள்ள கொள்கை முழுவதையும் உடைப்பதாகும். ஒரு கட்டளையை உடைக்கத்தயங்குகிறவன், அதே அழுத்தத்தில் அதே சூழ்நிலைகளால் சூழப்பட்டு அனைத்தையும் உடைப்பது நிகழக்கூடும்.
மனித இனம் முழுவதும் தேவனுக்குக் கீழ்ப்படியும்படி கட்டளையிடப்பட்டுள்ளார்கள். பூரணமாகக் கீழ்ப்படிவதைத் தவிர வேறொன்றும் தேவனைத் திருப்திப்படுத்தாது. அவருடைய அனைத்துக் கட்டளைகளையும் கைக்கொள்வது அவைகளை செயல்படுத்துவதாகும். அதையே தேவன் எதிர்பார்க்கிறார். ஆனால் தேவனுடைய கட்டளைகள் அனைத்தையும் நம்மால் கைக்கொள்ள முடியுமா? அவை ஒவ்வொன்றையும் கீழ்ப்படிவதற்குப் போதிய சக்தியை ஒரு மனிதன் பெறகூடுமா? நிச்சயமாக முடியும். ஜெபத்தின் மூலம் இதைச்செய்கிற திறமையை மனிதன் பெறக்கூடும்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]