CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

வாசலைத் திறவுங்கள்

வாசலைத் திறவுங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

“வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.” (சங்கீதம் 24:7)

நகர வாசலுக்குள்ளே பிரவேசிக்கின்ற ராஜா வெற்றியோடு வருகிறாரா அல்லது தோற்றப்போய் திரும்புகிறாரா என்பதை மக்கள் அவருக்குக் கொடுக்கும் வரவேற்பிலிருந்தே ஊகித்துக்கொள்ளலாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் எருசலேமின் நகர வாசலிலும் ஒரு ஆரவாரத்தொனி கேட்டது. அது “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்று ஒலித்தது. இந்த ராஜா யார்? இவர் வெற்றி சிறந்த யுத்தம் தான் எது?

இங்கே ஒரு வித்தியாசத்தை நாம் காணலாம். அன்று இந்த ராஜா எதிரியை வெற்றி கண்டவராக நகரத்துக்குள் பிரவேசிக்கவில்லை: மாறாக தான் தோற்கடிக்க வேண்டிய சத்துருவாகிய மரணத்தை எதிர்கொள்ளும்படி நகரத்துக்குள்ளே பிரவேசித்தார். ஜனங்கள் அதை உணராதிருந்தாலும் அவரை வெற்றி வேந்தனாகவே வாழ்த்தினார்கள். இது அவர்களால் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. தம்மை அறியாமலே அவர்கள் அவரை வாழ்த்தினாலும், இந்த ராஜா அநாதியாய் என்றென்றும் வெற்றி சிறந்த ராஜாவேதான். இல்லையானால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாகவே “வாசல்களே திறவுங்கள்! அநாதியாய் நிற்கும் கதவுகளே உயர்ந்து இடங்கொடுங்கள். மகிமையின் ராஜா வருகிறார்“ என்று தாவீது முழங்கியிருப்பாரா? தம்முடைய ஜனத்தை மீட்கவும், பாவத்தின் பலனாகிய மரணத்தின் அதிகாரியை முறியடிக்கவும், ஜீவய காலமெல்லாம் மரண பயத்திற்கு அடிமைகளாகி விட்ட தமது பிள்ளைகளை விடுவிக்கவும் இந்த ராஜா அன்று எருசலேமின் வாசலில் வந்து நின்றார். அவர் போருக்காக குதிரையிலும் இரதத்திலும் வரவில்லை. கழுதைக் குட்டியிலே ஏறி வந்தார். போர் வீரர்கள் அவர் பின்னால் செல்லவில்லை. சாதாரண பாமர மக்களே அவர் பின் சென்றார்கள். அந்த எருசலேமின் வாசல்கள் இப்பலத்தோடு வெற்றி கொள்ள முடியாது என்று அவருக்கு தம்மை திறந்து கொடுத்தன. ஆம் அது தோல்வியல்ல, ராஜாதி ராஜாவின் ஜெயமாக மாறியது.

பிரியமானவனே/ளே இன்று இந்த ராஜா ஜெயங்கொண்டவராக உன் இருதய வாசலண்டையில் வந்து நிற்கிறாரே! இனி மேல் வெற்றி கொள்பவராக அல்ல, வெற்றி கொண்டவராக வந்து நிற்பார். நீயோ நம்பிக்கையற்றவனாக இது முடியுமா என்ற சந்தேகத்தோடு உன் கதவை அடைத்துவிட்டிருப்பது ஏன்? அவரோ சாந்தரூபியாய் உன் வாசலில் நிற்கிறார். அன்று எருசலேம் தன் கதவுகளைத் திறந்து, அவரது மகிமையைக் காணும்படி உன் மனக் கதவுகளை இன்று திறந்து விடக்கூடாது?

இயேசுவே! வாரும் என் வாசல்கள் திறக்கின்றேன் நீர் வெற்றிவேந்தனாக வாரும். உமது மகிமையை நான் காணட்டும். ஆமென்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]