CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

விசுவாசப் பார்வை

விசுவாசப் பார்வை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். (எபிரெயர் 11:6)

வல்லமையான ஜெபத்திற்கு வேதம் அஸ்திபாரம் என்றும், துதி வாசல் என்றும் பார்த்தோம். அதே வரிசையில் விசுவாசத்தை ஒரு வீட்டின் ஜன்னலுக்கு ஒப்பிடலாம். இந்த ஜன்னல் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அவ்வளவு காற்றும், வெளிச்சமும் உள்ளே வரும். சிலர் இந்த ஜன்னலை சரியாகத் திறக்காததினாலே இருளில் தெளிவான பார்வையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். மூச்சுவிட சிரமப்படும் நோயாளியைப்போல கஷ்டப்பட்டு ஜெபிக்கிறார்கள். நாம் விசுவாச ஜன்னலை அகலமாக திறந்து வைப்போம். தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருப்போம். (மாற்கு 11:22)

எதை விசுவாசிக்க வேண்டும்?

ஜெபம் என்றாலே விசுவாசத்தோடு கேட்பதுதான். விசுவாசம் இல்லாத ஒருவர் எதையும் கேட்கமாட்டார். அநேகர் தேவன் உண்டு என்று விசுவாசிக்கிறார்கள். ஆனால் அது போதாது. ஏனென்றால் வேதம் சொல்லுகிறது தேவன் ஒருவர் உண்டென்று…. பிசாசுகளும் விசுவாசித்து நடுங்குகின்றன. (யாக் 2:19) அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்.

“தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபி 11:6) நம்முடைய தேவன் பலன் அளிக்கிறவரென்று விசுவாசிப்பதுதான் தேவனுக்குப் பிரியமான காரியம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். பலர் ஏதோ ஜெபிக்க வேண்டும் என்பதற்காக ஜெபிக்கின்றார்களே அல்லாமல் அதற்கான பதில் கிடைத்ததா இல்லையா என்பது அவர்களுக்குத் தெரிவதேயில்லை. வெளியே பார்வைக்கு விசுவாசத்தோடு கேட்பதுபோல் தோன்றினாலும் உள்ளே அவிசுவாசம் அண்டிக்கிடக்கிறது.

ஒரு தாயார் ஒரு மலையைப் பார்த்து மலையே இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று கண்களை மூடிக்கொண்டு கட்டளையிட்டார்களாம். ஆனால் கண்களை திறந்து பார்த்தபொழுது மலை அங்கேயே தான் இருந்தது. உடனே அந்தத் தாயார் எனக்குத்தான் அது போகாது என்று முதலிலேயே தெரியுமே என்று சொன்னார்களாம். இந்தக் கதையைப் போலத் தான் அநேகருடைய ஜெபத்தில் விசுவாசம் இல்லாததினாலேயே அது வெறும் வார்த்தைகளாக இருக்கிறதே தவிர அதில் வல்லமை வெளிப்படுகிறதில்லை.

உன் விசுவாசத்தின் படியே:

உங்களுடைய ஜெபத்திற்கு பதில் எதின் அடிப்படையில் கிடைக்கிறது? தேவனுடைய வல்லமையின் படியா? நம்முடைய விசுவாசத்தின் படியா? தேவனுடைய வல்லமை அளவிட முடியாதது. அவரால் நமக்கு எதையும் தர முடியும். எந்த அற்புதத்தையும் செய்ய முடியும். ஆனால் நம்முடைய விசுவாசத்தின் அளவின்படியேதான் நம்மால் பெற்றுக்கொள்ள இயலும். இயேசு அவர் செய்த எல்லா அற்புதங்களிலும் அற்புதங்களை பெற்றுக்கொண்டவர்களின் விசுவாசத்தை பாராட்டுவதை நாம் பார்க்கலாம்.

  1. நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். (மத் 8:13)
  2. மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். (மத் 9:22)
  3. உங்கள் விசுவாசத்தின் படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். (மத் 9:29)
  4. ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது (மத் 15:28)
  5. நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். (மாற் 10:52)
  6. நீ எழுந்து போ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். (லூக் 17:19)
  7. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். (லூக் 17:19)

நம்முடைய விசுவாசத்தின் படியேதான் ஆண்டவர் செயல்படுகிறார். என்பது ஏற்றுக்கொள்ளக் கடினமாயிருந்தாலும், அதுதான் உண்மை நூற்றுக்கு அதிபதி ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் என்றான். இயேசு அவன் விசுவாசித்தபடி ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லி அனுப்பினார். வேலைக்காரன் சொஸ்தமானான். ஆனால் ஜெப ஆலயத்தலைவன் நீர் வந்து அவன்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பான் என்றான். இயேசு எழுந்து தம்முடைய சீஷரோடுகூட அவன் பின்னே போனான்.(மத் 9:18-19) யார் எப்படி விசுவாசித்தார்களோ அப்படி அவரும் செயல்பட்டார். ஆனால் நாம் இருமனம் இல்லாமல், சந்தேகப்படாமல் கேட்கவேண்டும். ஆனால் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கக்கடவன், சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்திலும் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. (யாக் 1:7-8)

நம்முடைய விசுவாசத்தின்படியேதான் ஆண்டவர் செயல்படுகிறார் என்பது ஏற்றுக்கொள் கடினமாயிருந்தாலும், அதுதான் உண்மை.

 

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]