[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
லூயிஸ் கரோல்ஸ் பிரேசில் நாட்டிலுள்ள சாபௌலோ என்ற பெருநகரத்தில் வாழ்ந்து வந்தார். இயேசுகிறிஸ்துவுக்காக தன்னை ஒப்புவித்து ஊழியம் செய்த ஒரு வல்லமையான தேவ ஊழியக்காரன். அவர் தான் வாழ்ந்த நகரத்தை விட்டு வெளியேறி இயேசுகிறிஸ்துவைக் குறித்து அறியப்படாத மக்கள் மத்தியில் சென்று நற்செய்தி ஊழியத்தைச் செய்யவேண்டுமென தீர்மானித்தார். அதன் காரணமாக வெகு தூரத்திலுள்ள காட்டுப் பிரதேசத்திற்கு தனது குடும்பத்தோடு சென்றார். அடர்ந்த காடுகளின் மத்தியில் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்தில் குடியேறினார். அந்த கிராமத்திலிருந்து மற்ற கிராமங்களை சந்திக்க எளிதாயிருக்குமெனக் கருதி அந்த கிராமத்தை தெரிந்து கொண்டார்.
அவருடைய வார்த்தையினாலும் செயல்களினாலும் பெரும்பான்மையான அந்த கிராம மக்கள் இயேசு கிறிஸ்து எனும் தெய்வத்தை அவரே இரட்சகர் என்பதை விளங்கிக்கொண்டனர், ஏற்றுக்கொண்டனர். “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12) என்ற வசனத்திற்கு ஒப்ப அவர்கள் தேவனுடைய பிள்ளைகளானார்கள். அவர்கள் இயேசுவை ஆராதிக்கத் துவங்கினார்கள்.
அண்டை கிராமத்தார் அந்தக் காட்டுப்பகுதியில் வழிபடும் ஒரு தேவதையை சிலையாகச் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து ஜீவனம் செய்து வந்தனர். லூயிஸ் கரோல்ஸின் ஊழியத்தின் காரணமாக அவர் குடியிருந்த கிராமத்தார் மட்டுமல்லாமல் அண்டை கிராமத்திலும் தேவதையின் சிலையை வாங்குவார்வெகுவாய் குறைந்து விட்டனர். ஆகவே அவர்களின் தொழில் பாதித்ததினிமித்தமாக லூயிஸ் கரோல்ஸை குடும்பத்தோடு அழிக்கவும் அந்த கிராமத்தின் மீது படையெடுத்து அவர்களை கொடுமைப்படுத்தவும் திட்டமிட்டு ஒரு நாளை குறிப்பிட்டு அதை அந்த கிராமத்திற்கும் சாவல்போல சொல்லியனுப்பினார்.
லூயிஸ் கரோல்ஸும் மற்றும் முழு கிராமத்தினரும் இச்செய்தியைக் கேட்டு கூடிவந்து தெய்வத்தை நோக்கி முறையிட்டு விண்ணப்பிக்கத் துவங்கினார்கள். ஆச்சரியம் என்னவென்றால் அந்த குறிப்பிட்ட நாளில் அந்த கிராமத்தார் படையெடுத்து வரவில்லை. நாட்கள் கடந்தோடின, வாரங்கள் கடந்தோடின. ஒன்றும் நடக்கவில்லை. சில மாதங்கள் கழித்து படையெடுக்கப்போவதாக அறிவித்த கிராமத்தின் தலைவன் லூயிஸ் கரோல்ஸ் வாழ்ந்த கிராமத்திற்கு சமாதான பேச்சு வார்த்தைக்கு வந்தான். கிராமத்தார் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால் அவனுடைய சத்துருக்களும் அவனோடு சமாதானமாகும்படி செய்வார்.” (நீதி 16:7) என்பது அங்கு நிறைவேறியதைக் கண்டனர்.
கிராமத்தார் அந்த தலைவனிடம் “ஏன் நீங்கள் படையெடுத்து வரவில்லை?” என்பதை ஆர்வத்தோடு கேட்டனர். “நாங்கள் படையெடுத்து வந்தோம். ஆனால் உங்கள் கிராமத்திற்கு திரும்பும் பாதையில் வழியை மறித்து வெள்ளைக் குதிரையில் உருவிய வாட்களுடன் ஒரு பெரும் சேனை நின்று கொண்டிருந்ததைக் கண்டு அஞ்சி நடுங்கி திரும்பிவிட்டோம். இன்னும் நாங்கள் பயந்து பீதியிலே இருப்பதால் நாங்கள் சமாதான உடன்படிக்கைக்கு வந்தோம் என்றான்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]