CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

விடாப்பிடியான ஜெபம்

விடாப்பிடியான ஜெபம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

“நாம் செய்கிற ஜெபங்களில் மூன்றில் இரண்டு பகுதி நமக்கு வேண்டிய சந்தோஷத்திற்காகவே ஏறெடுக்கப்படுகின்றன. அது ஒரு வகையான ஆவிக்குரிய சுய ஈடுபாடு போலுள்ளது. இது சுயக்கட்டுப்பாட்டுக்கு எதிர்மறையானது. தேவனுக்கு இவை எல்லாம் தெரியும். மேலும் தமது பிள்ளைகளை ஜெபிக்க செய்கிறார். காலங்கள் கடந்து செல்லும் போது அவருடைய நேரத்தில் நம்முடைய வேண்டுதல்கள் வேறொரு காரியத்தில் ஈடுபடுகிறது. மேலும் நாம் வேறொரு ஆவிக்குரிய அணுகுமுறையை நாடுகிறோம். அவருடைய ஞானத்தினால் பதிலை வடிவமைக்கும் வரை தேவன் நம்மை ஜெபித்துக்கொண்டேயிருக்கும் படியாக வைக்கிறார். அவர் பதிலளிப்பதற்கு முன்னால் எவ்வளவு காலம் எடுத்தாலும் பரவாயில்லை, நாம் எதிர்பார்ப்பதற்கும், உரிமை கொண்டாடுவதற்கும், நம்புவதற்கும் அதிக முன்பாகவே அது நடைபெறுகிறது”

ஓங்கி ஒலிக்கும் கிறிஸ்துவின் போதனைகள் மனிதர்கள் ஊக்கத்துடன் ஜெபிக்க வேண்டுமென உறுதிபட அறிவிக்கிறது. உள்ளார்ந்த ஊக்கத்துடன் ஜெபிக்க வேண்டும். முழு இருதயத்தோடு, ஆழ்ந்த ஊக்கத்தோடும் செய்யும் ஜெபத்துக்குதான் பரலோகத்தின் காதுகள் திறக்கப்பட்டிருக்கும். பரலோகம் மதிக்கும், தேவன் கேட்கும் ஜெபங்கள், ஆற்றல், தைரியம் மற்றும் விடாப்பிடியான உறுதியுள்ளவைகளாக இருக்கவேண்டும். ஆத்துமாவின் இந்த எல்லாக் குணங்களும் பலனளிக்கும் ஜெபத்திற்கு மிகவும் தேவை. இது ஒரு மனிதன் உணவுக்காக நடு இரவிலே தன் நண்பனின் வீட்டிற்குச் சென்ற உவமையில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மனிதன் நம்பிக்கையுடன் உணவு வாங்கி வர கடந்து செல்லுகிறார். தோழமை அவருக்கு வெற்றி பெறும் வாக்குக் கொடுத்தது. அவருடைய வேண்டுதல் ஒரு உண்மையான அவசரமான தேவையாயிருந்தது. அவர் வெறும் கையோடு திரும்ப முடியாது. நிச்சயமாக மறுப்பு அவரை ஏமாற்றமடையவும், ஆச்சரியப்படவும் வைத்தது. இங்கே தோழமைகூட தோற்றுப்போனது! ஆனால் இன்னும் முயற்சி செய்ய வேண்டிய ஒரு காரியம் உண்டு. அவை கடுமையான தீர்மானமும், நிலையான மன உறுதியும் அப்படிப்பட்டவர் நிலை நின்று, கதவு திறக்கப்படும் வரை தன்னுடைய கோரிக்கையை வற்புறுத்தி, தன் வேண்டுதலை கிடைக்கப் பெறுவார். சாதாரண வேண்டுகோளால் அடைய முடியாததை, அவர் விடாப்பிடியான, ஓயாத வற்புறுத்தலால் கெஞ்சி பெற்றுக் கொள்ள முயற்சி செய்தார்.

ஒரேயடியாக மறுக்கப்பட்ட நிலையிலும் அந்த மனிதன் அடைந்த வெற்றியை, பரலோகக் கிருபையின் சிங்காசனத்தை வேண்டுவதற்கு வலியுறுத்துவதற்காக இரட்சகர் உபயோகப்படுத்துகிறார். பதில் உடனே கிடைக்காவிடில், ஜெபிக்கும் கிறிஸ்தவன் ஒவ்வொரு தாமதத்திலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பதில் கிடைக்கும் வரை அழுத்தமான விசுவாசத்துடன் தன்னுடைய வேண்டுகோளுடன் முன்னேற வேண்டும். நம் ஜெபத்திற்கு மெத்தனம், தளர்ந்த இருதயம், பொறுமையற்ற தன்மை ஆகியவை தீய விளைவுகளை உண்டாக்கும். நம்முடைய விடாப்பிடித் தன்மையும், வற்புறுத்தலும் அமையும் பொருட்டு, பிதாவின் இருதயம், பிதாவின் கை, பிதாவின் அளவில்லா வல்லமை, பிதாவின் அளவில்லா ஆயத்தம் தமது பிள்ளைகளுக்கு செவிமடுக்கவும், கொடுக்கவும் காத்துக்கொண்டிருக்கிறது.

விடாப்பிடியான ஜெபம் தேவனை நோக்கி செய்யப்படும் இருதயத்தின் ஊக்கம் மிகுந்த உள்ளான இயக்கமாகும். அது ஆவிக்குரிய மனிதனின் முழு பலத்தையும் ஜெபத்தில் ஈடுபடுத்துகிறது. ஏசாயா தேவனைப் பிடித்துக் கொள்ளும்படியாக மக்கள் தங்களை ஊக்குவித்துக் கொள்ளவில்லை எனப் புலம்பினார். ஏசாயாவின் நாட்களில் அதிகமான ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டாலும், அவை எளிதானதாகவும், கவலையற்றதாகவும், மெத்தனமாகவும் இருந்தன. தேவனை நோக்கி ஆத்துமாக்களின் வல்லமையான தேடுதல் இல்லை. அவரிடத்திலிருந்து அவர் கிருபையின் பொக்கிஷங்களை  எடுத்துக்கொள்ள, அவரைப் பற்றிக் கொள்ளும்படியான தூய்மையான ஆற்றல்கள் இல்லை. வல்லமையற்ற ஜெபங்களுக்கு பிரச்சனைகளை மேற்கொள்ள ஆற்றல் இருப்பதில்லை. முழுமையான வெற்றியைப் பெற்றுக்கொள்ள வல்லமை இல்லை. நாம் வேண்டிக்கொள்பவை வெற்றி பெறுமுன் ஆண்டவரை வெற்றி கொள்ளவேண்டும்.

உண்மையான ஜெபம் செய்யும் காலம் வருமென்று, நம்பிக்கையோடு ஏசாயா இருந்தார். அந்த நாட்கள் வந்தபோது காவல்காரர் தாங்கள் எச்சரிக்கை கொடுப்பதிலிருந்து உறுதி குறையாமல் இரவும், பகலும் கதறிக் கொண்டிருந்தனர். மேலும் ஆண்டவரை  நினைப்பவர்கள் அவருக்கு இளைப்பாறுதல் கொடுக்கவில்லை. அவர்களுடைய அவசரமான, தொடர்ந்து செய்யப்பட்ட முயற்சிகள் ஆவிக்குரிய ஆர்வத்தினால் தேவனுடைய வற்றாத பொக்கிஷங்களினின்றும் இன்னும் அதிகமாக பெற்றுக்கொள்ள விழைந்தன.

விடாப்பிடியாக செய்யப்படும் ஜெபம் சோர்ந்துபோவதோ அல்லது களைப்படைவதோ இல்லை அதற்கு ஒருபோதும் ஊக்கம் குறைவதில்லை. அது கோழைத்தனத்திற்கு வளைந்து கொடுக்காது. ஆனால் மனத்தளர்ச்சியடையாத நம்பிக்கையினாலும், விட்டுவிடமுடியாத விசுவாசத்தாலும் மனஎழுச்சியும், ஊக்கமும் கொண்டு நிலைநிற்கும். விடாப்பிடியான ஜெபத்திற்கு காத்திருக்கப் பொறுமையுண்டு, தொடர்வதற்குப் பெலனுண்டு. மேலும் பதில் கிடைக்கும் வரை தன் முழங்கால் ஊன்றிய நிலையிலிருந்து எழுந்திருக்காது.

மதிப்புமிக்க மிஷனெரியான அதோனிராம் ஜட்சனின், நன்கு தெரிந்த ஆனால் இதயப்பூர்வமான வார்த்தைகள் விடாப்பிடியான ஜெபம் செய்யும் மனிதனின் சாட்சியாகும். அவர் கூறுகிறார்:

“எனக்கு எந்த பொருளின் மேலும் ஆழமான ஆர்வம் இருந்ததில்லை, ஒரு நாளும் எதற்காகவும் உண்மையாகவும், ஊக்கத்துடனும் ஜெபித்ததில்லை. ஆனால் எவ்வளவு நாட்கள் கழித்து வந்தது என்பதைவிட எப்போதோ எனக்கு அது வந்தது. எப்படியோ ஏதோ ஒரு வடிவில், அது வந்தது, ஒருவேளை அதுதான் நான் கடைசியாகக் கேட்டதாகும்.”

“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.”(மத்தேயு 7:7) உண்மையான ஜெபம் நிலைநிற்க வேண்டும், ஜெபத்திற்குப் பதில் அளிக்கப்படும் வரை, தேடிய ஆசீர்வாதம் கிடைக்கும் வரை, அதன் முயற்சியிலும், அவசரத்திலும் முன்னேற வேண்டும் என்பதுதான் ஜெபத்தைப் பற்றிய நமது ஆண்டவரின் சவாலும் அறிவிப்புமாகும்.

கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என்ற மூன்று வார்த்தைகளாலும், அவற்றை அவர் ஒழுங்குபடுத்தி அமைத்துள்ள விதத்தின் மூலமும், விடாப்பிடியான ஜெபத்தின் தேவையை இயேசு வற்புறுத்துகிறார். வெற்றியுள்ள ஜெபத்தின் ஏணியில், கேட்பதும், தேடுவதும், தட்டுவதும் மேல் நோக்கிச் செல்லும் படிகளாகும். காத்திருந்து, விடாமுயற்சியுடன் ஒருபோதும் சரணடையாத தைரியத்துடனும், ஒருபோதும் சோர்ந்து போகாத பொறுமையுடனும், ஒருபோதும் தடுமாறாத தீர்மானத்துடனும் செய்யப்படும் ஜெபத்தைப் போல், வேறெந்த கோட்பாடும் கிறிஸ்துவினால் இவ்வளவு அதிகமாக வலியுறுத்தப்படவில்லை.

நடு இரவில் சந்திக்கும் நண்பன் உவமைக்கு முன்னைய உவமையில் இதைச் சார்ந்ததான தனிச் சிறப்பான, போதனைக்குரிய பாடம் விவரிக்கப்பட்டுள்ளது. மேன்மையான, வெற்றி தரும் ஜெபத்திற்கு வேண்டியது, மிகத்துணிவான தைரியமும், தொடர்ச்சியான செயல்பாடும், நிலையான நோக்கமும் தான் அடையாளமாகும்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]