CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

உன்னைத் தாங்குவேன்

உன்னைத் தாங்குவேன்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

சுவிசேஷகர் லார்டு ராட்ஸ்ராக் நற்செய்தி கூட்டம் ஒன்றில் தேவ செய்தியளித்தார். கூட்டத்தை முடித்துவிட்டு தன்னுடைய ஊருக்குத் திரும்ப அவசர அவசரமாக ரயில் நிலையத்தில் விரைந்தார். அவர் போய்ச் சேரவும் ரயில் வரவும் நேரம் சரியாயிருந்தது. அவரது இருக்கையைக் கண்டுபிடித்து ஏறி உட்கார்ந்தவுடன் ரயில் நகர ஆரம்பித்தது.

ஒரு இளம் இராணுவ அதிகாரி ஓடோடி வந்து அவர் உட்கார்ந்திருந்த இடத்தையொட்டிருந்த ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் ஓடியவாரே “உங்கள் செய்தியை இன்று கேட்டேன். எப்படி ஒரு மனிதன், நீங்கள் சொன்னமாதிரி இவ்வுலகில் நேர்மையாக நடக்க முடியும்? அது எப்படி சாத்தியமாகும்? என்று கேட்டார்.”

ராட்ஸ்ராக்கிற்கு விளக்கிச் சொல்ல அவகாசமில்லாத காரணத்தால் சிறிது திகைத்தார். திடீரென்று யோசனை வந்தவராக தனது பேனாவைக் கையில் எடுத்து தன் உள்ளங்கையில் வைத்து கொண்டு “இந்தப் பேனாவால் எந்தவித உதவியுமின்றி நேரே நிற்க முடியுமா? என்று கேட்டார். “அது எப்படி முடியும் முடியாது” என்று இளம் அதிகாரி பதில் கூறினார்.

ராட்ஸ்ராக் பேனாவின் ஒரு நுனியை தன் கையினால் பிடித்துக் கொண்டு நேராக நிற்கச்செய்தார். இப்பொழுது பேனா நேராக நிற்கிறதல்லவா? என்று கேட்டார். “நீங்கள் அதைப் பிடித்திருக்கிறீர்கள் அல்லவா? அதனால்தான் பேனா நிற்கிறது” என்றார் இளம் அதிகாரி.

“உன்னுடைய வாழ்க்கையிலும் இயேசுக்கிறிஸ்துவின் கரம் உன்னைப் பிடித்துக் கொள்ள நீ ஒப்புவிப்பாயென்றால் நீயும் நேர்மையாக நேராக வாழ முடியும்” என்றார் ராட்ஸ்ராக்.

ரயில் வேகம் கூடியதால் அதற்கு மேல் தொடரமுடியாமல் இளம் அதிகாரி நின்று விட்டார். ரயிலும் ஓடி மறைந்தது.

25 ஆண்டு கழித்து அதே இராணுவ அதிகாரி ராட்ஸ்ராக்கை ஒரு நற்செய்திக் கூட்டத்தில் சந்தித்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் ஓடிக்கொண்டே கண்டறிந்த பேனா சம்பவத்தை நினைவுப்படுத்தினார். “அன்றே என்னை அவர் கரத்தில் ஒப்புவித்தேன். அவர் என் கரத்தை அவரது கரத்தால் பற்றிக் கொண்டார். இன்னும் அவருடைய பிடி தளரவேயில்லை. நான் அவரது கரத்திலே இருக்கிறேன்.” என்று அவரது சாட்சியைப் பகிர்ந்து கொண்டார்.

“நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன். என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]


Warning: Array to string conversion in /home/u579205003/domains/zionchurch.lk/public_html/wp-content/plugins/fixed-bottom-menu/lib/class-fixedbottommenu.php on line 192