CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

நமது சந்தோஷம் கர்த்தருக்குள்

நமது சந்தோஷம் கர்த்தருக்குள்

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவா்களே,

சமாதானத்தால் ஆசீா்வதித்து தமது ஜனத்தின் மேல் பிரியம் வைக்கும் (சங்.29.11,149.4) மகிமையின் கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள். எத்தனை பாடுகள், இடறல்கள், இன்னல்கள் வந்தாலும் சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்த சந்தோஷத்தை தேவன் தமது பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறார் அல்லேலூயா (1பேதுரு 1.8). விசுவாசத்திலே நிலைத்திருங்கள், நீடித்திருங்கள், நிரம்பியிருங்கள் (1கொரி 16.13).

நமது சந்தோஷம் கர்த்தருக்குள் (பிலி 4.4) நமது சிந்தையை, யோசனையை, நினைவை, கற்பனையை (imagination), மனப்பான்மையை கவனமாக வைத்துக் கொள்வோம். நமது நினைவு மண்டலத்தில் நன்மையை யோசிக்க யோசிக்க கிருபையும் சத்தியமும் கடந்து வரும் (நீதி 14.22)

நமது நினைவின் படி தான் நாம் வாழ முடியம் (நீதி 23.6). பிலிப்பியர் நிரூபத்தில் பவுல் எழுதியது போல ஒரே மனதாய், கிறிஸ்துவின் சிந்தையில் ஆவிக்குரிய சிந்தையுள்ளவர்களாய் வாழ தேவன் கிருபை தருவாராக (பிலி 1.27, 2.2-4, பிலி 3.13-16, பிலி 4.6).

நமது பிள்ளைகளை எதிலும் மனரம்மியமாய் இருக்க, மன உறுதியாய் ஜெபிக்க பயிற்றுவியுங்கள், பழக்கங்கள், பயிற்சி கொடுங்கள் ( பிலி 4.11, எபே 6.18, பிலி 6.8, 4.10). மிகுந்த மன உறுதியான (எபே 6.18) பிலிப்பு, மிகுந்த துன்பம், மிகுந்த துக்கம் நடுவே சுவிசேஷ ஊழியத்தை செய்தார் (அப் 8.1-8). சாமாரியாவிலுள்ள பட்டணத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. மிகுந்த சத்தமாய் அசுத்த ஆவிகள் ஓடியது. (பிலி 8.8). சத்துருவின் தந்திரங்கள், தாணையங்கள், திட்டங்கள் அழியும் மாதம் இது. எத்தனை எதிர்ப்பு, இடறல், இன்னல்கள் வந்தாலும் எரிகோக்கள் தகரும். எதிராய் வந்தவர்கள் புதிதாய் உங்கள் பக்கம் வருவார்கள் (ஏசாயா 54.15)

பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தரும் தேவன் பாழான தேசப்பகுதிகளில் அன்பு, ஆறுதல், இன்பம், உற்சாகம் தந்து தமது மகிமையை வெளிப்படுத்தப் போகிறார்.

இம்மாதத்தில் கர்த்தருடைய மகிமை விளங்கும் இரகசியச் செயல் விளங்கும். ஞானிகளை தேவன் அவா்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார் என்பது விளங்கும் (1கொரி 3.19). சுய ஞானத்தால், உலக ஞானத்தால் நிறைந்தோர் வெட்கப்படுவார்கள். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டோர் பிறரை வெட்கப்படுத்தும் மாதம் இது (1கொரி1.28)

இரதங்களும், குதிரைகளும் முறியும் மாதம் இது (சங் 20.78). வில்லும், ஈட்டியும் முறியும் மாதம் இது. கர்த்தர் நம் நடுவில் இருக்கிறார். நாம் பயப்படோம். நாம் அசைவதில்லை, அசைக்கப்படுவதில்லை (சங்46.4,125.1) ஆமென், அல்லேலூயா. யுத்தங்கள் ஓயும். புத்தம் புது ஆசீர்வாதம் வரும்.

அல்லேலூயா ! அல்லேலூயா !! அல்லேலூயா !!