[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
“அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால், உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே. இணங்குதல், பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.”(பிர 10:4)
எனக்கு ஒரு சகோதரனைத் தெரியும். அவருடைய குடும்பம் மகா வறுமையிலும், கஷ்டத்திலும் இருந்தது. அவருக்கு நல்ல நல்ல வேலைகள் கிடைத்தபோதிலும், அவருடைய கட்டுக்கடங்காத கோபத்தினிமித்தமும், அதிகாரிகளை தூக்கியெறிந்து பேசுவதாலும், எந்த ஒரு வேலையிலுமே நிலைத்திருக்கமாட்டார். இணங்கிப் போகமாட்டார். தன்னைத் தாழ்த்தவுமாட்டார். எதற்கெடுத்தாலும் நியாயம் பேசுவார்.
இப்படிப்பட்ட முரட்டு சுபாவம் இருந்ததினாலே, அவர் தனக்குத் தானே வறுமையைத் தேடிக் கொண்டார். இதனால் பிள்ளைகளை படிக்க வைக்க, பணமில்லாமல் தவித்தார். மேலதிகாரியிடம் இணங்கிப் போய், “ஐயா, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இனி உங்களுக்குப் பிரியமானபடி, கடுமையாய் உழைக்கிறேன். ஒருமுறை எனக்கு இரக்கம் செய்யுங்கள்” என்று கேட்டால், முதலாளி மன்னித்து, ஏற்றுக்கொள்ளக்கூடும். ஸ்தானத்தைவிட்டு விலகுவது எளிது. ஆனால் அந்த ஸ்தானத்தை, மீண்டும் பெறுவது மகா கடினம். முதலாளி, முதலாளிதான். அவர் இறங்கி வரவேண்டிய அவசியமில்லை. ஆனால், தொழிலாளியாயிருக்கிறவன் உண்மையோடும், உத்தமத்தோடும் உழைக்க வேண்டியது அவனது கடமை. அப்போது கர்த்தரும் அவனை மென்மேலும் உயர்த்துவார்.
புதிதாய் திருமணமான தம்பதியரைப் பார்க்க, ஒரு போதகர், வந்தார். மனைவி கணவனிடம், பால் இல்லை. கடையில் போய், பால் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்றாள். “கணவன் சொன்னான், “கொஞ்ச நேரத்திற்கு முன்னால்தான் பால் வாங்கி வந்தேன். அதற்குள் தீர்ந்துவிட்டதா?” மனைவி சொன்னாள், ”வாங்கி வந்த பாலை பூனை குடித்து விட்டது.” கணவன் கேட்டான், ”ஏன் பாலை பாத்திரத்தை மூடி வைக்கவில்லை? ஏன் ஜன்னலை சாத்தவில்லை? பூனையை உள்ளே ஏன் அனுமதித்தாய்?” என்று கேட்டான். மனைவி மீண்டும் மீண்டும், “ஜன்னலை சாத்தவில்லை” என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். கணவனுக்கு திடீரென்று கோபம் வந்தது. “ஏன் சாத்தவில்லை?” என்று, கேட்டு அவளை இரண்டு சாத்து, சாத்தி விட்டான். ஓவென்று அழுத அவள், “நான் என் தாய் வீட்டுக்குப் போகிறேன்” என்றாள்.
போதகர் அன்போடு, அவளை அமைதிப்படுத்தி, “இணங்குதல் பெரிய குற்றத்தையும் அமர்த்திப்போடும்” (பிர 10:4) நீ முதலிலேயே, “நான் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்றால், குறைந்தா போய்விடும்? “நீ ஜன்னலை சாத்தவில்லை சாத்தவில்லை” என்றதும், அந்த வார்த்தை, உன்னை சாத்தும்படி செய்து விட்டது. மன்னித்தும், மன்னிப்புக் கேட்டும், சாந்தமாயிருங்கள். உங்களுடைய குடும்பம் ஆசீர்வாதமாயிருக்க, இது நல்ல வழி என்றார்.
தேவ பிள்ளைகளே, குடும்ப ஐக்கியத்துக்காக முயற்சி செய்யுங்கள். Never give up. இன்றைக்கு கடினமான இருதயம் உள்ளவர்களையும், உங்கள் சாந்தகுணத்தினாலே, ஜெயம்கொள்ள முடியும். உங்கள் பிள்ளைகளை சோர்ந்து போக செய்யாதிருங்கள். அப். பவுல், “பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாமல், நீதிக்கேற்க விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருங்கள்.” (1கொரி 15:34) நீங்கள், ஏதாவது ஒன்றை தவறாக செய்தால், அல்லது மற்றவர்களைக் காயப்படுத்துவதாக தோன்றினால், மன்னிப்புக்கேட்டு, அதை செய்யாமல் விட்டு விலகுங்கள்.
நினைவிற்கு :- “யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்” (சங் 146:5)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]