CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

பன்னிரண்டு

பன்னிரண்டு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அநேக வைத்தியர்களால், மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் இருந்தாள்.(மாற் 5:25,26)

நம்முடைய தியானத்திலே, முப்பத்தெட்டு வருடமாய் வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷனைப் பார்த்தோம். திமிர்வாதத்தினால், முன்னேற முடியாமல், இருக்கிற இடத்திலே இருக்க வேண்டிய ஒரு பரிதாபமான சூழ்நிலை. இஸ்ரவேலர், எகிப்திலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து, கானான் வரை சென்று சேருவதற்கு ஆன மொத்தமான வருடங்கள் நாற்பது. ஆனால் சீனாய் மலையை சுற்றி சுற்றி வந்த வருஷங்கள் முப்பத்தெட்டு ஆகும். முன்னேற முடியாமலிருந்த அவர்கள், எல்லோரும், ஒருவிதத்தில் ஆவிக்குரிய திமிர்வாதமுள்ளவர்களே.

அடுத்ததாக, பதினெட்டு வருடம் கூனியாயிருந்த ஒரு பெண்ணைக் குறித்து வாசிக்கிறோம். 18 என்பது 666 இங்கே 666என்கிற சாத்தானுடைய எண்ணைப் பார்க்கலாம். சாத்தான் மூன்று விதங்களில் அழைக்கப்படுகிறான். ஒரு 6 என்பது, அவன் “வலுசர்ப்பம்” என்பதையும், அடுத்த 6 அவன் மிருகமாகிய “அந்திக்கிறிஸ்து” என்பதையும். அடுத்த 6 “கள்ளத்தீர்க்கதரிசியையும்” வெளிப்படுத்துகிறது. அந்தப் பெண், சாத்தானால் பூரணமாய் கட்டப்பட்டவளாயிருந்தாள்.

இங்கே பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஸ்திரீயைப் பார்க்கிறோம். பன்னிரண்டு என்பது, பூமிக்குரிய அரசாங்க எண். யாக்கோபுக்கு மொத்தம் பன்னிரண்டு பிள்ளைகள். பின்பு அவர்கள் கோத்திரப் பிதாக்களாகி, இஸ்ரவேல் தேசத்தை அரசாண்டார்கள். இயேசு கிறிஸ்துவுக்கு பன்னிரண்டு சீஷர்கள் இருந்தார்கள். பரலோகத்துக்கு நேராய், ஜனங்களை வழிநடத்தும் பொறுப்பை, கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்தார். ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்கு பங்கிட்டு, மீதியான துணிகைகளை பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.(மத் 14:20)

கெத்செமனே தோட்டத்திலே, இயேசு பேதுருவிடம் , “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.(மத் 26:53) யவீருவின் மகளை இயேசு உயிரோடு எழுப்பும்போது, அவளுக்கு பன்னிரண்டு வயதாயிருந்தது. (மாற் 5:42) பகலுக்கு பன்னிரண்டு மணி நேரமுண்டு (யோவா 11.9) புதிய எருசலேமின் பன்னிரண்டு வாசஸ்தலங்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தது.(வெளி 21:21) புதிய எருசலேமின் மத்தியிலுள்ள நதியின் இருக்கரைகளிலும், பன்னிரண்டு விதமான ஜீவ கனிகளை தரும் விருட்சம் இருந்தது. (வெளி 22:2)

ஆனாலும், பன்னிரண்டு வருஷமாய்  பெரும்பாடுள்ள ஸ்திரீக்கு இருந்த பொறுமையும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் நம் உள்ளத்தைத் தொடுகிறது. அந்த உதிரப் போக்கினால், கணவன் அவளை வெறுத்திருக்கக்கூடும். பிள்ளைகளும், சலிப்படைந்து போயிருக்கக் கூடும். இதனால் அவளுடைய சொத்துக்கள், செல்வங்கள் கரைந்தது. விதவிதமான வைத்தியங்களைப் பார்த்து, மிகவும் வேதனையடைந்தாள். ஆனால் இயேசுவண்டை வந்து, அவருடைய வஸ்திரத்தின் தொங்கலைத் தொட்ட போது, கர்த்தர் அற்புதம் செய்தார். தேவபிள்ளைகளே உங்களுடைய பிரச்சனை தீருவதற்கு, நோய்கள் நீங்குவதற்கு, இதுவரை பல முயற்சிகளை செய்திருக்கலாம். இயேசுவை முயற்சி செய்தீர்களா?

நினைவிற்கு :- “ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். உடனே அந்த வேதனை நீங்கி, ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.”(மாற் 5:28,29)  

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]