[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
“ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படி, வலையைப் போடுகிறேன் என்றான்.” (லூக் 5:5)
பேதுரு, மீன் பிடிக்கிற குடும்பத்திலே பிறந்து, வளர்ந்திருந்தாலும், அந்த இரவு முழுவதும், வலைகளை வீசி மீன் பிடிக்க முயற்சித்தும், ஒரு மீனையும் கூட பிடிக்க முடியவில்லை. வஞ்சிரமுமில்லை, சீலாவுமில்லை. நெத்தலி மீன்கூட கிடைக்கவில்லை. களைப்போடு, சோர்வோடும், ஏமாற்றத்தோடும், வலைகளை அலசிக்கொண்டிருந்தார். மீன்களோடு வீடு திரும்பினால், அதை விற்று, குடும்பத்துக்கு வேண்டிய , உணவு பொருட்களை வாங்க முடியும். வெறுமையாயிருந்தால், அவருடைய குடும்பம், சாப்பாட்டுக்கு ஒன்றுமில்லாமலிருக்கும்.
அந்த துக்கமான வேளையில், இயேசு கிறிஸ்து, அந்த கடற்கரைக்கு வந்தார். அந்த நாட்களில், ஏறக்குறைய இரண்டாயிரம் படகுகள், அந்த கரையிலே நின்றன என்று சொல்லுகிறார்கள். ஆனாலும் இயேசு கிறிஸ்து, பேதுருவினுடைய படகிலே ஏறி, அதை கரையிலிருந்து சற்றே தள்ளும்படி, அவனைக் கேட்டுக்கொண்டார். அந்தப் படகில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார். (லூக் 5:3)
ஒருவேளை, பேதுரு உள்ளூர தவித்து, எரிச்சலடைந்திருப்பார். இரவெல்லாம் மீன் கிடைக்காமல் தோல்வியைக் கண்டேன். சரீரம் களைத்துபோயிருக்கிறது. இதிலே இயேசுவும், என் படகிலே ஏறிக்கொண்டு, கரையிலிருந்து தள்ளும்படி சொல்லுகிறார். இது என்ன பக்தி? எனக்கு ஒன்றும் கொடுக்காத இறைவனுக்கு, நான் ஏன் படகை, தள்ளிக் கொடுக்க வேண்டும்? ஏன் அவருடைய பிரசங்கம் முடிகிற வரையிலும், நான் வீட்டுக்குப் போகாமல், இங்கே காத்திருக்க வேண்டும்? இந்த பக்தியினால், நான் என்னத்தைக் கண்டேன்?
இயேசு பிரசங்கித்த பின்பு, பேதுருவின் தோல்வியை, ஜெயமாக்க விரும்பினார். தனக்காக, படகை அன்போடு கொடுத்த பேதுருவுக்கு, நன்மை செய்ய வேண்டுமென்று விரும்பினார். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய ஊழியத்திற்காகவும், அவருடைய நாமம் மகிமைப்படுவதற்காகவும், ஒரு சிறிய காரியத்தை செய்தாலும், கர்த்தர் அதை மனதிலே வைத்து, உங்களுடைய குடும்பத்துக்கு அற்புதம் செய்வார். அவர் ஒருவருக்கும் கடனாளியல்ல. “என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன், தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மாற் 9:41)
இயேசு கிறிஸ்து, பேதுருவைப் பார்த்து, ஆழத்திலே தள்ளிக் கொண்டு போய் மீன் பிடிக்கும்படி, உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். “அதற்கு சீமோன் ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரசாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை. ஆகிலும் உம்முடைய வார்த்தையின் படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக, மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.” (லூக் 5:6)
அந்த சூழ்நிலையிலே, பேதுரு சோர்ந்து போய், கர்த்தருடைய வார்த்தையை அலட்சியம்பண்ணியிருந்தால், மீன்களைப் பிடித்திருக்கமாட்டார். நீங்கள் உங்களை திடப்படுத்திக்கொண்டு, “கர்த்தரின் வார்த்தையின்படியே,” செய்ய தீர்மானியுங்கள். வானமும், பூமியும் ஒழிந்துபோனாலும், கர்த்தருடைய வார்த்தை ஒழிந்துபோகாது. “உம்முடைய வார்த்தையின் படியே, நடத்த என்னை ஒப்புக்கொடுக்கிறேன்” என்று சொல்லுங்கள். கர்த்தருடைய வார்த்தை, ஆவியும், ஜீவனுமானது. அவருடைய வார்த்தை, நிச்சயமாகவே நிறைவேறும்.
நினைவிற்கு – “விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்” (லூக் 1:45)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]