CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

உங்கள் ஜீவன் (வாழ்க்கை) எப்படிப்பட்டது?

உங்கள் ஜீவன் (வாழ்க்கை) எப்படிப்பட்டது?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

மத்தேயு 6:25-ம் வசனத்திலே இயேசு சொல்வது என்னவென்றால் ஆகையால் என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்திற்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும் உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளல்லவா? பிரியமானவர்களே உங்களுடைய சாப்பாடு முக்கியமானதல்ல, சரீரத்திற்குள்ளே இருக்கின்ற ஜீவன்தான் பிரதானமானது என்ற அறிவு தேவ பிள்ளைகளுடைய வாழ்க்கையிலே மிகத் தெளிவாக இருக்க வேண்டும். தேவன் நம்மை நேசித்தபடியினாலே நமக்குள்ளே தன்னுடைய ஜீவனை வைத்திருக்கிறார். இன்றைக்கு உன்னுடைய ஜீவன் எப்படிப்பட்டது என்று ஒருவன் என்னிடத்தில் கேட்டால் நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் தேவன் தமது நாசியின் சுவாசத்தினால் எனக்குள்ளே வைத்திருக்கிற ஜீவன் அவருடைய ஜீவன். ஆண்டவர் இயேசு கிறிஸ்து எனக்கு ஜீவனாயிருக்கிறார். அவர் எனக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமாயிருக்கிறார். ஒரு நாளிலே பிதாவாகிய தேவன் எனக்குள்ளே தந்த ஜீவன் மங்கி அது பிரகாசம் இழந்து மகிமை இழந்து காணப்பட்டது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலே வந்து தமது ஜீவனை எனக்குத் தந்து அவர் என்னை நிறைவான பரிபூரண ஜீவனுக்குள்ளே அதாவது நித்திய ஜீவனுக்குள்ளே நடத்துகிறார். அதனால் தான் பவுல் கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு என்று பிலிப்பியர் 1:21-ல் சொன்னார். கொலோசெயர் 3-ம் அதிகாரத்திலே “ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும் போது” என்று கூறியிருக்கிறார். கர்த்தர் யார்? இந்த உலகத்திலே பாக்கியவான் யார் தெரியுமா? யாருடைய வாழ்க்கையில் இயேசு ஜீவனாக மாறியிருக்கிறாரோ யார் இயேசுவை நித்திய ஜீவனாக எடுத்திருக்கிறார்களோ அவர்களே பாக்கியவான்கள். ஆகையால் நான் கவலைப்படப் போகிறதில்லை. அவருக்கு சித்தமான நேரத்தில் அவர் என்னைத் தம்மிடத்தில் அழைத்துக் கொள்வார். அதுவரையிலும்  நான் அவரோடு வாழ்வேன். அவரை மகிமைப்படுத்திக் கொண்டே வாழ்வேன். இந்த அனுபவம் யாருக்குள் வந்து விட்டதோ அவர்தான் பாக்கியவான்.

.

மனித வாழ்க்கை ஒரு வேடிக்கையான வாழ்க்கை. பலர் இந்த வாழ்க்கையை  மிக அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்க்க வேண்டிய அளவுக்கு மிஞ்சி வாழ்க்கையில் எதிர்பார்க்க கூடாது. அங்கேதான் ஏமாற்றம் உண்டாகிறது. ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு சிறிய பசுவை வாங்கி விட்டு சில பசுக்கள் பத்து லீட்டர் பால் கறக்கின்றன என்று சொல்லி ஒரு அண்டாவை தூக்கி கொண்டு பால் கறக்க போனால் அது எவ்வளவு தரும் அரை லீட்டர் பால் தந்தாலே பாக்கியம்தான். ஏன் பத்து லீட்டர் கறக்கவில்லை என்று கேட்பது வேடிக்கை அல்லவா?

.

நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு அளவுதான் உண்டு. இது தெரியாமல் சிலர் நான் அதைச் செய்யப் போகிறேன். இதைச் செய்யப் போகிறேன். அப்படி வாழப் போகிறேன் இப்படி வாழப் போகிறேன் என்று சொல்லி அவரைப் போல வாழ்ந்து இவரைப் போல வாழ்ந்து ஏமாற்றம் அடைந்து போகிறார்கள். ஒருநாளும் பிறரைப் போல் வாழாதீர்கள். கர்த்தர் வாழ வைப்பது போல வாழுங்கள். எனக்கு சில விஷயங்களை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாயிருக்கும்.

.

இரண்டு ஊழியக்கார சகோதரிகளை ஒரு சபையில் வைத்திருந்தோம். அங்கிருந்து ஒரு நபர் இந்த இரண்டு சகோதரிகளும் பெலவீனர்கள் இவர்கள் எப்படி ஊழியம் செய்வார்கள் என்றார். நான் அதற்கு என்ன நடத்த வேண்டும்? இரண்டு பேருக்கும் பெலவீனம். ஒருவர் சுகமாக இருக்கும் போது சமயல் செய்ய வேண்டும். சுகம் இருக்கும் போது ஜெபிக்க வேண்டும். சுகம் இருக்கும் போது வீடு சந்திக்க வேண்டும். அல்லது ஸ்தோத்திரம் பண்ணி கொண்டேயிருக்க வேண்டும். ஆண்டவர் சுகம் தந்தால் செய்ய வேண்டும். சுகமில்லையென்றால் சும்மா இருக்க வேண்டும் என்றேன். ஏனென்றால் மனுஷன் புரிந்து கொள்ளவே இல்லை. வாழ்க்கையில் திருப்தியாகவோ சந்தோஷமாகவோ இருக்கவே மாட்டான். இன்றைக்கு வற்றல்தான் கிடைத்திருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். இதை வைத்து சாப்பிட வேண்டும். மீன் இல்லாமல் எப்படி சாப்பிட முடியும் என்று நினைக்க கூடாது. அந்த கொஞ்ச கால வாழ்க்கையில் சொல்ல முடியாத சந்தோஷம் வரும். ஆண்டவரை துதித்துக் கொண்டு வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?

.

தொடரும்…

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]