ஒரு சின்ன குழந்தை ப…ட்….ட…ம்….பட்டம் என்று தமிழில் வாசித்துக்கொண்டிருக்கும் பொழுது சட்டென்று எனக்கு ஞாபகத்திற்கு வந்தது ஒரு கதை…
.
ஒரு துடிப்புள்ள பொடியன் பல வண்ணத்தில் பட்டங்கள் செய்து பறக்கவிட்டு மகிழ்வது அவனின் வாடிக்கை…. தன்னுடைய முழு உழைப்பையும் பயன்படுத்தி மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்ட ஒரு அருமையான பட்டம்… ஆகாயத்தில் பறக்கவிட்டுக் கொண்டிருந்தான் அது உயர உயர பறந்தது இன்னும் ஒரு ஆனந்தம்.
.
(அந்த பட்டத்திற்கும் ஒரு ஆசை…அந்த கயிறை மாத்திரம் அந்த தம்பி விட்டால் இன்னும் உயர பறக்கலாமே….(இதுதான் நப்பாசை)
.
எதிர்பாராத விதமாக அவனுடைய கையிலிருந்த கயிர் நழுவ..
பட்டம் மிக வேகமாக பறக்க ஆரம்பித்தது…பதட்டத்தோடு ஓட ஆரம்பித்தும் கண்ணிற்கு எட்டினது கைக்கு எட்டவில்லை..
.
அந்த சம்பவத்தை அவனுக்கு மறப்பது எழிதல்ல…மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பட்டம் அவன் மனதுக்குள் ஓலம் போட்டது… நாட்கள் சென்றது… அதையே அக்கம் பக்கத்திலெல்லாம் சுற்றி தேட ஆரம்பித்தான். ஒரு வழியாக கண்டுபிடித்தான் முள்ளுக்கிடையில் அந்த பட்டம்.
பட்டம் நினைத்தது யாராவது என்னை விடுவிக்க மாட்டார்களா? (யாரும் அதை எட்டிகூட பார்க்க வில்லை ஆனால் அந்த பட்டத்தை உருவாக்கினவன் உள்ளம் உடைந்தது)
.
ஓ!! அவன் அதை எடுப்பதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டான். கல்லை வைத்து எறிந்து பார்த்தான்.. கம்பால் தட்டி பார்த்தான்.. ம்..ம்…விழுந்த பாடில்லை…. அவனுக்கு அதை விட்டு போக விருப்பமில்லை.. மரம் ஏற துணிந்தான்.. மரமோ முள் மரம்.. மரத்தில் ஏற, ஏற முள் அவனை பதம் பார்த்தது… இரத்தம் சொட்ட சொட்ட அதை பொருட்படுத்தாது அதை எடுத்தான். முட்கள் அவனின் உடலெல்லாம் தைத்திருந்தது, இரத்தம் வடிந்து கொண்டிருந்தது அந்த வேதனையிலும்; அவனுடைய முகத்தில் ஒரு மகிழ்ச்சி … ஏனென்றால் தான் உண்டாக்கினதை மீட்டதில்தான்.
.
பட்டத்தின் சொந்தக்காரன் அதை உருவாக்கினவன்…..
பட்டத்தின் சொந்தக்காரன் இரத்தம் சிந்தி (கிரயம் செலத்தி) அதை மீட்டவன்
அருமையானவர்களே!.. நீங்களும் நானும் தேவனுடைய சமூகத்தைவிட்டு விலகினவர்கள்.. பாவம் என்ற முள்ளுக்குள் மாட்டி தவியா தவித்துக்கொண்டிருக்கும்போது மனிதர்களை தேடினோம்… நாம் கைகளால்; செய்தவைகளை கூட தேடினோம்… எல்லாரும் கைவிட் டார்கள்… ஆனால் அந்த இயேசு நம்மை தேடி வந்தார்.. நம்மை மீட்பதற்காக அவர் தன்னுடைய வேதனைகளை பொருட்படுத்தாமல் இரத்தம் சிந்தினார்.. எபி-9:28ல் கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப் பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். அப்படியே கொலோ-1:14 (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோ 6:23
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன் ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. லேவி17:11
.
கடைசியாக மீட்கப்பட்ட நீங்களும் நானும் அவருக்கு சொந்தம்… நாம் செய்ய வேண்டியது எல்லாமே.. தேவனை மகிமை படுத்த வேண்டும். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!