Today’s Reading: Genesis ஆதியாகமம் 31-32; Matthew மத்தேயு 9:18-38
And Jacob saw the countenance of Laban, and indeed it was not favorable toward him as before. Then the Lord said to Jacob, “Return to the land of your fathers and to your family, and I will be with you.” So Jacob sent and called Rachel and Leah to the field, to his flock, and said to them, “I see your father’s countenance, that it is not favorable toward me as before; but the God of my father has been with me. And you know that with all my might I have served your father. Yet your father has deceived me and changed my wages ten times, but God did not allow him to hurt me. Genesis 31:2-7
God is God and He can change the heart of people for your advantage. Jacob knew that despite all his efforts and hard work, Laban’s heart was changing towards him. Jacob described it as “not favorable toward him as before.” This would seem like an injustice to Jacob since he had worked for Laban who had deceived him and changed his wages unfairly 10 times. And through it all, Laban was completely blessed because of Jacob. However, for some strange reason, Laban’s heart changed towards Jacob and his work. With the unfair treatment and Laban’s change of heart, Jacob wanted to move on. Why? Because God wanted Jacob to leave and when leaving, God did not want Jacob to ever look back and regret his decision. So God allowed Laban to test Jacob unfairly and to cause Jacob to desire to leave.
Has this ever happened to you? It happens in all kinds of circumstances where people form close ties that are mutually beneficial. A person’s heart can change towards a friend when they fear they are losing something of value, but God can change a heart simply for His purposes, even when the innocent one is treated unfairly. It is hard being the one who is mistreated because the heart of a friend has changed against you. But God knows your heart as well as the heart of your former friend.
If you are finding yourself in this place, completely trust in the Lord. Even though you might not have ever left, He still may change circumstances and hearts to get you to change. Some of us pray for years to have our circumstances change. For others of us, we are so surprised when God intervenes and changes a heart. But if you really examine your prayers, the change should not catch you off guard. God is good like that. You can trust Him. He knows where you need to be and He will perform miracles to get you there.
.
2 லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான். 3 கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போளூ நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார். 4 அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து, 5 அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது, ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார். 6 என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 7 உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்ளூ ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை. (ஆதியாகமம் 312-7)
.
நம் தேவன் எவருடைய இருதயத்தையும் எம்முடைய நன்மைக்காக மாற்ற வல்லவராய் இருக்கிறார். யாக்கோபு எவ்வவளவு தான் உண்மையுள்ளவனாக தன்னுடைய மாமனாராகிய லாபானுக்கு வேலை செய்து வந்த போதிலும், அவனுடைய இருதயம் வேறுபட்டிருக்கக் கண்டு, அவன் லாபனுக்கு மிகவும் கடிணமாக வேலை செய்தும், காரணமில்லாமல் அவனுடைய சம்பளத்தை 10 தடவை மாற்றியதும், தனக்கு விளைவிக்கப்பட்டதோர் அநியாயம் என்று நினைக்கின்றான். இது எப்படியாக இருந்தாலும், யாக்கோபின் நிமித்தம் லாபான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக காணப்பட்டான். இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தினாலே, லாபானுடைய இருதயம் யாக்கோபைக் குறித்தும், அவன் செய்து வந்த வேலையைக் குறித்தும் வேறுபடத் தொடங்கியது. இதினிமித்தம் யாக்கோபு, லாபானிடத்திலிருந்து விலகிப்போக தீர்மாணிக்கிறான். இது தேவனுடைய திட்டமாகவே காணப்பட்டது. அவனுடைய தீர்மாணத்தில் உருதியாக இருப்பதற்காகவே, தேவன் இவ்வகையான சில சூழ்நிலைகளை அவனுடைய வாழ்க்கையில் அனுமதித்தார்.
.
இவ்வகையாக சூழ்நிலைகளுக்கூடாக நீங்களும் சென்றிருக்கிறீர்களா? இது நன்பர்களுக்கிடையிலும் இடம்பெறலாம். தன்னுடைய செல்வாக்கு அற்றுப்போகுமோ எனும் பயத்தினால், தன் நன்பனுக்கு சில வேதனையான காரியங்களை செய்யலாம். இருந்தாலும், தேவன் உங்களுடைய வாழ்க்கையில் வைத்திருக்கின்ற திட்டத்தை நிறைவேற்ற, இவ்வகையான சூழ்நிலைகளை உங்கள் வாழ்க்கையில்அனுமதிக்கலாம். உன்னுடைய நன்பனின் இருதயம் வேறுபட்டதாலே, காரணமே இல்லாமல் உங்களை பகைக்கலாம், அவதூரான வார்த்தைகள் பேசலாம், மனமுறிவை உண்டாக்கலாம், அநியாயங்கள் விளைவிக்கப்படலவாம். இந்நிலையில் காணப்படுவது மிகவும் கஷ்டம் தான். தேவன் உங்கள் இருதயத்தையும், வேறுபட்டிருக்கிற உங்கள் நன்பனின் இருதயத்தையும் அறிந்திருக்கிறார்.
.
நீங்கள் இன்று இந்நிலையில் காணப்பட்டால், கர்த்தரை முழுமையாக சார்ந்து நடந்துகொள்ள வேண்டும். ஒரு வேளை நீங்கள் இன்னும் உங்கள் இடத்திலிருந்து நகராவிட்டாலும், தேவன் இன்னும் சில சூழ்நிலைகளுக்கூடாய் நடத்திச் செல்வார். இன்னும் ஒரு சிலருடைய வாழ்க்கையில் இப்படியான காரியங்கள் சம்பவிக்கும் போது, மிகவும் கலங்கிப் போகலாம். எங்களில் பலர் ”கர்த்தாவே, என்னுடைய சூழ்நிலைகளை மாறச் செய்யும்” என்று ஜெபித்திருக்கலாம். இதுவே அதனுடைய பதிலாகவும் இருக்கலாம். சிலருடைய வாழ்க்கையில் தேவன் மாற்றங்களை கொண்டுவர, இவ்வகையான சூழ்நிலைகளுக்கூடாய் நடத்தும் போது, என்ன செய்வதென்றறியாமல் காணப்படலாம். நீங்கள் எங்கே இருக்க வேண்டும் என்பதை தேவன் நன்கு அறிவார். அவருடைய சித்தத்திற்கு முழுமையாக அர்ப்பணியுங்கள்.